அறிக்கைகள்

அறிக்கைகள் (2)

ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த அன்பு தோழர் சுதனின் துணைவியார் காலமானார். போராட்டங்களின் ஒன்றாய் பயணித்த அன்புக்குரியவர்ளின் பிரிவுகள்இ போரினால் பாதிக்கப்பட்டு நிழல் தேடும் மக்களுக்கு விரைந்து பணி செய்ய வேண்டிய அவசியத்தைஇ இதயத்தை துளைத்து உணர்த்துவதாக ஈரோஸ் தலைவர் ச.துசியந்தன் தொிவித்துள்ளார். அவர் துயர் பகிர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அwpக்கையின் முழுமையாக கீழே ... தோழர் சுதனின் துணைவியார் அமரர் மேரிகிறேசின் மறைவுக்கு துயர் பகிர்கின்றோம் எமது அன்புத் தோழர் சுதனின் துணைவியார் மேரிகிறேஸ் (வனிதா) அவர்கள் காலமாகிய செய்தி எம்மை பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தோழர் சுதன் ஈரோஸ் அமைப்பின் தலைவர் தோழர் பாலகுமார் அவர்களின் மெய்பாதுகாப்பாளராக பணி செய்தவர். ஈழப் போராட்டம் கண்ட மிக அற்புதமான தலைவரை பாதுகாத்த பெரும் பணியை விருப்புடனும் அர்பணிப்புடனும் செய்தவர் தோழர் சுதன். தோழர் சுதனின் போராட்ட வாழ்வில் ஓரூயிராக பயணம் செய்தவர் அவரின் துணைவியார். புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்ட போது அதிர்ச்சியுற்று மன உளைச்சலுக்குள்ளாகி சுகவீனமுற்ற அமரர் மேரிகிறேஸ் (வனிதா) அவர்கள் அதிலிருந்து மீளாமலேயே மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார். மக்களுக்காக சிந்தித்து, மக்களுக்காகவே வாழ்ந்த சக தோழர்களின் இழப்பு எமக்கு பெரும் வேதனையை தந்து மனதை நிலைக்குலைய செய்துவிடுகின்றது. மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்தவர்கள், அதை காணமலேயே எம்மை விட்டு பிரிவது எம்மை சற்றே சோர்வடைய செய்தாலும், அவர்கள் எமக்காக விட்டுச்சென்றுள்ள அர்த்தம் நிறைந்த நினைவுகள் இலட்சியம் நோக்கி பயணிக்க எமக்கு துணை செய்யும். போரின் பின் நிழல் தேடும் தமிழ் மக்களுக்கு குறிப்பாக போரின் கோரத்தாண்டவத்தால் இன்னலுற்ற வன்னி பிரதேசம் வாழ் மக்களுக்காக விரைந்து பணியாற்றி, ஆற்றுப்படுத்த வேண்டிய அவசியத்தை மேரிகிறேஸ் அவர்களின் மறைவு இதயத்தை துளைத்து உணர்த்தியுள்ளது. அன்பு மனைவியின் பிரிவால் துயருற்றிருக்கும் எமது அன்பு தோழர் சுதனின் கரங்களை இறுகப்பற்றி அவரின் துயரில் ஈரோஸ் - ஈழவர் சனநாயக முன்னணியாக நாமும் பங்கெடுப்பதோடு, இதயத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வண்ணம் ச.துசியந்தன் தலைவர் ஈரோஸ் - ஈழவர் சனநாயக முன்னணி
ஈழப்புரட்சி அமைப்பின் ஆரம்பக்கால தோழர் மாதவன் காலமானார். தோழர் மாதவனுக்கு ஈரோசின் தலைவர் ச.துஸ்யந்தன் அஞ்சலி செய்தி வெளியிட்டுள்ளார். அந்த செய்தி கீழ்வருமாரு. ஈழப்புரட்சி அமைப்பின் ஆரம்பக்கால செயல்பாட்டாளர்களில் ஒருவரான தோழர் மாதவனின் (கைலாஷ்) மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தோழர்களுக்கும் ஈழப் புரட்சி அமைப்பின் ஆழ்ந்த அனுதாபங்களை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றேன். ஈழவரின் விமோசனத்துக்காக எம்முடன் ஒன்றாய் களமாடிய எமது மூத்த தோழர்களை இயற்கை எம்மிடமிருந்து பிரித்துக் கொள்வது இதயத்தைப் பாறாங்கல்லை அழுத்தி நிற்கிறது. ஆனால் அவர்கள் மூட்டி விட்ட இலட்சிய வேட்கையை எம்மிடமிருந்து எந்த சக்தியாலும் பிரித்திட முடியாது. எமது நீண்ட நெடிய விடியலைத் தேடிய பயணத்தில் தோழர் மாதவன் எப்போதும் எம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருப்பார். ஈரோசின் கொள்கையை விடாப்பிடியுடன் பற்றி, தன் வாழ்வின் இனிமையான இளமைக் காலத்தை அர்த்தமுள்ளதாக வாழ்ந்த தோழர் மாதவன் கண்ட கனவுக்காகவும், கொண்ட இலட்சியத்துக்காகவும் விடாப்பிடியுடன் செயல்படுவதே அவருக்குச் செய்யக் கூடிய உயரிய மரியாதையாகும். தோழர் மாதவனின் மறைவினால் துயர் கொண்டிருப்பவர்களுடன் கரம் கோர்த்துக் கொள்வதோடு, அவரின் கனவையும் இலட்சியத்தையும் அடையத் தொடர்ந்து பயணிக்க உறுதி கொள்வோம். ஒன்றிணைந்து செயல்படுவோம்! நினைவுகளைச் செயல்களில் சுமப்போம் ! இவ்வண்ணம், ச. துஸ்யந்தன் தலைவர், ஈரோஸ் - ஈழப்புரட்சி அமைப்பு
Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction