கட்டுரைகள்

கட்டுரைகள் (16)

இந்த வருட இறுதியில் நடைப்பெறவிருக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது சனாதிபதியை தெரிவு செய்வதற்கான சனாதிபதி தேர்தல் தொடர்பாக ஈரோஸ் அமைப்புக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணி;க்கும் இடையில் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்று கடந்த செப்டம்பர் முதலாம் திகதி நடைப்பெற்றது. ஈரோஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் நகுலேஸ்வரன் தலைமையில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள ஈரோஸ் தலைமை பணிமனையில் இச்சந்திப்பு நடைபெற்றது. ஈரோஸ் அமைப்பின் சார்பில் பொதுச் செயலாளர் தலைமையில் எட்டு மாவட்ட குழு உறுப்பினர்கள், இளைஞரணி பொதுக்குழு உறுப்பினர்கள், மத்தியக் குழு உறுப்பினர்கள் என நூறு பேர் கலந்துக் கொண்டிருந்தார்கள். பொதுஜன முன்னணி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திக அனுரத்த, சுசந்த புஞ்சி நிலமே, முன்னாள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எச்.எம்.ரஞ்சித், முன்னாள் பிரதியமைச்சர் சரத் கீர்த்திரட்ன, பசில்; ராசபக்சவின் இணைப்பாளர் தேவபிரிய அபேசிங்க, பொதுஜன முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சுமதிபால ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தார்கள். ஏலவே, ஈரோசும் பொதுஜன முன்னணியும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள நிலையில், ஈரோஸ் தலைவர் துசியந்தன் அவர்கள், பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராசபக்சவிடம் விடுத்தக் கோரிக்கைக்க அமைய குறித்த கலந்துரையாடல் சந்திப்பு நடைபெற்றது. தென்னிலங்கை கட்சிகள் தமிழ் கட்சிகளின் பிரமுகர்களை சந்திப்பது வழக்கமான விடயம் எனினும், கொழும்பு அரசியலில் பிரதான இடத்தை வகிக்கும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தமிழர் தரப்பு கட்சியின் தலைமை பணிமனைக்கே வந்து கலந்துரையாடல் நடத்தியது மிக முக்கிய அம்சமாகும். இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய பொதுஜன முன்னணியின் பிரமுகர்கள் சந்திப்பு கூட்டத்தை தேர்தல் பிரச்சார கூட்டம் போல் நடத்த விளைந்தாலும், ஈரோஸ் அமைப்பாளர்கள் குறுக்கீடு செய்து, அரசியல் கலந்துரையாடலாக கொண்டு செல்ல வேண்டும் என முன்மொழிந்தார்கள். இதை ஏற்றுக் கொண்ட பொதுஜன முன்னணி பிரமுகர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், ஈரோஸ் அமைப்hளர்கள் முன்வைத்த பல கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் திறந்த மனதுடன் பதிலுரைத்திருந்தார்கள். இதன் போது, வலிந்து காணாமல் போனோர், அரசியல் கைதிகள் விவகாரம், சிங்கள குடியேற்றங்கள், காணி அபகரிப்பு, பலாத்காரமாக விகாரைகள் அமைத்தல், தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி நடவடிக்கைகள், அரச திணைக்களங்களில் பிரதேச மக்களுக்கு வேலை முன்னுரிமை இன்மை போன்ற சமகால பிரச்சினைகள் தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. மேலும், பல தசாப்தங்களாக நீண்டு செல்லும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பற்கான முயற்சிகள் குறித்து கதைக்கப்பட்டாலும், தீர்வைக் அடைவதற்கான சூழலை உருவாக்குவதில் அக்கறை செலுத்தபடவில்லை. எனவே, முதலில் தீர்வை தேடும் கட்டத்தை அடைவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் அரசியல் தெளிவுபடுத்தல்களும், நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என கலந்துரையாடலில் கருத்து வெளியிடப்பட்டது. இதற்கமைய வடகிழக்கு பகுதியில் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை பொதுஜன முன்னணி பிரமுகர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அதே போல் தென்னிலங்கையிலிருந்து பிரமுகர்கள் தமிழ் பிரதேசங்களில் ந்ல்லிணக்கம் குறித்து கதைத்தாலும், தமிழ் இளைஞர்கள் தென்பகுதிக்கு சென்று தமிழ் தரப்பின் போராட்டம், அரசியல் அபிலாசைகள் குறித்து தெளிவுபடுத்வோ, கலந்துரையாடவோ வாய்பிருக்கவில்லை. எனவே, அந்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வழி செய்ய வேண்டும் என ஈரோஸ் தரப்பால் கருத்து முன்வைக்கப்பட்டது. இதை ஏகமனதாக வரவேற்ற பொதுஜன முன்னணி பிரமுகர்கள் உடனடியாக இவ்வகையான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவும், அதற்கு தடை போட நினைப்பவர்களை எதிர்த்து தாம் நடத்தவதாகவும் உறுதி அளித்தார்கள். அத்துடன் விரைவில் இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும், மேலதிக விடயங்களை கலந்துரையாட தலைவர்கள் மட்ட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் தீர்மானிக்கபட்டது. இந்த வகையில், இனப்பிரச்சினை தொடர்பான இரு சமூக மட்;ட இளைஞர்களிடையே கலந்துரையாடலுக்கு ஆரம்ப புள்ளி இட்டிருக்கும் இந்த சந்திப்பானது முன்னேற்ற பாதைக்கு ஆரம்ப புள்ளி இட்டிருக்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது.
வியாழக்கிழமை, 14 November 2019 00:00

ஈரோசும் சனாதிபதி தேர்தலும்

Written by
1939 ஆகஸ்ட் 23 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஸ்டாலினும், யேர்மனியின் சர்வாதிகார தலைவர் ஹிட்லரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஒப்பந்தத்துக்கு மொலோடாவ் - ரிப்பன்ட்ராப் என்று பெயர். 'நான் உன்னை தாக்க மாட்டேன், நீயும் என்னைத் தாக்காதே" இது தான்ஒப்பந்தத்தின் சாரம்.

உலகமே இந்த ஒப்பந்தத்தை விநோத ஒப்பந்தம் என்றது. ஆம், இதை விநோதமான ஒப்பந்தம் என்று தனியாகச் சொல்ல தேவையில்லை. ஹிட்லரும் - ஸ்டாலினும் கீரியும் பாம்பும் போன்றவர்கள்.

சோவியத் ஒன்றியம் உலகின் முதலாவது உழைக்கும் வர்க்க மக்களின் அரசு. முதலாவது சோசலிச அரசு. அனைத்து மக்களையும், அனைத்து தேசிய இனங்களையும் சமமானவர்களாக கருதிய அரசு. யேர்மனியின் ஹிட்லரோ யேர்மானிய ஆரிய இனத்தவர்களே மனித இனத்தில் மேன்மையானவர்கள், அவர்களுக்கே உலகை ஆளும் தகுதியுண்டு எனப் பிரகடனம் செய்து,தமது பிரதான எதிரிகளாகக் கருதிய யூதர்களைப் படுகொலை செய்து, அயல்நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்த பாசிசவாதி. கம்யூனிஸ்ட்களை மனிதக் குலத்தின் எதிரிகள் எனப் பிரகடனம் செய்து அழித்தொழிக்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்தார் ஹிட்லர்.

முதலாம் உலகப் போரின் பின்னர் கம்யூனிச பேய் வரப்போகி றது என யேர்மானிய மக்களுக்குப் பூச்சாண்டி காட்டி தான் சர் வாதிகார ஆட்சியை நிலைநாட்டினார் ஹிட்லர். ஹிட்லரின் ஆட்சியில் யேர்மனி படைபலத்தைப் பெருக்கியது. அப்போது சோவியத் ஒன்றியமோ தவழும் குழந்தை. அங்கு சோசலிச புரட்சி நடந்து சிறிது காலம் தான். முன்னைய மன்னராட்சியில் சோவியத் ஒன்றியத்தின் ( அப்போது ரசியா) அரச நிதி முழு வதுமாக காலி செய்யப்பட்டிருந்தது. சிறிய செம்படை மாத்தி ரமே இருந்தது. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், சோசலி சத்தை நிலை நாட்டவும் கடுமையாக உழைத்துக் கொண்டிரு ந்தது சோவியத் ஒன்றியம். சோவியத் ஒன்றியத்தின் உழைப் பையும், வளர்ச்சியையும் கண்டு அயல் நாடுகள் பல சோசலிச பாதையைப் பின்பற்றத் தொடங்கின. இது சோசலிச எதிர்ப்பாளர் களுக்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது. சோசலிசம் வளர்கின்றது என்றால் முதலாளித்து வமும், ஏகாதிபத்தியமும் அழிகின்றது என்று தானே அர்த்தம்!

சோவா பேரரசரின் சர்வாதிகார ஆட்சியில் பெரும் படைபலத் தைக் கொண்டிருந்த ஜப்பானும், சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சியிலிருந்த இத்தாலியும் ஹிட்லருடன் கூட்டுச் சேர்ந்தன. போதாக் குறைக்கு பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளும் யேர்மனியுடன் இராணுவ உடன்படிக்கையைச் செய்து கொண்டிருந்தன.

1931 இல் ஜப்பான் நாடு ஆசியாவில் கம்யூனிசம் பரவுகிறது எனக் காரணம் சொல்லி மஞ்சுரியா நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டது. 1937 இல் சீனாவுக்குள் நுழைந்தது ஜப்பான்.

மறுபக்கம் இத்தாலி, கம்யூனிஸ்டுகளிடமிருந்து பாதுகாக்கி ன்றேன் எனக் கூறி எதியோப்பியாவையும், அபிசீனியாவையும் ஆக்கிரமித்துக் கொண்டது. இத்தாலியும், ஜேர்மானியும் கூட்டுச் சேர்ந்து ஸ்பெயின் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டன. 1937 ஆஸ்திரியா நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டார் ஹிட்லர்.

ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு நாடுகளை ஆக்கி ரமித்துக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் பொது எதிரி சோவியத் ஒன்றியம். உழைக்கும் மக்களின் தலைமையிலான ஆட்சியில் சோவியத் ஒன்றியம் பிரமாண்ட வளர்ச்சி அடை வதை உலக முதலாளிகள் வெறுப்புடன் பார்த்தார்கள். சோவியத் ஒன்றியத்தைச் சிதைக்கப் புலனாய்வுத் துறையை ஏவி மும்முரமாக வேலை செய்தார்கள். ஆனால், சோவியத் ஒன்றியத்துக்கோ, யுத்தத்துக்குச் செல்வது அப்போது தற் கொலைக்கு ஒப்பான செயல். பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தாலும் சோவியத்தின் செம்படையோ சிறியது. வளங்கள் குறைந்தது. இராணுவத்தை வளர்க்கச் செலவு செய்தால் வளர்ச்சியடைய முடியாது.

ஹிட்லர் எல்லா நாடுகளையும் குறிவைத்தார். அவருக்கு பிரதான சவால் சோவியத் ஒன்றியம். பிரிட்டன். பிரான்ஸ், அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளுக்குச் சோவியத் ஒன்றிய த்தை வீழ்த்தி சோசலிசத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இலக்கு. அவர்களுக்கு யார் குற்றி அரிசி ஆனாலும் பரவாயி ல்லை. ஹிட்லர் ஆபத்தானவர் தான், ஆனால் அவர் அடித்து சோவியத் ஒன்றியம் வீழ்ந்தாலும் சரி.

நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து ஆராய்ந்தார், சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஸ்டாலின். யுத்தம் வர போவது உறுதி. ஹிட்லரைத் தனியாகச் சமாளிக்க முடியாது. பிரிட்டன். பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியுமாக எனப் பார்த்தார். முடியவில்லை.

சோவியத் மீது யார் கைவைத்தாலும் பதிலடி கொடுக்க தயார் என்று அறிவித்தார். ஆனால், சோவியத்தின் உண்மையான படைபலம் அவருக்குத் தெரியும். முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை போரில் ஈடுபடுத்த முடியாது. இப்போதைக்கு தேவை உறுதியான முன்னேற்றத்தை அடைவது. படை பலத்தைக் கட்டியெழுப்புவது.

இந்த நிலையில் சோவியத் ஒன்றியம் என்ன செய்யவேண்டும்?

போரில் இறங்க முடியாது. முடிந்தால் ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஆம், ஸ்டாலின் அதைத் தான் செய்தார். சோவியத்தை எப்போது தாக்கலாம் என்று ஹிட்லரும், யேர்மனி தாக்கினால் எப்படி பதிலடி கொடுக்கலாம் என ஸ்டாலினும் மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனாலும், ஒப்பந்தத்தில் ஒரு உபயோகம் உண்டு. பத்தாண்டு காலத்துக்கு ஒப்பந்தம் நீடிக்கும். ஹிட்லரை நம்ப முடியாது தான். எப்போது வேண்டுமானாலும் ஹிட்லர் எனும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறலாம். ஆனால், ஒரே நம்பிக்கை உடன டியாக ஹிட்லர் சோவியத் மீது போர் தொடுக்க மாட்டார். கொஞ்சம் அவகாசம் கிடைக்கும், அதற்குள் இராணுவத்தை தயார்ப்படுத்தி விடலாம்.

சோவியத்துடன் உடன்படிக்கை செய்து கொண்ட ஹிட்லர், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுடன் ஏற்படுத்தியி ருந்த இணக்கப்பாடுகளை எல்லாம் கைவிட்டு, கரப்பான் பூச்சி களை நசுக்குவது போல் போலாந்து, டென்மார்க், நோர்வே, ஹாலாந்து, பெல்ஜியம், லக்சம்பேர்க் என நாடுகளை ஆக்கிரமி த்தார். இதெல்லாம் பரவாயில்லை அப்போதையை இராணுவ வல்லரசுகளில் ஒன்றாகவிருந்த பிரான்சு நாட்டையும் புறங்கை யால் மண்கவ்வ செய்து உலக நாடுகளைக் கிலிக் கொள்ள செய்தார் ஹிட்லர்.

இப்படியாக, 1941 ஆம் ஆண்டு, ஜீன் மாதம் 22 ம் திகதி அதி காலை 3 மணிக்கு, ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து சோவியத் ஒன்றியம் மீது போர் தொடுத்தார் ஹிட்லர்.

ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் சோவியத் செம்படை அசுர வளர்ச்சி கண்டது. முப்பதாயிரம் பீரங்கிகள், ஐம்பத்திரெண்டாயிரம் சிறிய ரக பீரங்கிகள். நவீன கவச வாகனங்கள், போர்விமானங்கள், நவீனத் துப்பாக்கிகள் என செம்படை பிரமாண்டமாக வளர்ச்சியடைந்தது.

ஆனால், ஹிட்லரின் படைகளுடன் ஒப்பிடும் போது பலவீன மானது தான். ஹிட்லரிடம் பெரும் நாசக்கார படை இருந்தது. சுண்டைக்காய் நாடு பின்லாந்தையே 6000 பீரங்கிகள், 2800 கனரக டாங்கிகள், 2000 போர்விமானங்கள் கொண்ட 16 இலட்சம் படைவீரர்களை அனுப்பி அடித்தார் ஹிட்லர்.

சோவியத் ஒன்றியத்துக்கு ஆரம்பத்தில் 30 இலட்சம் வீரர்களை அனுப்பினார். கூடவே, 7000 பீரங்கிகள். 3350 டாங்கிகள். 5000 போர்விமானங்கள். போதாக்குறைக்கு ருமானியா, பின்லாந்து, இத்தாலி, ஹங்கேரி, ஸ்பெயின், ஸ்லோவாக்கியா எனப் பூமி யின் கால்வாசி நாடுகளின் படைகளும் சோவியத்துக்கு எதிராக களத்தில் இறக்கப்பட்டன. நினைத்துப் பார்க்கவே முடியாத அச்சுறுத்தல்.

ஆனால், செம்படை எதிர்த்துப் போரிட்டது. 1945 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30 அன்று செம்படைகள் யேர்மனிக்குள் நுழைந்து, ஹிட்லர் பதுங்கியிருந்த பதுங்குகுழியைச் சுற்றி வளைத்தன. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

உலகமே, சோவியத்தை அண்ணாந்து பார்த்தது. சோவியத் செம்படை இதைச் செய்திருக்காவிட்டால் யேர்மானிய ஆரியர் கள் மட்டுமே உலகை ஆள வேண்டும். மற்றவர்கள் எல்லாம், அவர்களுக்குக் கீழானவர்கள் என உலகை ஆக்கிரமித்து அடிமைப்படுத்த நினைத்த ஹிட்லரின் கையில் உலகம் சிக்கியிருக்கும். சோவியத் ஒன்றியம் மாத்திரம் யேர்மனியிடம் வீழ்ந்திருந்தால், உலகத்தின் தலைவிதியே மாறியிருக்கும்.

ஆனால், இந்த வரலாற்றை மாற்றியது ஸ்hடாலின், ஹிட்லரு டன் செய்து கொண்ட ஒப்பந்தம் தான். இல்லை என்றால், ஹிட் லரின் நாசக்கார படைகள், சிறிய செம்படையைச் சிதைத்து சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்திருக்கும். ஸ்டாலின் சாதுரியமாகச் சிந்தித்து ஹிட்லருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தான் சோவியத் ஒன்றியம் தனது படை பலத்தை கட்டியெழுப்பச் சந்தர்ப்பத்தைக் கொடுத்தது.

இத்தனைக்கும் ஸ்டாலின் ஒரு முற்போக்குவாதி. சோசலிச வாதி. உழைக்கும் வர்க்க அரசின் தலைவர். தேசிய இனங் களை வரையறுப்பது தொடர்பாக இவர் வகுத்த கோட்பாடு களை முன்வைத்துத் தான் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஏன் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கும் இவரின் கோட்பாடுகள் தான் வழிகாட்டியாகின.

ஆனால், ஹிட்லரோ சர்வாதிகாரி. பிற்போக்குவாதி. பாசிசவாதி. இலட்சக்கணக்கான யூதர்களைத் தேடித் தேடி கொலை செய்தவர். தீவிர சோசலிச எதிர்ப்புவாதி. சோசலிஸ்டுகளையும் தேடித் தேடி அழித்தார்.

இன்று வரை உலகமே அருவருக்கும் ஹிட்லருடன் , புரட்சிகர தலைவர் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்து கொண்ட போது உலகெங்கும் வாழ்ந்த அறிவுஜீவிகள், முற்போக்காளர்கள், இடதுசாரிகள். சமூக ஜனநாயக வாதிகள் என பலரும் கடுமையாக விமர்சித்தார்கள்.

ஸ்டாலின் உழைக்கும் வர்க்க மக்களுக்கும். சோசலிசத்துக் கும் துரோகம் செய்து விட்டதாகவும், சமதர்மத்துக்கான போரா ட்டத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதாகவும். சோவியத் ஒன்றியத்தை அவமானப்படுத்தி விட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார்கள்.

அமெரிக்க இடதுசாரிகள் ஸ்டாலின் செய்த காரியத்தால் மக்க ளைச் சந்திக்க முடியாது, அவமானம் எனக் கூறி இடதுசாரிய த்தைக் கைவிட்டு, வலதுசாரிய அரசியலையம் ஏற்காத மத்திம நிலைப்பாட்டைப் பின்பற்றப் போவதாக அறிவித்தார்கள்.

ஆனால். ஈற்றில் ஸ்டாலின் செய்ததே சரி எனப் பலரும் ஏற்றுக் கொண்டார்கள். உணர்ச்சிவயப்பட்டு. வீம்புக்கு எதிர்த்து அழிவதை விட, எம்மை பலமிக்கவர்களாகக் கட்டியெழுப்பும் வாய்ப்பை தரும் சமரசம் சிறந்தது என்ற பாடத்தை கற்றுக் கொண்டாhகள்.

ஸ்டாலினின் ஒப்பந்தத்தை எல்லோரும் தார்மீக ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவுமே விமர்சித்தாhகள். ஆனால். ஸ்டாலின் செய்த ஒப்பந்தம் சோவியத் ஒன்றியத்தின், சோவியத் மக்க ளின் நலனில் அக்கறை கொண்டு அரசியல் ரீதியாகச் சிந்தித்து தீர்க்கதரிசனமாகச் செய்த ஒப்பந்தம்.

இது உலக வரலாறு ஆகும். போராடும் ஒடுக்கப்படும் மக்களு க்கு வரலாறே மிகச் சிறந்த வழிகாட்டியாகும்.

30 வருட ஆயுத போராட்டத்தில் பெரும் இழப்புக்களைச் சந்தி த்து, துவண்டு போயிருக்கும் ஈழச் சமூகத்துக்கும் இந்த வரலாறு இன்று சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வழி காட்டி நிற்கிறது.

2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைக்கு ஏற்ப ஆயுத போராட்டம் முறியடிக்கப்பட்டது. அமெரிக்காவு க்கும் அதன் சகபாடிகளுக்கும், சீனாவுடனான யார் பெரியவர் என நடக்கும் சண்டையில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். குறிப்பாகத் திருகோணமலை துறைமுகம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளம்.

எனவே, அவர்களுக்கு இலங்கைத் தீவில் இரண்டு எதிர் எதிர் தரப்புகள் இருக்கக் கூடாது. இலங்கை தீவில் ஒரே ஒரு அரசு தான் இருக்கவேண்டும். அதுவும் அவர்களின் கையாளாக இருக்க வேண்டும். எனவே, முதலில் பிராந்தியத்தில் வலுமிக்க கடற்படையை வைத்திருந்த, விடுதலைப்புலிகளை அழித்தார்கள். விடுதலைப் புலிகள் அழியும் வரை யுத்தம் நடந்திருக்கும் என்பது தான் உண்மை.

யுத்தத்தின் போது சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டிருந்த சர்வதேச யுத்த விதிமுறைகளையெல்லாம் மீறி சாரை சாரையாகப் பொதுமக்களைக் கொல்வதை எல்லாம், செய்மதிகளின் ஊடாக வெற்றிக் களிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அமெரிக்கச் சகபாடிகள். சொல்லப்போனால், அவர்களும் களத்தில் நின்று மக்கள் கொல்லப்படுவதை தூண்டினார்கள். இறுதி யுத்த காலத்தின் போது சீருடை அணிந்த சீக்கிய ஆர்மி மாமாக்களும், வெள்ளைக்கார ஆர்மி மாமாக்களும் வவுனியா பிரதேச உணவகங்களில் உணவருந்துமளவுக்கு பெருகிப் போயிருந்தார்கள்.

என்ன இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் கிராமிய நிலப் பிரபு வம்சங்களின் வாரிசுகளைப் பின்புலமாகக் கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியை நம்பத் தயாரில்லை. அவர்கள் மேற்கத்தைய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட, காலனி ஆட்சிக்கால வரபிரசாதங்களைப் பயன்படுத்தி தனவந்தர்களான நகர்ப்புற அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி போல் நம்பகமானவர்கள் இல்லை.

எனவே, சிறிலங்கா ஆட்சியாளர்கள் அமெரிக்க நலனுக்கு எதிராக ஏதும் செய்தால், அவர்களை வழிக்குக் கொண்டு வரும் உத்தியாகப் போர்க்குற்ற விசாரணையைப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே, போர்க்குற்றங்கள் நடந்ததை அமெரிக்க ஏகாதிபத்தியம் கண்டு கொள்ளவில்லை. உலகெங்கும் இதைத் தான் அவர்கள் செய்திருக்கின்றார்கள்.

போருக்குப் பின்வந்த காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைவர்கள், தம் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளை முன்வைத்து தமது தேசிய அபிலாசைகளை அடையலாம் என நினைத்தாhகள். தேர்தல்களில் எல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இந்த நம்பிக்கையைத் தான் விதைத்தார்கள். ஆனால், சீனா பக்கம் சார்ந்த மகிந்த ராசபக்ச அரசை வழிக்கு கொண்டு வரப் போர்க்குற்ற விசாரணைகளைத் தூக்கிப் பிடித்த சர்வதேச சமூகம், தங்களின் சிறந்த அடிவருடியான ரணில் விக்கரமசிங்கா ஆட்சிக்கு வந்தவுடன், போர்க்குற்ற விசாரணை கோப்புகளைக் கிடப்பில் போட்டுவிட்டது.

சர்வதேச சமூகத்தைப் பொருத்தவரை, அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அவர்களின் சகபாடிகளையும் பொருத்தவரை, இலங்கையில் இன்னுமொரு தேசிய விடுதலை போராட்டம் நடக்கக் கூடாது. இலங்கை தீவு முரண்பாடுகள் எதுவும் இல்லாது இறுக்கமாக ஒருமைப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான், அவர்களின் எதிரிகளால் , அதாவது சீனாவால் காலூன்ற முடியாது. எனவே, இதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தின் எஞ்சிய கூறுகளை அழித்து , இனப்பிரச்சினை மழுங்கடிக்க வேண்டும். இல்லையெனில், 1970 களில் இந்தியா, அவர்களுக்கு எதிராக இருந்த சிறிலங்கா அரசை வழிக்குக் கொண்டுவர தமிழ் விடுதலை போராட்ட இயக்கங்களை வளர்த்தது போல் சீனா அரசு போராட்ட இயக்கங்களை வளர்த்து விடக் கூடிய சந்தர்ப்பங்கள் கூட உண்டு.

ஆகவே, இலங்கையில் ஏகாதிபத்திய சார்பு ஆட்சியும் இருக்க வேண்டும், தமிழ் பேசும் மக்கள் முரண்பாடு இல்லாது அந்த ஆட்சியுடன் சங்கமமாகவும் வேண்டும். தமிழ் பேசும் சமூகத்தின் முதலாளித்துவ அதிகார வர்க்கம் ஐக்கிய தேசிய கட்சியுடன் நடத்தும் இணக்க அரசியலில் இந்த இரண்டு விடயங்களும் நிறைவேறும். கடந்து போன 5 வருடங்கள் அதற்கான ஆரம்பமும் ஆதாரமும் ஆகும்.

தமிழர் தரப்பும். ஐதேகவும் சந்தேகமில்லாமல் முதலாளித்துவ கட்சிகள். இவர்களின் இணக்க அரசியலில் தமிழ் சமூகத்தின் வெறும் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வு கிடைக்கும். இந்த நல்லாட்சியில் சிலருக்கு சொகுசு வீடும், வரப்பிரசாதமும் கிடைத்தது. ஆனால், ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்க தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கிடைத்தது? கேப்பாபுலவில் 800 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் பேசும் சமூகத்தைப் பிரித்தாள்வதும், அதிகார வர்க்கத்துக்கு மாத்திரம் சலுகை வழங்கி சமாளித்து விட்டு, அடித்தட்டு மக்களை அழிப்பதுமே ஐக்கிய தேசிய கட்சியினதும், முதலாளி வர்க்கத்தினதும் தந்திரம் என்பதைக் கடந்த காலம் முழுவதும் கண்டிருக்கின்றோம். எனவே, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணங்கி நடத்தும் அரசியல் என்பது தமிழ்ச் சமூகத்தை சவக்குழியில் தள்ளிவிடும் செயலே ஆகும்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்ச் சமூகத்தின் நிலைமைகளையும், இலங்கை அரசியலின் போக்கையும், சர்வதேச நிலைமைகளையும் கருத்திலெடுத்து அரசியல் ரீதியான மிகச் சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வெறும் உணர்ச்சிகளுக்கும், வீர பேச்சுகளுக்கும், மாயைகளுக்கும் அகப்பட்டு தார்மீக முடிவுகளை நாடக் கூடாது. திறந்த ஆய்வுகளுடன் தர்க்கீக கண்ணோட்டத்தில் அரசியல் முடிவுகளையே எடுக்க வேண்டும். அதுவே ஈரோசின் வழிமுறையும் ஆகும்.

குறிப்பாகச் சனாதிபதி தேர்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் விடயங்களில் நாம் சரியான முடிவுகளை எடுத்து செயல்படுவது கட்டாயமானதாகும்.

இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை பொதுசன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசத்துக்கும், ஈழவர் சனநாயக முன்னணி - ஈரோஸ் தலைவர் ச.துசியந்தன் அவர்களுக்கும் இடையில் சனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

2009 க்கு பின்னர் தமிழ் பேசும் மக்கள் பிரதேச ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்தாளப்படுதல் தீவிரமாகியுள்ளது. யுத்தத்தில் பெரும் பொருளாதார வீழ்ச்சியையும், சமூக கட்டுமான சீர்குலைவையும் சந்தித்த தமிழ் மக்கள் அதிலிருந்து மீள முடியாத வண்ணமே உள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய அம்சங்கள் எல்லாம், பௌத்த மதத்தின் பெயராலும், அபிவிருத்தியின் பெயராலும் சூறையாடப்படுகின்றது.

தமிழ் பேசும் மக்களின் ஒரு அங்கமாக இருந்த இசுலாமியர்கள் மத்தியில் மதவாதத்தையும், அரபு பண்பாட்டையும், முசுலிம் தேசியத்தையும் வளர்த்து விட்ட அரசு, இன்று அவர்களைத் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்துக்கு எதிராகப் பயன்படுத்துவதோடு, தமிழ் பேசும் மக்களை மேலாதிக்கம் செய்யும் வகையில், அரசு நிறுவனங்கள் உட்படப் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த வழி ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதற்குக் கைமாறாக முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவை பெற்றுக் கொள்கிறது.

சிறந்த எதிர்காலம் குறித்த நம்பிக்கை இழந்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றார்கள். ஏலவே யுத்தத்தால் பெருமளவில் இளைஞர்களை இழந்துள்ளோம். இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலங்களில் எமது சமூகத்தின் இருப்பே கேள்வி குறியாகிவிடும்.

வர்த்தகம், தொழிற்துறைகளில் தமிழர்களின் பங்கு தொடர்ந்து குறைந்து வருகின்றது. கல்வித் துறையிலும் வீழ்ச்சி போக்கே காணப்படுகின்றது. மலையக தமிழர்கள் வேலைக்கு ஏற்ற சம்பளம் கூட கிடைக்காமல் ஒடுக்கப்படுகின்றார்கள்.

இந்த அவலங்களைப் பல பக்கங்களில் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதன் சாரம் என்னவெனில், தமிழ்ச் சமூகத்தின் தேசிய இருப்பு தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதாகும். இந்த நிலையில் யுத்தத்தின் பின் பத்து வருடங்களில் தமிழ் சமூகம் அடைந்த முன்னேற்றங்களை விடச் சறுக்கல்களே அதிகம்.

எனவே, எல்லாவற்றுக்கும் முன்பாக, சமூக உரிமைகளுக்கு முன்பாக, பொலிஸ், காணி அதிகாரங்களுக்கு முன்பாக சமூகம் இருக்க வேண்டும். வாழ வேண்டும். சமூகமொன்றின் உயிர் நாடி பொருளாதாரமும், பண்பாடும் ஆகும்.

சிதைந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தை ஒருமைபடுத்தி அதன் இருப்பை உறுதி செய்ய வேண்டியது நாம் உடனடியாக செய்ய வேண்டியதாகும். சமூக கட்டுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே எமது இருப்பையும், உரிமை போராட்டத்தின் எதிர்காலத்தையும் தக்க வைக்க வழி செய்யும்.

எனில், ஆளும் தரப்புகளுடன் , அதுவும் எம்மால் வெற்றி பெற முடியாத சனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளருடன் உறுதியான ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடுவது அவசியமாகும். யார் சனாதிபதி ஆனாலும், தமிழ்ச் சமூகத்தை அழிக்கும் வேலையைத் தொடரத் தான் போகின்றார்கள்.

ஆனால், அவர்களின் உடனடி எதிரி எதிர் வேட்பாளரின் தரப்பாகத் தான் இருக்கும். எதிர்த்தரப்பை வீழ்த்த அவர்களுக்கு எமது ஒத்துழைப்பு தேவை. அடுத்தது ஏகாதிபத்தியத்தின் நெருக்குவாரங்களையும் சமாளிக்க வேண்டும். அதற்குத் தமிழ் பேசும் மக்களை அரவணைக்கவும் வேண்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது மக்களின் நலனுக்கும், சமூகத்தின் இருப்புக்கும் தேவையான ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவது மிகவும் புத்தி சாதுரியமான நகர்வாகும்.

இதன் மூலம் எமக்குக் கிடைக்கும் அவகாசத்தையும், அரச தலைவரின் ஒத்துழைப்பையும் பயன்படுத்தி எமது சமூகத்தை மீள்கட்டுமானம் செய்து பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அந்த வகையிலேயே ஈரோஸ் அமைப்பு சனாதிபதி வேட்பாளராகக் கூடியவர்களுடன் ஒப்பந்தமொன்றுக்கு வர முயற்சித்தது. ஐக்கிய தேசியக் கட்சியை பொருத்த வரை அவர்கள் எம்மை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வேலை செய்யப் பணித்தார்கள். எம்மால் 98 சத வீத மக்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது.

அதே போல் இலங்கை பொதுசன முன்னணி எமது பெரும்பாலான கோரிக்கைகளுக்கு இணங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட முன்வந்தது. அந்தவகையிலேயே மக்களுக்கு அவசியமான பல விடயங்களை வலியுறுத்தி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளோம். இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தக்க சமயத்தில் வெளிப்படுத்தப்படும்.

இந்த ஒப்பந்தம் சனாதிபதி தேர்தலுக்கானது மாத்திரமே ஆகும். பலர் கூறுவது போல் எல்லா தேர்தலுக்கும் ஆனது அல்ல.

இந்த ஒப்பந்தத்தைத் துரோக செயல் போல் சிலர் சொல்லி வருகின்றார்கள். முதலில் நாம் ஈழப்புரட்சி அமைப்பு என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றோம். நாம் எப்போதும் ஒட்டுமொத்த ஈழவர் தொடர்பாகவும் கரிசனை கொள்பவர்கள். வடக்கையும் சைவ , கத்தோலிக்க மேல் தட்டு மக்களை மாத்திரம் கவனத்தில் கொள்பவர்கள் அல்ல.

வடக்கு, கிழக்கு , மலையகம் வாழ் அனைத்து ஈழவர்களையும் அரவணைத்துக் கொண்டவர்கள் நாம். தம்மை அரபுமயமாக்கலில் இருந்தும், முஸ்லிம் மனப்பாங்கிலிருந்தும் விடுவித்து ஈழவராய் இணைந்த இசுலாமியர்களும் ஈழவர்களே. ஏனைய இசுலாமியர்கள் தற்சமயம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எமக்கு எதிராக இருந்தாலும், அவர்கள் ஒருநாள் ஈழவராய் எம்முடன் கரம் கோர்க்கப் போகின்றவர்களே.

எனவே, இலங்கை பொதுசன முன்னணியை சேர்ந்தவர்களுக்கு ஈழவர்கள் ஆதரவு கொடுக்கின்றமை இதுவொன்றும் புதிய செயலும் அல்ல.

ஏன், யுத்தத்துக்கு தலைமை தாங்கிய சரத்பொன்சேகாவுக்கும், யுத்தத்தின் இறுதி நாட்களில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தமைத்திரிபாலவுக்கும் தமிழ் மக்கள் பேராதரவு கொடுத்திருக்கின்றார்கள். இவை அரசியல் ரீதியான முடிவுகள்.

நாம் இன்று எடுத்திருக்கும் முடிவும் அரசியல் ரீதியானதே. உள்ளுர், பிராந்திய, சர்வதேச நிலைமைகளை கவனத்தில் எடுத்ததே ஆகும்.

மீண்டுமொரு முறை அமெரிக்கச் சார்பு ஐதேக வை வெற்றிபெறச் செய்தால், போர்க்குற்றம் தொடர்பான கதைகள் மீண்டும் கிடப்பில் போடப்படும்.

சீனசார்பு பொதுசன முன்னணியை வெற்றி பெற செய்தால், அமெரிக்க ஏகாதிபத்தியம் போர்க்குற்ற விடயத்தையும், இனப்பிரச்சினை விடயத்தையும் மீண்டும் கையிலெடுக்கும். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டி தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இது ஒரு பாரிய தீர்க்கமான விடயமாக முன்னரங்குக்கு வரும்.

எனவே, இந்த அழுத்தங்களைச் சமாளிக்க அரசு தமிழ் மக்களை வென்றெடுக்க வேண்டியதும், அரசியல் தீர்வை வழங்க வேண்டியதும், அவர்களின் அபிலாசைகளைத்; தீர்க்க வேண்டியதும் தவிர்க்க முடியாததாகும்.

எனவே, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கும், சமூகத்துக்கும் அவசியமான ஏராளமான விடயங்களை எம்மால் சாதிக்க முடியும்.

இந்த நிலைமைகளைக் கையிலெடுத்தே நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். ஸ்டாலின் , ஹிட்லருடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் உலக மக்களின் தலைவிதியையே மாற்றியது. அதற்கான காரணம்நி லைமைகளை ஆய்தறிந்து அரசியல் ரீதியாக முடிவெடுத்தமையே ஆகும்.

உலகம் இரண்டு வல்லரசுக்களுக்கிடையே அதிகார மோதலொன்றை எதிர்நோக்கி இருக்கும் சூழலில் நாம் அரசியல் ரீதியாகச் சிந்தித்துச் சரியான முடிவை எடுக்க வேண்டும். அதற்கு எமக்கு வரலாறு வழிகாட்டியுள்ளது.

எனவே, வெற்று உணர்ச்சிகளுக்கும், சோற்றுப்பருக்கையை கூட விளைவிக்காத தார்மீக கேள்விகளுக்குள்ளும் அமிழ்ந்து விடாமல், தர்க்க ரீதியாக ஆய்தறிந்து முடிவுக்கு வரவேண்டும்.

எமது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னாலிருக்கும் அரசியல் சாரத்தையும், தர்க்க ரீதியான தந்திரோபாயத்தையும் ஆய்ந்தறிந்து எம்முடன் கரம் கோர்க்க முன்வர வேண்டும்.

அசாத்தியங்களைச் சாதிப்பதும், அதற்காக அச்சமில்லாத முடிவுகளை எடுப்பதும் புரட்சியாளர்களின் பண்பாகும்.
சனிக்கிழமை, 26 January 2019 00:00

கட்டுப்பாடு

Written by
புரட்சிகர இலட்சியம் ஒன்றை நிறைவேற்றும் பொருட்டு புரட்சிகர இயக்கத்தில் செயலாற்றும் செயற்பாட்டாளர்கள், என்றும் அதற்கான பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனதும் செயற்பட வேண்டியது தலையாய கடமையாகும். அடிப்படையிலேயே மக்களை நேசித்து, அந்த மக்கள் படுகின்ற சிரமங்களில் இருந்து அவர்களை விடுவிக்கும் பொறுப்பை எமது தோள்களில் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் மறந்துவிடுதல் ஆகாது. ஆனால் மக்கள் விடுதலைக்காக செயற்படு கின்றோம் என செற்பட்ட இயக்கங்களில் செயலாற்றிய இன்றும் செயலாற்றும் பலர் தம்மை மக்களிலும் பார்க்க மேம்பட்டவர்களாக எண்ணும் போக்கிலே செயற்படுவதைக் காண்கிறோம். குறிப்பாக மக்களின் விடுதலையையே தம் தலையாய குறிக்கோள் என்பதை மகத்துவத்தை மறந்து 'மக்களின் எசமானர்கள் நாமே" என்ற விதமாகச் சிலர் செயற்படுவதை கண்டு, விடுதலையின் மீது உண்மையான ஆர்வமும் அக்கறையும் கொண்ட எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. யார் புரட்சிவாதி? ஒரு சாதாரண நபர் எந்த ஒரு நோக்கத்திற்காகவும் தம்மை விடுதலை இயக்கமொன்றுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்த பின்னர் தனது சொந்த நோக்கங்கள் சுய இச்சைகள் என்பவற்றை மறந்து இயக்கத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் என்பவற்றுடன் பூரணமாகத் தம்மை இணைத்துக் கொள்ளுதல் வேண்டும். புரட்சிகர இயக்கத்தின் கட்டுபாடுகளை தன் உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தல் வேண்டும். நிர்பந்தம் காரணமாவோ அல்லது வெளியிலிருந்து கிடைக்கும் தூண்டுதல் காரணமாகவோ வேண்டா வெறுப்புடன் செயல்படும் நபர்கள் இயக்கத்திற்கு எப்போதும் சுமையாக இருப்பர். எனவே தான் தன்னல மறுப்பு, நேர்மையான அர்பணிப்பு, தளராத மனவுறுதி, திடமான கொள்கைப் பிடிப்பு என்பவற்றைத் தனது குணாம்சங்களாகக் கொண்டு துணிவும், தன்னம்பிக்கையும் மிக்கவனாகத் திகழ்பவனே ஒரு சரியான புரட்சிவாதியாக மாறுதல் முடியும். இதில்லாமல் பொறுமை, தன்னிச்சையான செயற்பாடுகள், கீழ்ப்படியாமை என்பன போன்ற குணாம்சங் களைக் கொண்டு வெறும் ஆயுதப் பிரியர்களாகவும், ஆயுத முனையில் மக்களை அச்சுறுத்தும் மனப்பாங்கு கொண்ட வர்களாகவும் சிலர் செயற்படுவது வேதனைக்கு உரியது. மேலும், மக்களுக்கு மேலானவர்களாகத் தம்மை எண்ணி, மக்களின் எசமானர்கள் போல் நடக்கும் இத்தகையோரது செயற்பாடுகளே அராஜகத்தின் ஆரம்பம் எனலாம். இயக்க வேலைகளில் பொறுப்புணர்வு அற்று இருத்தல், இயக்கத்தின் பொருட்கள், ஆவணங்களைப் பராமரித்தலில் கவனக் குறைவாக நடந்து கொள்ளுதல், விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றாது இருத்தல், இயக்க நலன்களை விட சொந்த நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல் என்பன போன்ற செயற்பாடுகளே இயக்கத் தோழர்கள் மத்தியில் மனவெறுப்பையும், நம்பிக்கையீனத்தையும் வளர்க்கும் அம்சங்களாகும். இத்தகைய போக்குகளையும் சிந்தனை களையும் உதறித்தள்ளி, விமோசன பாதையில் சரியான திசைவழியில் முன்னேறிச் செல்லுவதே நல்ல புரட்சிவாதி களாக நம்மை மலரவைக்கும். இனி இவை ஒவ்வொன்றை யும் எடுத்துத் தனித்தனியாக இவற்றினால் ஏற்பட்டுவிடக் கூடிய பாதிப்புக்களை விளக்குவது அவசியப்படாது. தோழர் என்பவர்... தோழர் என்ற சொல் வெறுமனே நட்பைக் குறிக்கும் ஒரு சொல் அல்ல. நண்பர், சிநேகிதர், அயலவர், உறவினர் எனப்பல உறவின் முறைச் சொற்கள் எமது மொழியில் பயன்பாட்டில் உள்ள பொழுதிலும் ஒரு இலட்சியத்திற்காய் எம்மை அர்ப்ப ணித்துக் கொண்ட எம்மவரிடையே தோழர் என்னும் சொற்பதமே விரும்பி உபயோகிக்கப்படுகின்றது ஏனெனில், தோழமை என்பதனை அதன் உண்மையான அர்த்தத்தில் உணர்வு பூர்வமாய் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். 'தோழன் என்பவன் தோள் தருவான்" என்றும், 'உயிர்காப்பான் தோழன்' என்றும் நமது பழமொழிகளில் தோழன் என்பது சிறப்பிக்கபடுவது யாவரும் அறிந்ததே. உண்மையாகவே விசேட ஆபத்தான சந்தர்ப்பங்களிலும் கூட சக தோழனின் துயரத்தில் பங்கேற்கும் அதாவது தோள் கொடுக்கும் மனப்பக்குவமும் தோழனைக் காப்பாற்றத் துடிக்கும் திடம்கொண்ட நெஞ்சமும் உறுதியும் கொண்டவர்களே 'தோழர்கள்" என்ற சொல்லுக்கு இலக்கணமாவர். இதில்லாமல் வெறுமனே சகஜமாகப் பழகுவதாலோ, அல்லது இறந்த பின்னர் கண்ணீர் அஞ்சலி வெளியிட்டு, சுவர் நிறைய எழுதுவதாலோ தோழமை மலர்ந்து விடாது. அப்படிச் செய்வது தோழமையும் ஆகிவிடாது. இன்னும் சிலர் தோழமை என்பதனைத் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டோ என்னவோ தோழர்கள் விடுகின்ற தவறுகளை மூடி மறைக்க முற்படுபவோராக உள்ளனர். ஏனைய தோழர்கள் மத்தியில் தவறுகள் சுட்டிக் காட்டப்படுதலை ஒரு காட்டிக் கொடுப்பு போலக் கருதுகின்றனர். இது ஒரு தவறான மனோபாவம் ஆகும். ஒரு முறை சந்தர்ப்பத்தில் விடும் தவறு திருத்தப் படவில்லை என்பதே மீண்டும் மீண்டும் அதே தவறுகளை இழைக்கச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடும். எனவே தான் பொறுப்பான ஒவ்வொரு நடவடிக்கையிலும் வேலைகளைப் பகிர்ந்து கொள்பவனும், அவ்வேலைகளில் உண்மையான ஈடுபாட்டுடன் செயற்படுபவனுமே தோழன் என்னும் சொல்லுக்கு தகுதியானவனாகிறான். மேலும் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் ஆண் - பெண் பேதமின்றித் தோழர்கள் நெருங்கிப் பழகவேண்டிய சந்தர்ப்பங்கள் பல ஏற்படலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் பெண்களை பணி செய்து கிடப்பவர்களாக, போக பொருளாக கருதாது, குறிப்பாகப் பெண் தோழர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களா யும், அச்சமின்றி இயல்பாகப் பழகத் தூண்டுவோராகவும் ஆண் தோழர்கள் இருத்தல் அவசியம். இதை விடுத்து 'சோசலிசம்" என்று கூறிக்கொண்டு தவறாக நடப்பதோ அல்லது பெண்மையை அவமதிக்கும் நோக்குடன் செயலாற்றுவதோ, ஆணாதிக்க குணாம்சத்தின் வெளிப்பாடுகள் ஆகும். மிகுந்த எச்சரிக்கையுடன் இவ்விடயத்தில் நாம் விளங்கவில்லை என்றால் பலவிதமான தவறுகளுக்கும் வித்திட்டவர்களாகி விடுவோம். அதாவது சுருக்கமாகச் சொல்வதானால் இயக்கத் தோழர்களிடையே தோழமை என்கிற உணர்வு பூர்வமான உறவைத் தவிர வேறெந்த பிற்போக்கு உறவு அம்சங்கள் மேலோங்குவதனை அனுமதிப்பது என்பது இயக்க நலன்களுக்குப் புறம்பானதாகிவிடும். உணர்வு பூர்வமாக கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயற் படும் புரட்சிகர இயக்கத்தில் உட்பிரச்சினைகள் அதாவது தோழர்களிடையிலான முரண்பாடுகள் மோதல்களாக வெடிக்கும் சாத்தியம் இருக்க முடியாது. அதில்லாமல் வெறும் மிரட்டல்களினாலும், உத்தரவுகளாலும் ஒரு ஒழுங்க மைப்பான புரட்சிகர அணியை நிறுவிப்பாதுகாப்பது என்பது பலத்த சிரமாமானது. ஆகவே மீண்டும் கூறுவதானால் புரட்சிகர இயக்கமொன்றின் ஒவ்வொரு தோழனது பாத்திரமும் வரலாற்றில் மிக முக்கியமானது, அந்த முக்கியமான பாத்திரத்தை ஆற்றக்கூடியவர்களாக அதற்கான பரிபக்வகும் உடையவர்களாக ஒவ்வொருவரும் விளங்க வேண்டும். அப்படிப்பட்ட தோழர்களின் ஒன்று பட்டு செயற்பட்டினால் தான் ஈழத்தின் விடுதலை சாத்தியப்படும் - சமதர்ம சமூக அமைப்பு என்பது நிதர்சனம் ஆகும்.
சனிக்கிழமை, 12 January 2019 00:00

ஈரோசும் இசுலாமியரும்

Written by
ஈழவர்களை பிரதேச, மத வாரியாக பிளவுப் படுத்துவதை சாதித்திருக்கும் பேரினவாதிகள் மென்மேலும் எம்மை துண்டாட பிரயத்தனம் செய்து வருகின்றார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி களை முறியடித்து, ஒருமைப்பாட்டை கட்டி எழுப்புவதற்கு, விடயங்களை தத்துவாhத்த ரீதிரியலும், வரலாற்று ரீதியிலும் ஆய்ந்தறி ந்து சரியான கண்ணோட்டத்தை வகுத்து கொள்வது அவசியமானதாகும் அந்த வகையில் ஈழப்புரட்சி அமைப்பு ஈழப்பிர தேசமெங்கும் கால்பரப்பி செயல்பட்ட காலம் (1975 - 90) தொட்டே இசுலாமியர்கள் குறித்த தெளிவான பார்வையைக் கொண்டிருந்தது. வரலாற்றுக் காலம் முதல் இலங்கை வாழ் இசுலாமியர்கள் வர்த்தக சமுதாயம் என்று கருதப்பட்டு வந்த போதிலும், உண்மையில் மொத்த இசுலாமியர்களின் சனத்தொகையில் வர்த்தகர்கள் எனக் கூறக் கூடியவர்கள் 5 சதவீதம் கூட இல்லை எனலாம். இலங்கை அரசியலைப் பொறுத்த வரையில் பொதுவாக இசுலாமியர்கள் என்றவுடனே, பிரித்தானிய காலனிய காலகட்டத்தில் சேர் வாப்பிச்சை மரைக்காயர், சேர் முகம்மது மாக்கான். அல் ஹாஜ் டி.பி. ஜாயா, அல்ஹாஜ் அப்துல் கபூர், அல்லாஹ் ஹமீம் போன்றோரையும், சுதந்திர த்துக்குப் பிற்பட்ட காலகட்டத்தில் அவர்களின் வாரிசுகளான, சேர். ராசிக் பரீத், அல்ஹாஜ் மாக்கான் மரைக்கார், அல்லாஜ் கிச்சிலான், அல்லாஜ் எம்.எச். முகம்மது, அல்ஹாஜ் முகம்மது ஹமீம், ஜனாப் ஹலீ இஷ்ஹாக், அல்லாஹ் பளீல் அப்துல் கபூர், அல்லாஹ் அப்துல் கபூர் போன்றோரையும் மனதிற் கொண்டே நோக்கும் நிலை வழக்கிலிருந்தது. கொழும்பை மையமாக வைத்து இரத்தினக் கல், மேலும் இதுசார்ந்த முதலீட்டில் ஈடுப்பட்டி ருந்த இவர்களே இசுலாமிய மக்களது ஏக போக பிரதிநிதிகளாகத் தம்மைத் தாமே மாற்றிக் கொண்டார்கள். ஆரம்ப காலங்களில் இவர்களது ஆதிக்கம் பெருமளவு இருந்த போதும் 1950களின் பின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இத்தலைமையின் ஆதிக் கத்தில் தளர்வைக் கொடுத்தது. 1950களில் கல்லோயா குடியேற்றத் திட்டம், அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்களுக்கு இடமளித்த போது திரு கோணமலையிலும், அம்பாறையிலும் தமிழர சுக் கட்சி நிலப்பறிப்பு அபாயத்தை வெளிப் படுத்தத் தொடங்கியது. இக்காலங்களில் கல் முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திரு கோணமலைப் பகுதிகளில் இக்கட்சி செய்த பிரச்சாரத்தினால் இசுலாமியர்களும் தம் எதிர் காலத்தின் அபாயத்தை உணரத் தொடங் கினர். இதனால் கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இசுலாமியர்கள் அரசியல் பிரவேசம் செய்யத் தொடங்கினர். இவ்வாறு, பரந்து வாழ்ந்த இசுலாமியர்கள் தத்தமது பிரதேசங்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி அரசியல் தலைமையை உரு வாக்க விளைந்ததால் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் பிரதேச ரீதியான பிரச்சினை களை மையப்படுத்தியதால் கொழும்பு வர்த்த கத் தலைமை ஆட்டங் காணத் தொடங்கியது. இதன் காரணமாகவே இலங்கைவாழ் இசுலாமி யர்களின் ஏகத் தலைவர் என வர்ணிக்கப்பட்ட சேர். ராசிக் பரீத் 1960ல் பொத்துவில் தொகுதி யில் தோற்கடிக்கப்பட்டார். இதே போன்று அல்ஹாஜ் மாக்கான் மாக்கார் 1965ல் நடந்த பொதுத் தேர்தலில் மட்டகளப்பில் தோற்றார் இவ் வரலாற்றுப் பின்னணி இசுலாமியர்களின் பிரதேச ரீதியான அரசியல் விழிப்புணர்வையே உணர்த்தி நிற்கிறது. இதன் காரணமாகவே பின்னர் உருவாகிய குறிப்பாகக் கிழக்கு மாகா ணத்தலைமை தாம் வாழும் பிரதேசத்தின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினை களை மையப்படுத்த ஆரம்பித்தது. இவ்வடிப்ப டையில் அல்ஹாஜ் காரியப்பர். அல்லாஹாஜ் முகம்மது அலி, ஜனாப் அப்துல் மஜீத், ஜனாப் முஸ்தபா, ஜனாப் எம். அப்துல் மஜீத், ஜனாப் எம்.சி.அகமது போன்றோர் தந்தை செல்வ நாயகத்தின் தமிழரசு கட்சியில் சேர்ந்தே உருவானார்கள். ஆயினும், 1965ம் ஆண்டில் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்;டமைத்து ஆட்சி செய்ய விழைந்தது முதல் குடியேற்ற பாதிப்புகள் மீது அதிக அக்கறை காட்டாது நழுவத் தொடங்கி, இசுலாமியரின் ஆதரவை விரைவாக இழந்து போனது. தமிழரசுக் கட்சியின் இந்தப் பலவீனத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய ஆட்சி யாளர்கள் இசுலாமியரின் செயலிழந்திருந்த கொழும்புத் தலைமையை மீண்டும் தூக்கி நிறுத்தினார்கள் இவ்வரசியல் மந்த நிலை யில் புதிதாக உருவாகிய கிழக்கு மாகாண அரசியல் தலைமையும் கொழும்பை மையப் படுத்தி முதலீட்டில் ஈடுப்படத் தொடங்கியது. இருந்த போதிலும் இசுலாமியர்களை பொறு த்த வரையில் பிரச்சினைகளை எவ்வாறு பூசிமெழுகினாலும் உள்ளக முரண்பாடுகள் கொழுந்து விட்டெரிந்துக் கொண்டிருந்தன. 1970-77 வரை கலாநிதி அல்லாஹ் பதீயுதின் மஹ்முத் கல்வி அமைச்சராக இருந்த காலத் திலேயே நாடு முழுவதும் 19 தடவைகள் இசுலாமியர்கள் மீது சிங்கள காடையர்களும், இராணுவமும் ஏவிவிடப்பட்டு பலத்த உயிர், பொருட் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. புத்தளத்தில் பொலிஸ் அத்தியட்சகராக ஜனாப் அப்துல் கபூரும், அத்தொகுதி பாராளு மன்ற உறுப்பினராக அசன்ருத்துசும் இருக் கையிலேயே பொலிஸ் காடையர்கள் புத்த ளம் ஜூம்மாப் பள்ளி வாசலுக்குள் துப்பாக் கிப் பிரயோகம் செய்தன் மூலம் பலரைக் கொலை செய்தார்கள். அதே ஆண்டில் கொம்பனித் தெருவில் நடந்த ஒரு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர். இவ்வாறான பல சம்பவங்கள் காலி, மடவல, கம்பளை, கண்டி, போன்ற இடங்களில் நடந்தன. அடுக்கடுக்காய் நிகழ்ந்த அச்சம்பவங்கள் காரணமாக கடும் அதிருப்தியுற்ற இசுலாமியர் கள் தமது சந்தர்ப்பவாத பிரதிநிதிகள் மீது மீண்டும் வெறுப்புற்றிருந்த நேரத்தில், வட பகுதி இளைஞர்களின் விழிப்புணர்வு புதிய நம்பிக்கையை கொடுத்திருந்தது. 1970களில் உருவாகிக் கொண்டிருந்த ஆயுதப் போரட்ட த்தை மையப்படுத்திய ஈழத்தலைமையை உன்னிப்பாக அவதானித்து வந்த இசுலாமிய இளைஞர்கள் தமது தனித்துவத்தை பேணுவ துடன் உமைமைப்பாட்டுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதில் நாட்டங்கொள்ளலாயினர். ஆயுதப் போராட்டத்தை மையப்படுத்திய தமிழ் இளைஞர்கள் மார்க்சிச - லெனினிச வழியில் ஈழவர்களின் பிரச்சினைகளை அணுகியதுடன் மிதவாத முதலாளி வர்க்க யாழ்ப்பாணத் தலைமையைத் தூக்கி எறிந்ததோடு இசுலா மியர்களுக்கும் மலையக மக்களுக்கும், மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குமுள்ள பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாக அணுகத் தொடங்கினார்கள். மிதவாத தலைமை மக்களு க்கு இழைத்து வந்த பாரபட்சங்களையும் மற்றும் சாதிப் பிரச்சினை போன்றவற்றையும் அம்பலப்படுத்தியதோடு அவர்களின் இதர பிரச்சினைகளையும் ஆராயவிழைந்தனர். இந்த அடிப்படையில் அவ் இளைஞர்கள் மத, பிரதேச, வேறுபாடுகளுக்கு ஆட்படாது மலை யக தமிழர்களுக்கும், இசுலாமியருக்கும் ஏற் பட்ட பாதிப்புக்களை கவனத்தில் கொண்டு செயல்பட ஆரம்பித்தனர். 1972ல் சிவகுமாரன் உட்பட 10 இளைஞர்கள் மலையகம் சென்று நிலைமைகளை அறிந்து பிரச்சாரம் செய்ததும், கிழக்கு மாகாணத்தில் சேருவாவல, தீகவாபி, சம்மாந்துறை, கல்முனை, புத்தளம் போன்ற இடங்களில் இசுலாமியரது பிரச்சினைகளை கருத்தரங்குகள் வாயிலாக விளக்க முற் பட்டதும் இதன் ஆரம்பமே. இந்த நிகழ்வுகள் இசுலாமிய இளைஞர் மட்டத் தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொழும்பை மையமிட்ட இசுலாமிய பிரதிநிதிகளது வலிந்த தலைமையை மீண்டும் நிராகரிக்க வைத்தது. இவர்கள் தமது செயற்பாட்டுக்காக 'முசுலிம் ஐக்கிய முன்னணியை" உருவாக்கலாயினர். இம் முன்னணி, தமிழீழக் கோரிக்கையை முன் வைத்து தேர்தல் களத்துக்கு வந்த தமிழர் கூட்டணியுடன் ஒப்பந்தம் செய்து தேர்தலில் நின்றது. இத் தேர்தலில் வேட்பாளராக நின்ற வர்களில் ஜனாப் இலியாஸ் குறிப்பிடதக்கவர்.புத்தளத்தில் போட்டியிட்ட இவர் வெற்றி பெறா விட்டாலும் கொழும்புத் தலைமையை முன் நின்று நிராகரித்தவராவார். கொழும்பு வர்த்தகத் தலைமையானது இசு லாமியர்களை ஒடுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்குத் துணை போனதோடு சர்வதேச இசுலாமியர்களின் விரோதியும் சர்வதேச மனிதகுல பொது எதிரியும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஏவல் நாய்களுமான இசுரேலிய சியோனிசவாதிகளுக்கும் துணை போனமை யானது வேதனைக்குரியதாகும். இக்கொடும் செயலுக்கு தலைமை தாங்கியவர் அப்போது அமைச்சராகவிருந்த அல்லாஹ் எம்.எச்.முகம் மது அவர்களேயாவார். இவர் வெறிநாய்களு க்குத் துணை போனதும் அவர்களின் நலன் காப்பதிலும் நீண்டகால அனுபவத்தை கொண் டவர். 1960 களில் கொழும்பு மேயராக இருந்த போது இசுரேலுக்கு விஜயம் செய்து சர்வதேச இசுலாமியர்களை காட்டிக் கொடுத்து உலக மக்களின் அவமானச் சின்னமானவர். இத்தகைய பெருந்தகைதான் 1985ல் நடந்த ~இந்து இசுலாமிய மத கலவரத்தை| வெறிக் கொண்டு நாடாத்தியவரும் ஆவார். 1985-01-21 அன்று கொழும்பில் லங்கா ஒபராய் எனும் பெயரில் இயங்கிய ஹோட்டலில் அமைச்சர் முகமது, மொசாட்டின் முக்கிய புள்ளியான அவ்வறகாம் சோபி (யுஎயசாயஅ ஓழகi)யைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மேற்க்கூறிய கலவரத்திற்கு முன் கொள்ளு பிட்டியிலிருந்த அமெரிக்க தூதரகத்தின் முன்பாக இயங்கிய இசுரேல் நலன் காக்கும் பிரிவிற்கும் பல தடவைகள் சென்று ஆலோ சனை பெற்றிருந்ததும் குறிப்பிடதக்கது. இசுலாமிய ~பிரதிநிதிகள்| என்று சொல்லிக் கொண்டவர்கள் இவ்வாறு ஒரு புறமிருக்க இசு லாமிய இளைஞர்களைக் கொண்ட ~தீவிர வலதுசாரி| அமைப்பொன்றும் கொடுங்கோலன் ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்டது. தவ றாக வழிநடத்தப்பட்ட இசுலாமிய இளைஞர் களுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதங்களும் சிறிலங்கா இராணுவத்தால் வழங்கப்பட்டு 'ஜிகாத்" எனும் பெயரில் அமைப்பு வடிவம் கொடுக்கப்பட்டது. இவர்களே இந்துகளுக் கும், கத்தோலிக்கர்களுக்கும் எதிராக தூண்டி விடப்பட்டு கலவரத்தை நடத்துவதற்கு அர சால் பயன்படுத்தப்பட்டார்கள். இது தமிழ் பேசும் மக்களை தமக்குள் மோதவிட்டு பலவீனமா க்க ஆட்சியாளர்கள் செய்த சதி என்பது வெளி ப்படையானது. அதே வேளையில் ஆழ்ந்த அரசியல் கோட்பாடுகள் எதுவும் இன்றி வெற்று இராணுவ வேட்டுகளிலே ஆர்வம் கொண்டு குறை பிரசவமடைந்து, ~விடுதலை இயக்கம்| என்று கூறிக்கொண்ட வேறு சிலரும் இந்த கலவரங்களுக்கு காரணமாகயிருந்தனர். புத்தளம், காலி, கொழும்பு, கண்டி, மடவெல, திருகோணமலை, தீகவாபி, கொம்பணாச்சி போன்ற இடங்களில் தலைவிரித்தாடிய இன வெறிக்கும், பொருள் கொள்ளைக்கும் பதில் கூறமுடியாது கைவிரித்த கொழும்பு வர்த்தக தலைமை, இறுதியாக கொழும்பு வர்த்தகர்களின் பதவிகள் பறிக்கப்பட்ட போதும், கோட்டாக்களில் பாரபட்சம் காட்டப் பட்ட போதும், சபாநாயகராக இருந்த அல் ஹாஜ் பாக்கீர் மாக்கார் தூக்கியெறியப்பட்ட போதும் , இந்த முதலாளித்து தலைமையானது கையால் ஆகாத வாய் மூடி மௌனியாக இருந்ததை வரலாறு மன்னிக்கவே, மறக்கவோ செய்யாது. உண்மை என்னவென்றால் பரந்து பட்டு வாழும் சாதாரண தமிழ் மக்களை தமிழர் விடுதலைக் கூட்டணி;யும் அதன் சகாக்களும் பிரதிநிதித்து வப்படுத்தாதது போலவே தான், முஸ்லிம் தலைமை என கூறிக் கொண்டோரும் சாதாரண இசுலாமிய மக்களை பிரதிநிதித்துவப் படுத்தி இருக்கவில்லை. இசுலாமிய முற்போக்கு இயக்கங்களும் இதே அடிப்டையிலான ஆய்வுகளை வெளிப்படுத்தி யிருந்ததும் இங்கு குறிப்பிடதக்கது. அன்று வெளிவந்த 'அல்ஹ்ஸநாத்" எனும் இதழ் பின்வருமாரு அறைகூவல் விடுத்திருந்தது. '... தூர நோக்கோடு தமிழ்-முசுலீம் இளைஞர் கள் செயல்பட வேண்டும். ஏனெனில் இரண்டு சிறுபான்மை சமூகங்களின் வீழ்ச்சியானது, இரு சமூகத்தவரும் விரும்பாத, பலரும் வருந்ததக்க பல விளைவுகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து விட முடியும். ஏற்கனவே கொடும் மனம் படைத்தோர் அத்தகைய முயற்சிகளுக்கு வித்திட்டு செயற்பட்டு வரு வதை அல்ஹ்ஸநாத் மூலம் நாம் பல முறை எச்சரித்து வந்துள்ளோம். அப்படி ஒரு நிலை தோன்றுமானால் ஒரு தமிழனோ அல்லது முசுலிமோ எந்த பெரிய இலாபத்தையும் அடையப் போவதுமில்லை. மாறாக மாற்றா ரிடம் எதுவித நிபந்தனையுமின்றி மண்டியிட்டு வாழும் நிலையயை உருவாக்கி விட முடியும். அதன் பின் கவலைப்படுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை..." 'அல்ஹ்ஸநாத்" இதழ் அன்றே நிலைமை களை ஆராய்ந்து விடுத்திருந்த எச்சர்pக் கையை கருத்திலெடுக்காமையின் விளைவு களாகவே இன்றைய மத அடிப்படையிலான பிரிவினையும் ஒடுக்குமுறையும், ஆறாத வடுக்களையும் மாறாத காயங்களையும் விதைத்து வளர்ந்திருக்கிறது. இன்றும் ரவூப் ஹக்கீPம், ரிசாத் பதியுதின், எச்.எம். மரிக்கார், பைசர் முஸ்தபா, பௌசி என முகங்கள் மாறியிருந்தாலும் நிலைமை கள் எதுவும் மாறிடவில்லை. எனவே தொடர்ந் தும் விழுந்த குழியிலேயே விழுந்துக் கொண் டிருப்போமாயின் மீண்டும் எழுந்திட முடியாம லேயே போகலாம். வரலாற்றை வழிக்காட்டி யாக கொண்டு சரியான பாதையில் செல்வதே நல் எதிர்காலத்திற்கு உசிதமானது. எனினும், ஈழவர்களின் உமைப்பாட்டு போராட் டத்தில் இஸ்லாமியரின் பங்குபற்றியும், அது எந்தளவில் இசுலாமிய சமூகத்தின் பிரச்சி னைகளை தீர்த்து வைக்கும் என்பதிலும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஈழப் புரட்சி அமைப்பானது வர்க்க அடிப்படை யில் - வடக்கு, கிழக்கு, மலையகம், இஸ்லா மிய, கிறிஸ்தவ, இந்து - எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து அதாவது ஈழவர்கள் என்ற அடிப்படையில் ஒரு பாட்டாளி வர்க்க தலை மையை தோற்றுவிப்பதில் தெளிவான நிலைப் பாட்டைக் கொண்டிருக்கின்றது. இசுலாமியர் களை போராட்டதினூடாக தாபன மயப்படுத்தி அவர்களது அபிலாசைகளை, அவர்களது தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கும் ஈழவர் என்ற அடிப்படையில் உருவாகும். கூட்டுத் தலைமையை உருவாக்குவதே ஈரோசின் கண்ணோட்டமாகும். எனவே தான் ஈழவர்களை மக்கள் - மொழி - தேசம் என்ற அடிப்படையில் தட்டியெழுப்பி, உடைமைப்பாட்டுக்கான போராட்டத்தை, நாம் ஈழவர், நமது மொழி, நம் தேசம் ஈழம் என கட்டியெழுப்பி வருகின்றோம்.
2015 ஆம் ஆண்டு மலைநாட்டு கிராமங்கள் சமுதாய அபிவிருத்தி எனும் புதிய அமைச்சு உருவாக்கப்பட்ட போது, மலையகம் வாழ் தமிழர்களின் காணியுரிமை இல்லா நிலை ஒழிந்து, நிலத்தின் மீது அதிகாரம் கொண்ட சமூகமாக மேம்படும்; மலையகம் எங்கும் தமிழர் பண்பாடு மிளிரும்; தமிழ் கிராமங்கள் தலையெடுக்கும் எனும் கனவு கண்டோம். ஆனால் அது வெறும் கனவாகியது மட்டும் அல்லாது, இனிவரும் பல தசாப்தங்கள் மலையகத்தில் உண்மையான கிராமங்கள் உருவாவதைத் தடுக்கும் அபாயகரமான விசமத்தனமாகியிருக்கின்றது. இந்த அமைச்சு உருவாக்கப்பட்ட மறுதினமே பொதுபலசேனா எனும் பௌத்த அடிப்படை வாத அமைப்பு, சிங்கலே மகாஜன பெரமுன எனும் இயக்கத்தை உருவாக்கி மலைநாட்டுப் புதிய கிராமங்கள் அமைச்சு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனும் எழுத்து மூலக் கோரிக்கையை முன்வைத்திருந்தது. பௌத்தசங்க மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தில் ~மலையகத்தில் பாரம்பரியமாக சிங்கள மக்கள் வாழ்ந்த காணிகளிலிருந்து துரத்தி யடிக்கப்பட்டே பெருந்தோட்டங்கள் உருவா க்கப்பட்டன, சிங்களவர்கள் வாழ்ந்த கிராமங்கள் சிங்களவர்களுக்கே திருப்பி கொடுக்கப்பட வேண்டும்;, இங்கு தமிழர்கள் சிங்களவர்களை ஒடுக்குவதற்காக அழைத்து வரப்பட்டவர்கள். எனவே அவர்கள் மலையக த்தில் வாழ வேண்டுமென்றால் சிங்களவர்க ளாக மாற வேண்டும்| எனக் கூறப்பட்டிருந்தது. மனித சஞ்சாரமற்ற இயற்கையான காடு களாகவிருந்த மலையக பகுதியில் சிங்கள கிராமங்களே இருந்ததாக வழமை போல் பொய் வரலாறைக் கூறி மலையகத்தில் புதிய கிராமங்கள் அமைக்கப்படுவதை தடுக்க பேரினவாதிகள் காட்டிய அவசரமும் பதற்ற மும் மலையகத்தில் அவர்களுக்கு உடை மைப்பாட்டு ரீதியிலான உடைமை எதுவும் இல்லை என்பதையும், மலையகத்தில் கிராமங்கள் உருவாகினால் அவர்களின் ஆக்கிரமிப்பு திட்டம் எல்லாம் பாலாய் போகும் என்பதை புடம் போட்டுக் காட்டியது. ஆனால், மலைநாட்டு புதிய கிராம அமைச்சு எந்தவித தூரநோக்கும் இல்லாது சிறு பிள்ளைத்தனமாக அமைத்த கிராமங்களை பார்த்து, பேரினவாதிகளே அவசரபட்டு எதிர்த் ததை நினைத்து வெட்கப்பட்டுருப்பார்கள்.அவசர அவசரமாக உருவாக்கிய இயக்கத் தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள். அந்தள வில் தான் மலையகயத்தில் அமைக்கப்படும் கிராமங்களின் கட்டமைப்பு இருக்கின்றது. மலையகத்தில் தமிழ் தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் கிராமங்களானால் ஏற்படும் தாக்கங்களை பேரினவாதிகள் உணர்ந்த அளவு அரசியல்வாதிகள் உணரவில்லை. அதனால் தான், லயன்கள் எனப்படும் தொழிலாளர் குடியிருப்புக்களை, கொஞ்சம் தரமுயர்த்தி தனித்தனி வீடுளாக அமைத்துக் கொடுத்து, அதற்கு கிராமம் என பெயர் வைப்பதுடன் திருப்தி அடைந்து விடுகின்றார் கள். அவர்களை பொறுத்து வரையில் வாக்கு வங்கியை நிரப்ப இது போதும். அதைத் தாண்டிய சமூக நோக்கிலமைந்த பார்வையோ சிந்தனையோ இருப்பதில்லை. கிராமம் என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை பண்பாட்டு - பொருளாதார அலகாகும். மனித சமூகம் நிலையான இடத்தில் குடியிருப்புக் களை அமைத்து வாழ ஆரம்பித்த போது கிராமங்கள் உருவாகின. கிராமங்கள் பொரு ளாதார மையங்களாகிய போது நகரங்களா கின. சில கிராமங்கள் பின்வந்த காலத்தில் நாடாகின. ஆகவே, கிராமங்கள் என்பது வெறும் கட்டிடங்களும் பெயர்பலகையும் அல்ல. அவை ஒரு சமூகத்தின் உழைப்பின், கூட்டுவாழ்வின் விளைவும் களஞ்சியமும் ஆகும். இதற்கு மொழியும், கூட்டு வாழ்வின் செல்வாக்கு பரந்திருக்கும் நிலப்பரப்பும் ஆதாரமாகவும், பண்பாடு உயிர்நாதமாகவும் அமையும். மலையக தொழிலாளர்களை பொறுத்த வரையில், தமக்கான கிராமங்களை அமைத்துக்கொள்ள முடியாத வகையில், நிலத்தின் மீதான உரிமை மறுக்கப்பட்டு அடக்கப்பட்டருக்கின்றார்கள். மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்திகள் அமைச்சு மூலம் இந்த அடக்கு முறை விலங்கை உடைப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தது. மலையக தொழிலாளர்கள் அந்த தடையை உடைத்து சமுதாய அபிவிருத்தியை காண்பார்களாயின் மலையகத்தில் தமிழர் களின் பண்பாடும், மொழியும், தேசிய இருப்பும் அந்தஸ்த்தும் உடைமைப்பாட்டு ரீதியில் உறுதிபடுத்தப்படும். மலையக தமிழர்களை வந்தேறிகள் என்றும், வம்சாழியினர் என்றும் பேரினவாதம் முன்னெடுக்கும் காழ்ப்பு பிரச்சாரத்திற்கு முடிவுக்கட்டப்பட்டிருக்கும். இதை நன்கு தெரிந்ததால் தான் பொது பலசேனா எனும் பௌத்த பேரினவாத அமைப்பு, மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு உருவாக்பப்பட்டதுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. ஆனால் அந்த அமைச்சினதும், அமைச்சரின் அரசியல் கட்சியினதும் சிறுபிள்ளைத் தனமான வாக்கு பொறுக்கும் நோக்கிலான செயல்பாடுகள், அதற்கான எந்த தேவையையும் விட்டு வைத்திருக்கவில்லை சிறுபிள்ளை வேளாண்மை வீடு சேராது என்பது போல் சமூக அரசியல் பார்வையும் கொள்கையும் அற்றவர்களின் செயற்பாடுகள் மலையக மக்களின் இயற்கையான, தவிர்க்க முடியாத முன்னேற்றத்தையும் பல தசாப்தங் களுக்கு தடுத்து நிறுத்தும் தூர நோக்கற்ற ஒன்றாகவே இருக்கின்றது. ஏனெனில் தற்போது அமைக்கப்பட்டுவரும் நவீன லயன் குடியிருப்புகளில் வீடு பெற்றவர் கள் எவருக்கும் மீண்டும் வீடு கேட்க முடியாது. 99 வருட குத்தகைக்கு விடப் பட்டிருக்கும் பெருந்தோட்டங்களில் காணி உரிமை பெறவும் முடியாது. மலையக தோட்டத் தொழிலாளர்கள் ஆறு தலைமுறைகளை கண்டு விட்டார்கள். அதாவது குறைந்தது ஒவ்வொரு குடும்பமும் ஆறு குடும்பங்கள் ஆகியிருக்கின்றன. நாடற்றவர்காக ஆக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய காலத்திலிருந்து பார்த்தா லும், ஒவ்வொரு குடும்பமும் இன்று மூன்று குடும்பங்களாகியிருக்கின்றன. ஆனால் இந்த அதிகரிப்புக்கு ஏற்ப வீடுகள் கட்டிக்கொடுக் கப்படவே இல்லை என்று சொல்லக் கூடிய அளவுக்கு மிகமிகச் சொற்பமான புதிய வீடுகளே வெறும் கண்துடைப்பு போல் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், மலையக தொழிலாளர் குடும்பங்கள் தன் சுய முயற்சியினால் காணிகளை வாங்கி தோட்டபுறங்களுக்கு வெளியே சொந்த வீடுகளை அமைத்துக் கொண்டிருக்கின்றார் கள். இவ்வாறு சுயமுயற்சியில் தமக்கான வீடுகளை அமைத்துக்கொண்டவர்கள் குறிப் பிட்ட பகுதிகளில் செறிவாக குடியேறியதால் நகர் புறத்தை அண்டிய பல சிற்றூர்கள் உருவாகியிருக்கின்றது. அதே போல் கணிசமானோர், தான் வாழும் தோட்ட புறங்களிலே பலவந்தமாகவோ, தோட்ட நிர்வாகத்தின் அனுசரனையுடனோ தனி வீடுகளை கட்டிக் கொண்டு , குறிப்பிட்ட அளவான காணிகளில் மரக்கறி உற்பத்தியில் முழு நேரமாகவோ, பகுதி நேரமாகவோ ஈடுப்படுகிறார்கள். இந்த பொருளாதர நடவடிக்கை உருவாக்கியிருக்கும் உற்பத்தி உறவுகளும், அவர்களின் குடித்தொகை அமைவும் தோட்டகுடியிருப்புக்களை அண்டிய வகையில் கிராமங்களாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு வளர்ச்சிக் கண்டிருக்கும் ஒரு சில கிராமங்களையும் இனங்காணக் கூடியதாகவிருக்கின்றது. அதேபோல் அநேகமானோர் பெருந்தோட்டக் கம்பனிகளால் வழங்கப்பட்ட தொழிலாளர் குடியிருப்புகளை வசதிக்கேற்ப விஸ்தரித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனினும் மலையக தொழிலாளர்களிடையே அதிகரித்த சனத்தொகை, புதிதாக குடும்பங் களாகியோரின் எண்ணிக்கையானது, மனித வாழ்வின் அத்தியாவசிய தேவையான வசிப் பிடங்களை புதிதாக அமைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நெருக்கடி தோட்ட தொழிலாளர்களின் படித்த சமூக அக்கறைக் கொண்ட தலைமுறையினரிடையே காணி உரிமை தொடர்பான வேட்கையை எழுச்சிகொள்ள செய்தபோது, தொழிலாளர்களுக்கான புதிய வீட்டுத்தொகுதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டிய நிலைக்கு பெருந்தோட்டத்துறை யும், அரசும் தள்ளப்பட்டது. அதனால் தான் ஆமை வேகத்தில் தொழிலா ளர்கள் தற்போது வாழும் லயன் எனப்படும் இருநூறு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப் பட்ட தொழிலாளர் குடியிருப்பு விடுதிகளின் மாதிரியை விட சற்றே முன்னேற்றகரமான இரட்டை மாடி குடியிருப்புக்களையும், பின்னர் தனித்தனியான சிறிய குடியிருப்புக்களையும் அமைத்துக் கொடுக்க ஆரம்பித்தனர். இரட்டை மாடிக்குடியிருப்பானது அதே நவீன லயன்களாகவே இருந்தன. அதற்கு எதிராக குரல்கள் உயர்ந்த போதே தனிவீடுகள் கட்டிக்கொடுப்பது ஆரம்பமாகியது. எனினும் இவை அடிப்படையில் லயன் குடியிருப்பு சூழலில் இருந்து வேறுப்பட்டதாக அமைய வில்லை. இதற்கு இப்பத்தியில் எடுத்து காட்டிய மலைய தமிழர்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறை நிகழ்ச்சி திட்டமே காரணமாகும். லயன்குடியிருப்பு மாதிரியிலேயே மலையக தமிழர்களின் அடிப்படை பிரிவினரான தொழிலாளர்களை வைத்திருந்தால் அவர் களால் சமூக அபிவிருத்தியை காண் முடியாது என்பது திண்ணம். மேலும், காணியுரிமை கோரிக்கையை மழுங்கடிக்கும் சூழ்ச்சியாக புதிய வீடுகளை அமைத்துக்கொடுகிறார்கள். தற்போதைய அரசாங்கமும், அதில் அங்கம் வகிக்கும் தமிழ் பிரதிநிதிகளும் லயன் மாதியான வீட்டுத்தொகுதிகளை அமைத்து கிராமம் எனும் பெயரிடும் வேடிக்கையை செய்து வருகின்றார்கள். இப்படியாக அவர் களின் வாக்கு வேட்டைக்காக பேரினவாதத் தின் சூழ்ச்சி திட்டத்திற்கு துணை போகின்றமையானது, இனிவரும் பல தசாப் தங்களுக்கு மலையக தொழிலாளர்கள் வீடு, காணி குறித்து குரல் எழுப்ப முடியாத நிலைக்கே அழைத்து செல்லும். எப்படி லயன் குடியிருப்புக்களில் 200 வருடங்கள் தொழிலாளர்கள் ஒடுக்கப் பட்டார்களோ, அதே போல் இன்னுமொரு 200 வருடங்களுக்கு அமைக்கப்பட்டு வரும் நவீன லயன்களில் ஒடுக்கப்படும் நிலை உருவாகும். இந்த அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் ஒன்றும் செய்யாவிட்டால் கூட தொழிலாளர் களாகவே சுயமுயற்சியில் தமக்கான கிராமங்களை உருவாக்கி கொள்வார்கள். அதை சான்று கூறும் வகையில் புதிய தலை முறையின் கல்வி வளர்ச்சியும் சிந்தனை வளர்ச்சியும் அமைந்திருக்கின்றது. எனவே அரசியல்வாதிகள் தொழிலாளர்க ளின் காணி உரிமைக்கும், உண்மையான சமுதாய அபிவிருத்திக்கும் தடையாக இருக்கும் விடயங்களை களைய செயல் படல் வேண்டும், மக்களின் சமூக அபிவிருத்திக்காக திட்டமிட்டு செயல்பட வேண்டும். மாறாக தம் வாக்கு பொறுக்கும் மலின அரசியலுக்காக சமூகமொன்றின் வளர்ச்சியை அடமானம் வைக்க கூடாது.
அரண்மனை சதிகள் மூலம் ஆட்சி கவிழ்க்கப் பட்டதை இதுவரையிலும் மன்னர் கால கதைக ளாகவே கேள்விபட்டிருந்தோம். ஆனால், இன்று அதை நேரடியாக கண்டுக்கொண்டிருக்கின் றோம். எனினும் எம்மால் மன்னர் காலம் போல் தூரநின்று வேடிக்கை பார்க்க முடியாது. ஏனெனில் அரசாங்கத்தை உருவாக்குவதில் எமது பங்கும் இருக்கின்றது. எமது பிரதிநிதி களால் ஸ்தாபிக்கப்பட்டதே அரசாங்கம். மைத்திரியின் ஆட்சி மாற்ற சூழ்ச்சி இலங்கை அரசியல் யாப்பு சட்டங்களின் படி மூன்று வழி முறைகளில் ஆட்சி மாற்றம் நிகழலாம். முதலாவது பொது தேர்தல் மூலம், மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றத்தை உருவாக்க முடியும். இரண்டாவதாக பாராளு மன்ற உறுப்பினர்கள் கட்சி தாவி புதிய பெரும் பான்மைக் கொண்ட அரசாங்கத்தை அமைக்க முடியும். அடுத்ததாக பாராளுமன்ற கூட்ட தொடரின் ஆரம்ப நாளில் சனாதிபதியின் சிம்மாசன உரை வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கம் கலையும். இதை விட ஆட்சியாளர்கள் மக்களுக்கு எதிராக செயல்படும் போது பொதுமக்களின் வெகுசன எழுச்சி மூலம் ஆட்சியாளர்கள் துரத் தியடிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால், சனாதிபதி மைத்திரிபால நிகழ்த்திய ஆட்சி மாற்றம் இதில் எந்த வகையிலும் உள்ளடங்கவில்லை. சொந்த விருப்பு வெறுப்புகளால் உந்தப்பட்டு பின்கதவால் மகிந்த ராசபக்சபை பிரதமராக நியமித்த பின்னர் அதை நியாயப்படுத்த வெவ் வேறு காரணங்களை கூறுகின்றார். எனவே இது தெட்ட தெளிவாக அரசியல் சூழ்ச்சியாகும். சூழ்ச்சிக்கான மைத்திரியின் நியாயப்படுத்தல்களும் முரண்களும் சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறியதால் தேசிய அரசாங்கம் கலைந் ததாகவும், எனவே புதிய அரசாங்கத்தை அமைக்கும் வகையில் புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் சனாதிபதி என்ற வகை யில் நியமித்ததாக மைத்திரிபால காரணம் கூறியிருந்தார். கூடவே, ரணில் விக்ரமசிங்கா தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி னார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். பாராளுமன்றில் அதிக ஆசனங்களை வென்றெ டுத்த அரசியல் கட்சி அல்லது, சுயட்சைக்குழு ஏனைய அரசியல் கட்சிகள் அல்லது சுயட் சைக் குழுக்களுடன் இணைந்து அமைக்கும் அரசாங்கமே தேசிய அரசாங்கம் என அரசியல் யாப்பு சொல்கின்றது. இவ்வாறு தேசிய அரசாங் கம் அமைக்கும் போது அமைச்சரவை அமைச் சர்களின் எண்ணிக்கை 30 ஆக இருத்தல் வேண்டும் என்ற வரையறையை தளர்த்திக் கொள்ள முடியும். எனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய மாத்திரத்தில் தேசிய அரசாங்கம் கலையாது. ஏனெனில் தேசிய அரசாங்கமானது பாராளுமன்றில் அதிக ஆசனங்களை வென்ற ஐக்கிய தேசிய முன் னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரு உறுப்பினர்) ஆகிய கட்சிகளுடன் இணைந்து அமைத்த தாகும். எனவே ஒரு தரப்பு வெளியேறிய மாத்திரத்தில் தேசிய அரசாங்கம் கலையாது. அத்துடன் தேசிய அரசாங்கம் கலைந்தால் அமைச்சரவை கலையும் என்ற விடயமும் யாப்பில் இல்லை. எனில் சனாதிபதிக்கு நேர்மையான நோக்கம் இருந்திருப்பின் அமைச்சரவையின் எண்ணிக்கையை 30 ஆக சீர்செய்து, ஏனைய விடயங்களை பாராளு மன்றத்திடம் ஒப்படைத்திருக்க முடியும். அரசியல் சூழ்ச்சியின் பின்னணி கடந்த உள்ளுராட்சி தேர்தல் தொடக்கம் ரணில் விக்ரமசிங்காவிற்கும், மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இடையில் மோதல் நிலை உருவானது. இரு தரப்பும் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டார்கள். தேர்தல் முடிந்த பின்னர் இருவரும் இணைந்து வேலை செய்ய முடியாத நிலை உருவானது. மைத்திரி, ரணில் ஆகியோரின் வாழ்க்கை முறையும், கலாசார பின்னனியும் அவர்களி டையே வேறுப்பாடுகளையும், நீண்டக்காலம் சேர்ந்தியங்க முடியாத முரண்பாடுகளையும் தோற்றுவிக்கும் காரணியாக இருந்தது. எனவே மைத்திரிபாலா வெறொருவரை பிரமராக நியமிக்குமாரு ஐக்கிய தேசிய கட்சி தரப்பினரிடம் கோரியிருந்தார், எனினும், ஐதேகவினர் அதை மறுத்திருந்தார்கள். மைத்திரி தனிப்பட்ட முறையில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாசா, கருஜெயசூர்யா போன்றவர்களுடன் பிரதமர் பதவியை ஏற்க்குமாரு பேச்சுவார்த்தை நடத்திய போதும் கூட அவரின் முயற்சிக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. இந்த முயற்சி கைக்கூடாத நிலையில் ரணில் விக்ரமசிங்காவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை ஒன்றை பாராளுமன்றில் பிரேரிக்க பின் புலமாக நின்று செயல்பட்டிருந்தார் மைத் திரி. எனினும் அவரின் சொந்தக் கட்சி உறுப்பி னர்களே வாக்களிப்பை புறக்கணிந்திருந்த நிலையில் பிரேரனை தோல்வியடைந்தது. இந்நிலையிலேயே மகிந்தவை பிரதமராக்கும் சூழ்ச்சியில் இறங்கினார் மைத்திரி. மைத்திரியின் சூழ்ச்சியின் நோக்கம் என்ன? மைத்திரி சனாதிபதியாக தெரிவாகிய போது தானே கடைசி நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி என்றும், அடுத்த சனாதிபதி தேர்த லில் போட்டியிடப் போவதில்லை எனவும், பதவிக்காலம் முடிந்தவுடன் பிறந்த ஊரான பொலநறுவைக்கு சென்று விவசாயத்தில் ஈடுப்படப் போவதாகவும் கூறியிருந்தார். ஆனால், ஆசை யாரைத் தான் விட்டுவைத்தது? அதுவும் சனாதிபதியின் அதிகாரங்களை அனு பவித்த யாரும் அதை அத்தனை இலகுவாக விட்டுச் சென்றதும் இல்லை. மைத்திரியும் விதிவிலக்கல்ல. கடந்த ஒரு வருடக்காலமாக மைத்திரிபால அடுத்த சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக்களை தேடி வந்தார். அவர் ஐதேக உடன் அடுத்த சனாதிபதி தேர்த லிலும் பொது வேட்பாளராக போட்டியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஐதேகவினர் அடுத்த தேர்தலில் ஐதேக வேட் பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முடிவு செய்து விட்டார்கள். எனவே, மகிந்த தரப்புடன் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டிருந்தார். மகிந்த தரப்பு இதற்கு பச்சைக்கொடி காட்டியது. மைத்திரியை பொறுத்தவரையில் தீர்க்கமான அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்கும் வகையிலான அமைப்பு பலம் எதுவுமில்லை. பெரும்பாலும் ஐதேகவினரை நம்பியிருக்க நேர்ந்தது. அவர்கள் கைவிட்ட நிலையில், மகிந்த தரப்பிடம் தஞ்சமடைந்தார். மைத்திரி - மகிந்த இணையும் புள்ளி எது? 2015 ஆம் சனாதிபதி தேர்தல் முடிவுகளை குருனாகல் தொடங்வத்த எனும் இடத்தில் ஒரு தென்னம்தோப்பில் ஒளிந்திருந்தே கேட்ட தாகவும், ஒருவேளை தேர்தலில் தோல்வி யடைந்திருந்தால் தானும் மனைவி பிள்ளை களும் கொலை செய்யப்பட்டிருப்போம் என மைத்திரிபால பல சந்தர்ப்பங்களில் கூறியி ருந்தார். அவர் கொலையாளியாக சொல்வது மகிந்தவையே. மைத்திரியின் தேர்தல் பிரச்சா ரம் முழுவதும் மகி;ந்தவின் ஊழல்களையும், ஏதேச்சதிகாரத்தையுமே பிரச்சாரப் படுத்துவ தாகவே அமைந்தது. அதே போல் மகிந்த தரப்பும் மைத்திரிக்கு எதிராகவே கடந்த மூன்றரை ஆண்டுகளும் செயல்பட்டிருந்தார் கள். இருந்த போதும் இவர்கள் இருவரும் இணைய முடிந்தது எப்படி? இங்கு குறிப்பிட்டது போல் மைத்திரிபாலவை, அடுத்த சனாதிபதி தேர்தலில் போட்;டியிடும் நோக்கம் உந்தியது. மகிந்தவை பொறுத்தவரையில் அடுத்து வரும் சில மாதங்களில் அவரின் குடும்பத்தினர், ஆதர வாளர்கள் மீதான ஊழல்கள், மோசடிகள் தொடர்பான விசாரணைகள் சிறப்பு நீதிமன்றில் விசாரணைக்கு வருகின்றன. இந்த வழக்குகள் விசாரணைகள் சிறப்பு நீதிமன்த்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு, எதிர்வரும் பொது தேர் தலுக்கு முன்னதாக வழக்கு விசாரணைகள் முடிக்கப்பட்டு, கைது செய்யப்படும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தன. இதன் மூலம் சுதந்திர கட்சியும், மகி;ந்த தரப்பும் பலவீனப்பட்டு, தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை க்கு தள்ளப்படும். எனவே, மகிந்த தரப்பு தாம் இழைத்த பாரிய குற்றங்களிலிருந்து தப்பி ப்பதற்கு அரச அதிகாரம் அவசியமாகியது. ஆகவே தான், சுயநலங்களுக்காகவும் அதி கார பசிக்காகவும் மகிந்தவும், மைத்திரியும் அரசியல் நாகரீகங்களையும், விழுமியங்களை யும் தூக்கியெறிந்து விட்டு இணைந்தார்கள். புதிதாக பதவியேற்ற சட்டம், ஒழுங்கு தொடர் பான அமைச்சர் தனது முதல் வேலை ஊழல் களை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தை இரத்து செய்வதே என அறிவித்தார். இந்த குற்றங்களை விசாரித்து வந்த பொலிஸ் அதிகாரி மகிந்த பிரதமராகிய முதல் வாரத்தி லேயே இடமாற்றம் செய்யப்பட்டார். இச்சம்வங்கள் மகிந்த பதவிக்கு ஆசைப் பட்ட காரணத்தை வெளிப்படுயிருக்கின்றன. அம்பலமாகிய பிரதிநிதித்துவ சனநாயகம் அரசியல் யாப்பின் படி சனாதிபதி, பாராளு மன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெறக் கூடியவராக கருதுபவரை பிரமராக நியமிக்க முடியும். எனில் பாராளுமன்றில் கட்சி அடிப் படையில் முறையே ஐதேக-106, ஐமசுகூ-95, தமிழ் கூட்டமைப்பு-16, ஜேவிபி-6, முஸ்லிம் காங்கிரஸ்-1, ஈபிபிடி-1 என உறுப்பினர்களை கொண்டிருக்கையில், மகிந்தவே பெரும்பா ன்மை ஆதரவை பெறகூடியவர் என மைத்திரி கருதியமை சர்ச்சைக்குரியதாகும் எதிர்தரப்பு உறுப்பினர்களை பணம் கொடு த்தோ, சலுகைகளை வழங்கியோ மகிந்த தரப்பில் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை யிலேயே மைத்திரிபாலா, மகிந்தவை பிரமரா க்கினார். மக்கள் பிரதிநிதிகள் விலை பேசப்பட் டதை பலரும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். ஐதேக கட்சி உறுப்பினர்கள் விலை பேசப் பட்ட தொலைப்பேசி உரையாடல்களும் வெளி யாகி இருந்தன. மக்கள் பிரதிநிதிகள் காலை, மாலை என கட்சி மாறிய கூத்தையும் மக்கள் கண்கூடாகவே கண்டிருந்தார்கள். கட்சி தாவுவதற்கு மாத்திரமன்றி கட்சி தாவாமல் இருப்பதற்கும் நம் மக்கள் பிரதிநிதிகள் பணம் வாங்கியிருக்கின்றார்கள். இங்கு ஒரு தரப்பு விலைபோனால், மறுதரப்பு விலை கொடுத்து வாங்குகிறது. இரண்டுமே மக்கள் தெரிவை, ஆணையை துச்சமாக மதிக்கும் செயலாகும். ஜேவிபியை தவிர ஏனைய அனைவரும் இதில் பங்குதாரர் ஆகியிருக்கின்றார்கள். இவ்வாறு கட்சி தாவல்களுக்கும்,பன்னாட்டு நிறுவனங் களிடமிருந்தும் பணம் வாங்குபவர்கள் ஒரு போதும் மக்கள் நலன்களுக்காகவும், மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செய ற்பட போவதில்லை என்பது வெளிப்படை. மக்கள் வாக்குகளை பெற்றுக் கொண்டு மக் களை சுரண்டும் தரப்புக்கு சார்பாக செயல்படு கின்றார்கள். வாக்களித்த மக்களால் இவர்க ளுக்கு அடுத்த தேர்தல் வரை கடிவாளம் போட முடியாத நிலையை எம்மை பிரதிநிதித்துவபடு த்த தேர்தல் மூலம் நபர்களை தெரிவுசெய்யும் பிரதிநிதித்துவ முறை தோற்றுவித்திருக்கின் றது. இந்நிலைமையானது மக்கள் நேரடியாக அரச நிர்வாகத்தில் பங்கு பெறும் மக்கள் சன நாயகத்தை அடிப்படையாக கொண்ட முறை குறித்து சிந்திக்க நிர்பந்தித்துள்ளது. இது குறித்த உரையாடல் தற்போது உலகளவில் இடம்பெறுவதும் குறிப்பிடதக்கது.
நூறு புத்தகங்கள் கற்றுத்தராத விடயங்களை காலமும். சூழ்நிலைகளும் கற்றுத் தந்துவிடும். கடந்த ஒரு மாத காலமாக சனாதிபதி மைத்திரிபாலாவுக்கும், பதவி நீக்கப்பட்ட பிரதமர் விக்ரமசிங்காவுக்கும் இடையில் நடந்து வரும் அதிகாரப்போட்டி, இலங்கையின் பாட்டாளிவர்க்கத்துக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் ஆட்சி செய்தவர்களின் வங்குரோத்து நிலையையும், மக்கள் விரோத போக்கையும் மிகத் துல்லியமாக அம்பலப்படுத்தியிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகள் வானரங்கள் கொப்புக்கு கொப்பு தாவுவது போல் கட்சி தாவி வருகின்றார்கள். கறுப்பு பணம் மூலம் எம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆடு, மாடுகள் போல் விலை பேசப்பட்டு வருகின்றார்கள், விலை போய் வருகின்றார்கள். கட்சி தாவுவதற்கு மாத்திரமின்றி, கட்சி தாவாமல் இருப்பதற்கும் லஞ்சம் பெறுகின்றார்கள். கட்சி தாவ முடியாத தர்மசங்கடமான நிலையிலிருப்பவர்களை தவிர ஏனைய தமிழ் பேசும் நாடளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆடு, மாடு பேரத்தில் ருசி கண்டிருக்கின்றார்கள். முன்னதாக 118 நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு பேர்பேச்சுவல் எனும் மத்திய வங்கி பிணை முறி ஊழலுடன் தொடர்பு பட்ட பன்னாட்டு கம்பனி பணம் கொடுத்தமை, வரவு செலவு திட்ட பிரேரனைக்கு ஆதரவளிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி பணம் கொடுத்தமை, மகிந்த ராசபக்சவிற்கு சீனா 111 கோடிக்கும் அதிகமான பணம் கொடுத்தமை, 2015 ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க அரசு பணம் செலவிட்டமை அம்பலத்திற்கு வந்திருந்தது. இதை விட அநேகமாக அனைத்து பாராளு மன்ற உறுப்பினர்களும் பெரும் கம்பனிகள், வர்த்தகர்களிடமிருந்து பணம் வாங்கிய தகவல்கள் கசிந்திருந்தன. இவ்வாறு இவர்கள் பணம் வாங்குவது, பணம் கொடுப்பவர்கள் இந்நாட்டின் வளங்களையும், மக்களையும் சுரண்டி கொள்ளையடிப்பதற் காக தான் என்பதை கண்டுபிடிக்க பெரும் ஆய்வும் அறிவும் தேவையில்லை. எனில், இவர்கள் மக்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டாலும், வேலை செய்வது மக்களுக்காக அல்ல. மக்களை சுரண்டுபவர் களுக்காகவே என்பதை புரட்சிகர சக்திகள் ஆரம்பம் முதல் கூறி வந்திருந்தாலும், தற் போதைய அதிகார போட்டி அரசியல் நெருக்கடியில் மக்கள் இதனை தெளிவாக புரிந்துக் கொண்டிருக்கின்றார்கள். எனில், இதுவரை நடந்தது என்ன? இனி நாம் செய்ய வேண்டியது என்ன? சுதந்திரம் கிடைத்தது முதல் இரு பெரும் கட்சி களும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். சில சமயங்களில் எதிர்க்கட்சியிலிருந்து உறுப்பினர்களை இணைத்துக் கொண்டும் ஆட்சி செய்திருந்தார்கள். கடந்த மாதம் வரை இரண்டு கட்சிகளும் கூட்டாக ஆட்சி செய்தி ருந்தார்கள். ஆனால், இவர்களால் மக்களின் பொதுப்படையான அபிலாசைகள் கூட நிறை வேறாது என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்க ப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனால் ஏற் பட்ட சலிப்பு தன்மையினால் மக்கள் இறந்த காலத்தில் விடைதேடும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றார்கள். அதனால் தான் சிங்கள மக்கள் மகிந்த, கோட்டாபாய பக்கம் செல்வ தையும், தமிழ் பேசும் மக்கள் சரியான மாற்று இல்லாது தனிநபர்கள் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதையும் காணமுடிகின்றது. ஆனால், எப்போதும் எதிர்காலம் நோக்கி விடைதேடும் சமூகங்களினாலேயே முன்னோ க்கி செல்ல முடியும். இறந்த காலத்தில் விடை தேடுவோமாயின் பின்னோக்கியே இழுத்து செல்லப்படுவோம். எனவே நாம் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின், இதுவரை ஆட்சிபீட மேறிய கட்சிகள் ஏன் மக்களின் அபிலாசை களை நிறைவேற்ற முனையவில்லை என் பதை இனம் காணல் வேண்டும். இவர்கள் உண்மையில் எந்த தரப்பின் நன்மைகளு க்காக செயற்படுகின்றார்கள் என்பதையும் இனம் காணல் வேண்டும். 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐ.தே.க சிங்கள வர்த்தக பிரிவினரை முதன்மையாக கொண்ட தமிழ், முஸ்லிம் வர்த்தக தரப்பினரின் கூட்டில் உருவானதாகும். பிரித்தானிய காலனி ஆட்சிக்கால வரப்பிரசாதங்களை பயன்படுத்தி வர்த்தகர்களாக ஆதிக்கம் பெற்ற இவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் சார்ந்த பொருளாதார கொள்கையை கடைப்பிடிப்பவர்கள். 1951ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை சுதந்திர கட்சி சுதந்திரம் அடைந்த காலத்தில் எஞ்சியிருந்த நிலப்பிரபுக்களையும் அவர்கள் சார்ந்த வர்த்தக தரப்பினரையும் பிரதானமாக கொண்ட தேசியவாதிகளின் கூட்டாகும். சுதேச வைத்தியர்கள், பௌத்த தேரர்கள், ஆசிரியர் கள், விவசாயிகள், தொழிலாளார்களே தமது பிரதான ஐந்து சக்திகள் என பிரகடனபடுத் தியதின் மூலம் சுதந்திர கட்சியின் கடும் போக்கு தேசிய தன்மையை விளங்கி கொள்ள முடியும். இதன் காரணமாக அமெரிக்க சார் ஏகாதிபத்தியத்துடன் கலாசார ரீதியாக முரண் பட்டதுடன், அமெரிக்காவின் பிரதான எதிரி யாகவிருந்த சோவியத் ஒன்றியத்துடனும், சோசலிச நாடுகளுடனும் நெருக்கமான நட்பு பாராட்டியது. தமிழ் பேசும் மக்களை பொறுத்த வரையில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் மிகச் சிறிய வேறுப்பாடே இருந்தது. சிறிலங்கா சுதந்திர கட்சி ஒட்டுமொத்த தமிழர் தரப்பையும் அடக்கி தனி சிங்கள தேசிய மேலாதிக்கத்தை நிலைநாட்டியது, ஐக்கிய தேசிய கட்சி தமிழர் தரப்பின் வர்த்தக பிரிவினருடன் கூட்டு சேர்ந்து தமிழ் பேசும் மக்களை ஒடுக்கி சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றது. 1972ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் ஆட்சியை கைப்பற்றிய சுதந்திரக்கட்சி அது பிரித்தானியாவின் முடிய ரசாக இருந்த நாட்டை குடியரசாக மாற்றி இலங்கை சனநாயக சோசலிச குடியரசு என பெயர் மாற்றம் செய்தார். சோசலிச நாடுகளை பின்பற்றிய கொள்கையை கடைபிடித்த சிறிமாவோ, காப்புறுதி, வங்கி என பிரதான பொருளாதார துறைகளை தேசியமயப்படுத்தி னார். இவரது காலத்திலேயே கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சொந்தமாக இருந்த பாடசாலைகள் அரசுடைமையாக்கப்பட்டன. லேக்அவுஸ் பத்திரிக்கை நிறுவனம், போக்கு வரத்து சபை என்பனவும் இவரால் அரசுடை மையாக்கப்பட்ட சில தனியார் நிறுவனங்க ளாகும். இவர் பிரதமரானதும் ஐதேகவுக்கு சார்பானது என சந்தேகம் கொண்டு புலனாய்வு பிரிவை கலைத்திருந்தார். இந்த சந்தர்ப்ப த்தை பயன்படுத்தி ஜேவிபி ஆயுத கிளர்ச்சி செய்தது. கிளர்;ச்சியை இந்தியா - பாகிஸ்தான் இராணுவ உதவியுடன் அடக்கினார். தொடர் ந்து அணிசேரா நாடுகளின் தலைவியாகி, அமெரிக்க சார்பு ஏகாத்திபத்திய நாடுகளை அனுமதிக்காத கொள் கையை கடைபிடித்த துடன், அமெரிக்காவின் எதிரி நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை பேணினார். குறிப்பாக இந்தியாவுடன் எல்லை தகராறை காரணம் காட்டி ஆயுத மோதல் வரை சென்றி ருந்த சீனாவுடன் நெருக்கமான தொடர்பை பேணினார். இந்த நட்பின் பரிசாகவே அவரின் கணவரின் பெயரில்; ஞாபாகார்த்த மண்டபம் சீனாவினால் அமைத்து கொடுக்கப்பட்டது. சிறிமா இவ்வாறு அமெரிக்க சார்பு ஏகாதி பத்திய நாடுகளின் நலன்களுக்கான கதவு களை அடைத்து கொண்டிருந்த சமயத்தில், அப்போது ஏற்பட்ட உலக எண்ணை நெருக்கடி இலங்கையையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. சிறிலங்காவின் இறக்குமதி தொடர்பான கடும் கொள்கையும், எண்ணெய் நெருக்கடியும் நாட்டில் உணவு பொருட்களு க்கான தட்டுப்பாட்டை உருவாக்கியது. காலனி ஆட்சிக்கு முன்பே உணவு உற்பத்தியில் தன்னிறைவு கண்டிருந்த இலங்கையில் உணவு தட்டுப்பாடு என்பது ஒருவகையில் செயற்கையானதும் கூட தான். நிலைமை இப்படியாக சென்றுக் கொண்டிருந்த வேளையில் தமிழ் இளைஞர்கள் இந்தியா வின் ஆசிர்வாத்துடன் ஆயுத வன்முறையை நோக்கி செல்ல தொடங்கினார்கள். சிறிமாவோ வின் முதல்பாதி ஆட்சியில் தமிழ் இளைஞர் களின் ஆயுத செயற்பாடுகள் இருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய செயற்பாடுகளை நோக்கி செல்வதற்கான அனைத்து காரணங்;களும் இருந்தாலும், இந்தியாவின் ஆதரவும் மிக முக்கியமான காரணியாகும். இந்தியாவை பொறுத்த வரை யில் அவர்களின் பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையை அவர்களின் ஒரு மாநிலமாக கருதியே கொள்கை திட்டமி டலை செய்வார்கள். அவர்களை பொறுத்த வரையில் இலங்கையை தன் கட்டுப்பாட்டுக் குள் வைத்திருப்பதை விட இங்கு அவர்களின் எதிரிகள் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்வதே பிரதான தேவையாகும். எனவே சிறிமாவோ சீனாவுடன் ஏற்படுத்தி வந்த பொருளாதார, பண்பாட்டு உறவுளும், ஜேவிபி யின் பிரச்சாரங்களினால் கொளுத்திவிடப் பட்ட இந்திய எதிர்ப்பு வாதமும், தமிழ் ஆயுத குழுக்களை வளர்த்துவிட இந்தியாவை நிர்ப்பந்தித்த காரணங்களில் ஒன்றாகும். தமிழ் இளைஞர்களின் ஆயுத முன்னெடுப்புக் கள், உணவுத்தட்டுபாடு என்பன சிறிமாவின் இரண்டாவது பாதி ஆட்சியின் மீது சிங்கள மக்களின் கடுமையான ஆட்சேபனையை உருவாக்கியது. இதன் காரணமாக 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சுதந்திர கட்சி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அத்தனகல தொகுதியை தவிர ஏனைய அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தளுவியது. ஜேஆர் தலைமையிலான ஐதேக ஆட்சி அமைக்க, தமிழர் விடுதலைக் கூட்டணியின் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவரானார். பாராளுமன்றத்தில் ஐந்தில் நான்கு பெரும் பான்மை பலத்தை பெற்ற ஜேஆர், சிறிமா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பை திருத்தி அமைத்து, தன்னைத்தானே முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாக நியமித்துக்கொண்டார். அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் மூலம் திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி, அமெரிக்க சார்பு ஏகாதிபத்தியத்திற்கு மூடப் பட்டிருந்த கதவுகளை திறந்துவிட்டார். அன்று முதல் இலங்கை அரிசிக்கும் , பருப்புக்கும் கூட அந்நியரை நம்பியிருக்க வேண்டிய இருண்ட பொருளாதாரத்துக்குள் செல்ல ஆரம்பித்தது. ஜேஆரை தொடர்ந்து பிரேமதாசாவின் ஆட்சி க்கு வந்த காலப்பகுதியில் இலங்கையில் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்ட இந்தியா தான் அதுவரை ஆதரித்து வந்த தமிழ் ஆயுதக்குழுக்களை மாகாண சபை எனும் அரசியல் தீர்வை ஏற்றுக் கொண்டு ஆயுதங்களை ஒப்படைக்க நிர்பந்தி த்தது. மாகாணச்சபை தீர்வை விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்க மறுத்து இந்தியாவுடன் மோதல் நிலைக்கு சென்றனர். ஈரோஸ் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் இந்தியாவின் நிர்பந்தத்திற்கு அடிப்பணிய, சிறிது காலம் தாக்கு பிடித்த ஈரோஸ் அமைப்பும் கலைக் கப்பட்டது. அதே வேளை சர்வதேச அரங்கில் சோவியத் ஒன்றியம் தனது அந்திம காலத்தை நெருங்கி கொண்டிருக்க, அமெரிக்க சார்பு ஏகாதிபத்தியும் தனி ஏகாதிபத்தியமாக உருவெடுத்துக்கொண்டிருந்தது. இந்த வராலாறை நாம் நினைவுபடுத்திக் கொள்வோமாயின், மீண்டும் இதே சம்பவங் கள் இன்று வேறுவிதங்களில் அரங்கேறிக் கொண்டிருப்பதை காணலாம். இடைப்பட்டக் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரக் கட்சியும் சிங்கள தேசியவாதத்தையும், திறந்த பொருளாதார கொள்கையையும் தளுவிக் கொண்டு அதன் நன்மைகளை அனுபவிக்கும் வர்த்தகதரப்பினரின் கூடார மாகிவிட்டது. தமிழ், முஸ்லிம் வர்த்த தரப்பினரின் ஐதேக வினருடனான வர்க்க சுய நலம் கருதிய பந்தம் இன்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. மிகப்பெரும் இராணுவ வளர்ச்சியை பெற்று இந்துசமுத்திர கடல் பிராந்தியத்தில் ஆதிக்கம் மிக்க தரப்பினராக வளர்ந்து கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இந்தியா, அமெரிக்க உட் பட்ட ஏகாதிபத்திய நாடுகளின் உதவியுடன் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டார்கள். யுத்த வெற்றியை மூலதனமாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை சாதித்து கொண்ட மகிந்தா சீனாவுடன் நெருக்கமான தொடர்புகளை வளர் க்க ஆரம்பித்தார். இதற்கு இரண்டு காரண ங்கள் ஏதுவாக அமைந்தன. சீனா இந்தியா, அமெரிக்கா போன்று சனநாயகம், மனித உரிமைகள் என எந்த நெருக்குவாரங்களும் தருவதில்லை. இரண்டாவதாக சீனாவின் பொருளாதார உதவிகளின் பலன் சீனாவுக்கு கிடைப்பதை மட்டுமே அவர்கள் கண்டு கொள்வார்கள். அதன்பலன் இலங்கையில் யாரை சென்றடைகிறது என்பது அவர்களு க்கு தேவையே இல்லாத விடயம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மகிந்தவும் அவரது சுற்றுவட்டாரமும் அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் ஏராளமான நிதியை சுருட்டிக்கொண்டார்கள். இப்படி திருடியது மாத்திரமல்லாது அதுவரை ஐதேக சார்பு வர்த்தகர்களின் கைகளிலிருந்து துறைகளை எல்லாம் அச்சுறுத்தி அபகரித்துக் கொண்டார்கள். இதையே மகிந்த ஆட்சியில் பிரமராகவிருந்த மைத்திரிபால தன் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிடுகின்றார். இவர்க ளின் பலவீனத்தை தாராளமாக பயன்படுத்திக் கொண்ட சீனாவும் கொடுக்க வேண்டியதை தாராளமாக கொடுத்து அவர்களுக்கு தேவை யானதை சாதித்து கொண்டிருந்தார்கள். இதன் உச்சக்கட்டமாக இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலையை சீனாவிற்கு தாரைவார்க்கும் வகையில் திரு கோணமலை அபிவிருத்தி திட்டம் உருவாக் கப்பட்டது. இந்த அபிவிருத்தி திட்டத்தின் ஒப்பந்தங்கள் அனைத்தும் மகிந்தவின் உற வினர்களின் பெயரில் புதிதாக பதிவு செய்யப் பட்ட கம்பனிகளுக்கு வழங்கப்பட்டன. அந்த கம்பனிகள் அவுஸ்திரேலியா, லவோஸ் போன்ற நாடுகளில் சீனநாட்டின் கம்பனிகளு டன் இணைகம்பனிகளாக இயங்கிய கம்பனிக ளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத் திட்டன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் சீனா அரசுக்கு சொந்தமான கம்பனிகள் நேரடியாக திருகோணமலை பகுதியை பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஏலவே, இலங்கையில் சீன சிறைக்கைதிகள் நாற்பதினாயிரம் பேர் வரையில் கட்டுமான வேலை செய்து கொண்டிருந்தார்கள். தாமரை தடாகம், துறைமுகம், விமானநிலையம், அதி வேகபாதை என சீனா இலங்கையில் ஆழமாக கால்பதித்துக் கொண்டிருந்தது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலை விடயத்தில் பொறுமையிழந்த இந்தியாவும், அமெரிக்க சார்பு நாடுகளும் உடனடியாக களத்தில் இறங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காரியமாற்றினார்கள். அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் சனநாயகம், அடக்குமுறை தொடர்பான கருத் துக்கள் பரப்பப்பட்டன. இந்திய தமிழ் முதலா ளியின் மகராஜா ஊடக நிறுவனம் மூலம் அரசாங்கத்துக்கு எதிரான தீவிரமான பிரச்சார ங்கள் முன்னெடுக்கப்பட்டன. இராசபக்ச குழு வினர் ஐதேக சார்பான வர்த்தகர்களிடம் மாத்திரமல்லாது அதுவரையிலிருந்து பாராம் பரிய தேசிய வர்த்தகர்களையும் அச்சுறுத்த ஆரம்பித்திருந்ததும், அதற்கு எதிராக கேள்வி தொடுக்க முற்பட்ட ஊடகங்களையும், செயற் பாட்டாளர்களையும் அராஜகமான முறையில் அடக்கினார்கள். மகிந்த குழுவினரின் சகாக் கள் எவ்வித பயமுமின்றி சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டார்கள். எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் அச்சுறுத்தப் பட்டார்கள். மக்களை கண்கானித்து அடக்கியாள இவர் கள் ஏவி விட்ட புலானாய்வாளர்கள், மக்களை 4தீவிரமாக கண்காணிக்கும் சிசிடிவி கமரா போன்ற நடைமுறைகள் ஏற்கனவே அசௌக ரியத்துக்குள்ளாகியிருந்த மத்தியதரவர்க்கதி னரைதீவிரமான அதிருப்திக்கு ஆளாக்கியது. இவ்வாறு அதிருப்தி அடைந்திருந்த மக்கள் மத்தியில் இந்திய - அமெரிக்க பின்புலத்தில் முன்னெடுக்கப்பட்ட சனநாயகம், சுதந்திரம் தொடர்பான பிரச்சாரங்கள் பற்றிக் கொண்டது. அரசாங்கத்திற்கு எதிரான கவர்ச்சிகரமான பேச்சாளர்களாக இருந்த ஜேவிபினர்க்கும் மகாராஜா நிறுவனத்தின் ஊடகங்கள் மூலம் தாராள அனுசரனை வழங்கப்பட்டது. இந்தியா வும் அமெரிக்காவும் தனது பங்குக்கு போர்க் குற்ற விடயத்தை கையிலெடுத்து மகிந்த ஆட்சி மீதானன சர்வதேச நெருக்குவாரங் களை அதிகரித்தார்கள். நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த மகிந்த சனாதிபதி பதவிக்காலம் முடிவடைய முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். எனினும் மக்கள் ஆதரவு திசை திரும்பும் முன் தேர்தலை நடத்தி வெற்றிபெற அவர் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. இந்த தோல்வி க்கு ஐதேக வின் பாராம்பரிய வாக்காளர்க ளுடன் தமிழ் பேசும் மக்களும், சிங்கள நகர்புற நடுத்தரவர்க்க மக்களும் காரணமாகினார்கள். ஆக, மக்களின் அதிருப்தி ஒரு சமூக இயக்க மாக வளர்ச்சியடைந்து மாற்றத்தை ஏற்படுத்த முன் இந்திய- அமெரிக்க நலன்களுக்காக, ஐதேகவின் தேர்தல் வெற்றியாக அறுவடை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டுமொரு முறை இந்தியா தனது எதிரிகள் இலங்கை யில் கால்பதிப்பதற்கு ஒரு தடையை ஏற்படுத் தியது. இதை உறுதிபடுத்தும் வகையில், சனாதிபதியாக பதிவியேற்ற மைத்திரிபால முதல் நடவடிக்கையாக 'சீனாவிற்கு திரு மலையை தாரைவார்க்கும் அபிவிருத்தி திட்ட பணிகளை உடனடியாக நிறுத்துவதாக" வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், மக்களின் அபிலாசைகள் நிறைவேறி யதா என ஆராய்ந்தால், மக்கள் மீண்டும் வஞ்சிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை சம கால நிகழ்வுகள் அம்பலப்படுதியிருக்கின்றன. எனவே மீண்டும் மீண்டும் நடக்கும் சம்பவங் கள் எமக்கு தெளிவான பாடத்தை கற்பிக்கி ன்றன. இரண்டு பேரினவாத கட்சிகளும் சரி, அவர்களுடன் சகவாசம் செய்யும் சிறிய கட்சி களும் சரி பிரதானமாக ஏகாதிபத்திய நலன்க ளுக்கு சேவை செய்து தமது சொந்த பொருளா தாரத்தை வளர்த்துக்கொள்ளும் தரகு வேலை யையே செய்கின்றனர். இதற்காக அதிகார த்தை இன - மத அடையாளங்களை பயன் படுத்திக் கொள்கின்றார்கள். இவர்கள் யாரும் மக்கள் தமக்கு வழங்கிய அதிகாரத்தை மக்களின் பொதுப்படையான அபிலாசைகளை நிறைவேற்ற பயன்படுத்துவதே இல்லை. எனவே பல தசாப்பத கால ஏமாற்றத்துக்கு ஆளாகியிருக்கும் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் வகையில், கொள்கையின் அடிப்படையில் வேலைத்திட்டம் வகுத்துக் கொண்ட புதிய அணி ஒன்றின் மூலமே மக்களை முன்னோக்கி அழைத்து செல்ல முடியும் என்பது திண்ணம். புதிய அணி நிச்சியமாக இரண்டு பேரினவாத அணியிருந்தும் வேறான புதிய மூன்றாவது அணியாகவே இருக்க முடியும். புதிய அணியா னது இதுவரைக்காலமும் சில குடும்பங்களி லிருந்தே ஆட்சி பீடமேறிய 400-500 பேர் வரை யில் மாத்திரமேயான அரசியல்வாதிகளை உதறித் தள்ளியதாகவும், இலங்கையின் நீண்டகால இனசச்சரவுகளுக்கு நேர்மையான தீர்வை காண அர்ப்பணிப்புடன் செயற்படவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் தேசிய பொருளாதாரத்தை விருத்தி செய்யவும், அதன் பலனை மக்களுக்கு அதிகபட்சமாக கிடைக்க செய்யவும், மக்களு க்கான அதிகபட்ச நலன் புரிசேவைகளை வழங்கவும், பரஸ்பர உதவிகளின் அடிப்படை யிலான சர்வதேச உறவுகளை கட்டி எழுப்பவும் திடசங்கற்பம் கொண்ட முற் போக்கு கொள்கையை வரிந்துக் கொண்ட தாக இருத்தல் வேண்டும். இந்த மூன்றாம் அணியை கட்டிnழுப்ப வேண்டியதே முற்போக்கு சித்தம் கொண்டவர் களின் உண்மையான மாற்றத்தை தேடுபவர் களினதும் இன்றைய பணியாகும்.
சனிக்கிழமை, 15 December 2018 00:00

பத்திரிக்கையின் பயன்பாடு

Written by
கற்றறிதல், ஒழுங்கமைத்தல், ஒன்றுபடச்செய்தல், போராடுதல் என்பனவே இன்று எமக்கு முன்னால் விதிக்கப்பட்டிருக்கும் பெரும் பணிகளாகும். இதனைச் செவ்வனே நிறைவேற்றும் போது தான் சமூகப் புரட்சிப் பாதையில் எமது பாதச்சுவடுகள் ஆழப்பதியப்படும் என்பது நிச்சியமானது. கற்றறிதல், ஒழுங்கமைத்தல், ஒன்றுபடச் செய்தல், போராடுதல் என்னும் இந்த நான்கும் அடிப்படையில் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புள்ளவையே. கற்றறிவதன் வாயிலாகக் கிடைக்கப்படும் பட்டறிவைப் பயன்படுத்தி மக்களை ஒழுங்கு படுத்துவதும், ஒழுங்கமைந்த மக்கள் சக்தியினை ஒன்றுபடச் செய்வதும், அதனூடாகப் போராட்ட முன்னெடுப்பில் ஈடு படுத்துவது என்பதும் தொடர்ச்சியாக நடைமுறை படுத்தும் போது தான் மக்கள் அசைவியக்கம் மலரும் வாய்ப்பு ஏற்படும். அஃதில்லாமல் அங்கத்தவர்கள் தொகையை விஸ்தரிப் பதனாலோ இவர்கள் எல்லாம் எமது ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி விடுவதானாலோ இல்லை. அவர்களின் அரசியல் ஈடுபாடு மிகுந்துவிடப் போவதுமில்லை. குறைபாடு மிக்க இன்றைய சமுதாய அமைப்பை உழுது புரட்டி இல்லாமையை இல்லாதொழிக்கும் சமத்துவ சமதர்ம சமூக அமைப்பொன்றை உருவாக்கத் திட்டம் கொண்ட நாம், இந்த நிலை குறித்து மகிழ முடியாது. இன்றைய சமூக அமைப்பின் தன்மைகள் குறித்த தெளிவை யும், இவ்வமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவரும் வழிவகைகள் குறித்து தெளிவையும் பெற வேண்டியவர்களாக உள்ளோம். இதற்கு (நாம்) கற்றறிதல் முக்கியமானதாகின்றது. சமதர்ம சமூக முறைக்கு முன்னேறிச் செல்ல விரும்பு; அனைவரும், அதை கற்றறிந்தவர்களாக வேண்டும் என்பது இயற்கையான பதிலாய் தோன்றலாம். சமதர்ம பாடபுத்தகங் களிலிருந்தும், பிரசுரங்கள் நூல்களில் இருந்தும், பெறப்படும் அறிவை ஒட்டுமொத்தமாய்க் கிரகித்துக் கொள்வதே சமதர்மத்தை கற்றறிதல் என்று யாரும் எண்ணக் கூடும். ஆனால் இது சமதர்மசமூக தத்துவத்தை மிதமிஞ்சி கொச்சைப்படுத்துவதாகவே இருக்கும் . புத்தகங்களிலும் பிரசுரங்களிலும் கூறப்படுபவற்றைப் படித்து தெரிந்த பின் பல்வேறு அறிவுத் துறைகளையும் சேர்த்து இணைத்திடும் திறன் தோழர்களுக்கு அவசியமானதாகும். வெறுமனே கோசங்களை மட்டும் கிரகித்து கொண்டு நமது அன்றாட வேலைகளுடன் இணைக்காத இடத்து தத்துவத்திற்கும், நடைமுறைக்கும் இடையே பாரிய பிளவு ஏற்படுவது தவிர்க்க முடியாது போய்விடும். புரட்சிகர அமைப்பொன்றைக் கட்டி எழுப்ப முற்படும் நாம், அதன் கட்டுபாட்டைக் கட்டிக்காப்பது அவசியமானதாகும். உழைக்கும் வர்க்க அணியின் வர்க்க உணர்வாலும் சமூகப் புரட்சியின் பால் உள்ள விடாப்பிடியானபற்றினாலும், தன்னலம் அற்ற தியாகத்தாலும், வீரத்தாலும் இறுகப் பிணைக்கப்பெற்று மக்கள் திரளின் அனைத்துப் பிரிவினரோடும் இணைப்புக் கொள்ளவும், ஒன்று கலக்கவும் வேண்டும். இத்தகைய பின்னணி அமைப்பின் அரசியல் தலைமையின் பிழையற்ற தன்மை, செயல்தந்திரம், இவற்றூடாக வெகுசன மக்கள் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாகவே, இது சரியானது எனக் கண்டு கொண்டாகும் நிலைமையை உருவாக்க வேண்டியது எமது பாணியாகும். இந்த வகையில் தோழர்கள், மக்கள் ஆகியோரின் தொடர்பு சாதனமாய் விளங்கும் பத்தரிக்கையின் பணி பாரியதாகும். அமைப்பின் குரலாக வரும் பத்தரிக்கையானது, வழிகாட்டி, அரசியல் பிரச்சாரம், செய்தி பரிவர்த்தனை, மக்கள் தொடர்பு சாதனம் என்னும் கடமைகளை நிறைவேற்றியே ஆகவேண்டும். முதலாவதாக வழிகாட்டி என்ற வகையில் அண்மைய எதிர்காலம் குறித்து முன்மொழிதல் அவசியமாகிறது அரசின் செயற்பாடுகள் அவற்றினூடாக அரசு சாதிக்க விரும்புபவைகள் என்ன? என்பது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய, அதே சமயம், இவற்றை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்னும் ஆலோசனைகள் பத்திரிக்கை வாயிலாக வெளிப்படுத்தப்படல் வேண்டும். இத்தகைய முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் பத்திரிக்கை கொண்டிருக்காத இடத்து, வெறுமனே இலாப நோக்கைக் கருதும் ஒரு தொழிற்துறையாக ஆகிவிடும். எனவே ஒரு அமைப்பின் குரலாக வெளிவரும் இதழ்களானது ஒரு வழிக்காட்டி என்ற அந்தஸ்த்தைப் பெற வேண்டியது அவசியமானதாகும். அப்போதுதான் மக்களின் எதிர்பார்ப்பை யும் தேவையையும் அதனால் பூர்த்தி செய்ய முடியும். இரண்டாவதாக அரசியல் பிரச்சாரகன் என்ற வகையில் உழுத்துப்போன இன்றைய சமூக அமைப்பின் குறைபாடு களைச் சுட்டிகாட்டுவதுடன் சமூக மாறுதலின் அவசியத்தை வலியுறுத்தவும் அதன் தேவையை மக்களுக்கு உணர்த்தவும் வேண்டும். சமூக அமைப்பின் குறைப்பாடுகள் நாளாந்த வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்கள், பாதிப்புக்கள் அதனால் சமூகத்தில் எழும் பிரச்சினைகள் என்பவற்றைத் துல்லியமாகத் துலக்கி மக்களை அரசியல் போராட்டத்துடன் இணைக்க பத்திரிக்கை பயன்படுதல் வேண்டும். மூன்றாவதாக செய்திபரிவர்த்தனை ஊடகம் என்ற வகையில் அமைப்பின் பல்வேறு மட்டத்தில் நடக்கின்ற வேலைத் திட்டங்கள், செயற்பாடுகள் என்பவை குறித்தான செய்திகள் பரிமாறப்படல் வேண்டும். இதற்கு ஊடாக தோழர்களிடையே இறுக்கமான ஒரு அமைப்பையும், செயற்பாடுகளில் ஒரு ஒத்த தன்மையினையும் பேணுதல் வேண்டும். நான்காவதாக மக்கள் தொடர்பு சாதனம் என்ற வகையில் அமைப்பின் கருத்துக்களையும், எண்ணங்களையும் மக்களு டன் பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் அமைப்புக் குறித்தான மக்களின் எண்ணங்களை ஒழுங்குபடுத்துவதும் பத்திரிக்கையின் பணியாகிறது. மக்களுக்கும் அமைப்புக்கும் இறுக்கத்தை அதிகரித்து, அரசியல் அறிவு மட்டத்தை உயர்த்தி அக்கறையுடனான ஈடுபாட்டைத் தோற்றுவிப்பதைப் பத்திரிக்கை முதன்மைப்படுத்த வேண்டும். இதை விடுத்து அபரிதமான நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் எழுத்துக்களால் பத்திரிக்கையின் பக்கங்களை நிறைத்து விடுவதானது காலப்போக்கில் நீடித்து நிலைக்காமல் புஸ்வாணமாகிப் போய்விடும் என்பது நிச்சியம். நாங்கள் சொல்வது சரித்திரம். அதுமட்டும் தான் உண்மை என்ற போக்கில் செயற்படாமல் தெளிவான சிந்தனைகளைத் தோற்றவிக்கப் பாடுபட வேண்டியவர்களாயுள்ளோம். ஒரு பிரமையை அதாவது ஒரு மாயைத் தோற்றத்தை உருவாக்கி அதன் அடிப்படையில் மக்களிடம் செல்வாக்குச் செலுத்தலாம் என்று எண்ணும் போக்கு எம் மக்களிடையே தலைதூக்கி இருப்பது வெளிப்படையானது. இந்தப் போக்கின் பிரதிபலிப்புக்களை இன்று வெளிவரும் தினசரிகளில் பொது வாகப் பார்க்க முடியும். இலாபம் சம்பாதித்தலை முதன்மைப் படுத்தும் இத் தினசரிகள் எந்த விடயத்திலும் ஒரு பொது கருத்தை உருவாக்குவதில் பின் நிற்பதைக் காணலாம். மக்கள் நலன் சார்ந்து பெரிதுபடுத்த வேண்டிய முக்கிய செய்திகளைக் கண்டு கொள்ளாமல் விடுவதும், தாமே நேருக்கு நேர் சந்திக்கும் உண்மைகளை அப்படியே அப்பட்டமாக வெளியில் வைப்பதற்கு பதிலாக கட்டுண்டு கிடக்கும் தன்மை யினையும் எவரும் அவதானிக்க முடியும். இதன்காரணமாகவே காத்திரமான பல விடயங்களைத் தாங்கி வரவேண்டிய இன்றைய சூழலில் வெளிவரும் இத்தினசரிகள் மரண அறிவித்தல்களாலும், விளம்பரங்களாலும் பக்கங்களை நிரப்பி வருவதைக் காணமுடிகிறது. இதிலிருந்து மாறுபட்டு இருக்கின்ற நிலைமைகளை யதார்த்த பூர்வமாகச் சிந்திக்க தூண்டுதல் வேண்டும். எமது நிலைப்பாடு என்ன? எமது பலங்கள் எவை? எமது பலவீனங்கள் என்ன? நாம் போராட்டத்தில் ஆற்றிய காத்திரமான பங்களிப்புக்கள் என்ன? தொடர்ந்து முன்னேறி செல்ல என்னென்ன செய்யப்படலாம்? நாம் எவ்வாறு படிப்படியாக முன்னோக்கி செல்கிறோம்? என்பதை மிக அழுத்தமாக எடுத்துச் சொல்லி அவற்றினூடாக மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்தாக வேண்டும். அதே சமயம் மக்களுக்கு கொடுக்கப்படும் நம்பிக்கை அனைத்தும் அமைப்பின் செயற்படுகளினூடாக நிறுவப்படல் வேண்டும். வெறுமனே தேர்தல்கால வாக்குறுதியைப் போல வாயில் வந்தவற்றையெல்லாம் கூறி விட்டு பின், அவற்றைக் காப்பாற்ற முடியாத போது திண்டாடுவது மக்களைக் குழப்பமுறச் செய்வதோடு சமூக அசைவியக்கத்தலிருந்து அந்நியப்படுத்தி விடும். மக்கள் மத்தியில் இருந்து ஆதரவைத் திரட்டுவதிலும் அபிமானத்தைப் பெறுவதிலும், பிரச்சாரம் முக்கிய பாத்திரத்தை ஆற்றுகிறது, செய்யப்படுகின்ற வேலையும், செய்யப்படுகின்ற பிரச்சாரமும் ஒரு சமாந்திரத் தன்மையைப் பெற்றிருத்தல் அவசியம். செயற்பாடு - பிரச்சாரம் அமைப்பு என்ற நடைமுறைப் பாணியில் செயல்பட வேண்டும். வேலைகளைச் செய்து எமது சாதனைகளை நிலைநாட்டி அவற்றின் அடிப்படையில் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். இதற்கூடாக அமைப்பு இறுக்கமாகக் கட்டுப்படும். இவ்வாறு தோழர்களாக ஒன்றிணைந்தவர்கள் மீண்டும் செயற்பாடு, பிரச்சாரம் ஊடாக அமைப்பைக் கட்டும் போது அமைப்பு விரிவுபடும். பலம்பெறும்.
சனிக்கிழமை, 08 December 2018 00:00

நல்லிணக்கம் தீதும் நன்றும்

Written by
சிறிலங்கா, இலங்கை என அழைக்கப்படும் நாம் வாழும் தீவு ஆங்கிலேய காலனி ஆட்சி இலிருந்து ~விடுப்பட்ட| நாள் முதல், இரு மொழி வாரி தேசிய இனங்களுக்கிடையிலான முரண் பாட்டையே, இரத்தகறையினால் வரலாறாக எழுதி வைத்திருக்கின்றது. மேம்பட்ட வாழ்வு எனும் மனித சித்தம், இனமுரண்பாடு எனும் முட்டுச் சந்தில் சிதைந்;து கிடக்கின்றது. முரண்பாட்டை, இரு தரப்பு இணக்கத்துடன் தீர்ப்பதற்கான முயற்சிகளின் தோல்விகளா னது, 2009ம் ஆண்டு மாபெரும் மனித பேரழிவு அவலத்தை அரங்கேற்றியது. அதன் பின் வந்த கடந்த 9 வருடங்களும், அவலங்களுக்கும், முரண்பாட்டுக்கும் தீர்வு தேடும் தோரணைக் காட்டும் நல்லிணக்க கதைகளால் வலிந்துக் காணமலாக்கப்பட்டிருக்கின்றது. நோக்கமும் செயல்பாடுகளும் மாறாக இருப்பி னும், சிறிலங்கா அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டிய ~சூழ்நிலை;; பொறி|க்குள் சிக்கி இருக்கின்றது. இது ஒரு சூழந்நிலை பொறிதான். இதிலிருந்து விடுப் படும் வரை குறைந்தப் பட்சம் நல்லிணக்கம் தொடர்பாக கதைப்பதையாவது செய்வார்கள் .இந்த சூழ்நிலை, முரண்பாடு - நல்லிணக்கம் தொடர்பான இருதரப்பு கலந்துரையாடலுக் கான கதவுகளை திறந்து விட்டிருக்கின்றது. இந்த கதவுகள் வழியே சென்று கதைக்கப் படாத விடயங்களை, கதைப்படாத தரப்புடன் கதைக்கும் வாய்பொன்றை தந்திருக்கிறது. சூழ்நிலை திறந்திருக்கும் கதவுகள் வழியே தமிழ் பேசும் மக்கள் தரப்பை அழைத்து சென்று, கலந்துரையாடாத விடயங்களை கலந்துரையாட வேண்டிய சிங்கள மக்களுடன் கலந்துரையாட செய்வது, சூழ்நிலை நமக்கு இட்டுருக்கும் பணிப்பாகும். விநோதமான வகையில் இது இரட்டை பணிப் பாகும். தமிழ் பேசும் மக்களை அரசியல் ரீதியில் விழிப்புணர்வூட்டுவது முதலாவது பணி. அடுத்தது சிங்கள மக்களை தேடிச் சென்று கலந்துரையாடுவது. துரதிஸ்டமாக சிங்கள சமூகத்தின் முற்போக்கு சக்திகளி டமிருந்து நேர்மையான கரங்கள் எம்மை நோக்கி நீளவில்லை. தமிழ் மக்களை அரசியல் ரீதியாக விழிப்புணர் வூட்டதல் என்பது, இலேசான மனகிலேசத்தை தரலாம். ஆனால் நிலைமை அது தான். (போலி) நல்லிணக்கத்திற்காக தமிழ் பேசும் மக்கள் அரசில் நீக்கம் செய்யபட்டிருக்கின்றார்கள் - செய்யப்படுகின்றார்கள் - செய்யப்படுவார்கள். ஏனெனில், அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தமிழ் சமூகத்திற்கு தான் (போலி)நல்லிணக்க இனிப்புக்களை கொடுத்து ஏமாற்ற முடியும். மறுபுறம் நாளுக்கு நாள் வலுப்படுத்தப்படும் சிங்கள பேரினவாத நிறுவன கட்டமைப்பை உடைத்து, (மகாவம்ச)சிங்கள மக்களிடம் செல்ல நாம்அரசியல் ரீதியில் வளர்ச்சியடை ந்தவர்களாகவும், வலிமை பெற்றவர்களாக வும் இருத்தல் வேண்டும். இந்த பணிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது தர்க்கீகத்தின் பணிகளில் ஒன்றாகும். உண்மையான நல்லிணக்கம் இலங்கையில் நீதிமன்றங்களுக்கு புறம்பாக இணக்க சபைகள் எனும் ஏற்பாடு ஒன்றுள்ளது. கடன் பிரச்சினை, சொத்து பிரச்சினை போன்ற சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி இணக்கம் எட்டுவதன் மூலம் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகளை இங்கு தீர்க்கலாம். இங்கு பாதிக்கப்படும் தரப்பும், பாதிப்பை ஏற்படுத்திய தரப்பும் மத்தியஸ்த சபை ஒன்றின் முன் கலந்துரையாடுவார்கள். மத்திய ஸ்த சபை இணக்கமான தீர்வை எட்ட வழிக் காட்டும். இது திட்டவட்டமான முறையில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நியாயத்தை இணக்கமான முறையில் பெற்றுக்கொடுப்ப தாகும். மாறாக பாதிக்கபட்ட தரப்பை திசை திருப்பி, அநீதிக்கு இணங்கி போக செய்வது அல்ல. அப்படிச் செய்வது நல்லிணக்கம் இல்லை. நயவஞ்சகம். உதாரணமாக அமீர் என்பவர் பண்டார என்பவருக்கு, பத்தாயிரம் ரூபாய் கடனாக கொடுத்திருக்கின்றார். ஆனால், பண்டார 10 வருடங்களாக கடனை திருப்பி கொடுக்கமால் இழுத்தடித்து வருகின்றார். அமீர் அநியாய வட்டி விதித்து அதிகபடியான தொகையை கரந்து விட முயல்கிறார். இங்கே பாதிக்க பட்டவர் அமீர். அவர் கடனாக கொடுத்த பணத்தை பண்டாரவிடமிருந்து, தற்போதைய பணப்பெறுமதிக்கு அமைய பெற்றுக்கொடுக்க வேண்டும்; பண்டார அநியாய வட்டியிலிருந்து காப்பாற்றப்படுவதோடு, நியாயமாக திருப்பி கொடுக்க வேண்டிய பணத்தை கொடுப்பதை சாத்தியபடுத்தும் வகையில் தவணை முறையில் கொடுப்பது போன்ற ஏற்பாடுகளை செய்யலாம். இங்கு முக்கியமானது பண்டார கடனை திருப்பி கொடுக்க வேண்டிய கடப்பாட்டை உணர்வதும், இழுத்தடித்து ஏமாற்ற நினைத்த பிழையை உணர்வதும் ஆகும். அது நடக்கும் பட்சத்தில் அமீர் நியாமான பணத்தை பெற விட்டுக் கொடுப்புக்களை செய்வதும் சாத்தியமாகும். இதுவே மிக அடிப்படையான நல்லிணக்க தீர்வாகும். மாறாக இணக்க சபையானது அமீரை அச்சுறுத்தியோ, ஏமாற்றி திசை திருப்பியோ, காலம் கடத்தியோ பண்டாரவுக்கு சாதகமாக இணங்கி வரச் செய்யவோ, பணத்தை திருப்பி கேட்பதை கைவிட செய்யவோ, வேறு மலிவான சலுகைகளை வழங்கி ஏமாற்றவோ செய்யுமாயின் அது நல்லிணக்கம் அல்ல. இது போலவே சிறிலங்கா அரசின் நல்லிணக்க செயற்பாடுகளும், இலங்கை தீவில் தமிழ் மக்கள் ஒரு இனகுழுமமாக அபிவிருத்தியடையவும் வளர்ச்சியடையவும் இருக்கும் உடைமைப் பாட்டு உரிமையை சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்தியும், தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை உணர செய்தும் இனபிரச்சினைக்கு இணக்கமான தீர்வை காண அடித்தளமிட வேண்டும். அதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் இருப்புக்கும் பாதுகாப்பு க்குமான நிலையான ஏற்பாட்டை செய்ய வேண்டும். முரண்பாடு என்ன? எந்தவொரு சமூக பிரச்சினையையும் ஆராயும் போது துல்லியமாக வரலாற்று ரீதியாக முன்வைப்பது மாத்திரமே துலக்கமான நடவடிக்கைகளுக்கு வழிக்கோலும். இவ்விதழில் சில இடங்களில் முரண்பாடு விளக்கப்பட்டிருக்கின்றது. எனவே இங்கே சுருக்கமாக, சிங்கள பேரினவாதத்தின் தத்துவ வழிக்காட்டியான நலின்ந்த சில்வாவின் வார்த்தைகளில் சொல்வது சாலப்பொருந்தும். ~சிறிலங்கா தீவு சிங்கள மக்களின் தாய்வீடு, அவர்களுக்கே இத்தீவு சொந்தமானது. தமிழ் பேசும் மக்கள் எங்கள் வீட்டிற்கு வாடகைக்கு குடியிருக்க வந்தவர்கள். குடியிருக்கலாம். ஆனால், சொந்தம் கொண்டாட முடியாது|. சிங்கள சமூகத்தின் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரை தவிர ஏனைய அனைவரும் இதை வழிமொழிந்தே செயற்படுகின்றார்கள். இதை முறியடிக்கும் வகையில் தமிழ் பேசும் மக்கள் தம் உடைமைப்பாட்டை உறுதி செய்ய போராடுகின்றார்கள். சிறிலங்கா அரசு என்ன செய்கிறது? பிரச்சினையை இணக்கமான வழியில் தீர்க்க கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களையும் தட்டிக் கழித்தது, தம் பேரினவாத சூழ்ச்சி திட்டத்தை முழுமையடைய செய்யவே என்பது கடந்த கால அனுபவங்கள் எமக்கு கற்றுத்தந்த பாடமாகும். அது போலவே மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டரசாங்கத்தின் கடந்த நான்கு வருட நல்லிணக்க செயற்பாடுகளும் இன்னுமொரு காலம் கடத்தும் சூழ்ச்சியாகவே வெளிப்பட்டிருக்கின்றது. எம் பிரதிநிதிகள் செய்வதென்ன? அரசாங்கம், வாயளவில் நல்லிணக்கம் கதைத்துக் கொண்டு செயலளவில் ஏதேச்சதிகார கொள்கையை முன்னெடுப்பதை முறியடித்து, அவர்கள் நாள்தோறும் கூறிவரும் நல்லிணக்க செயற்பாடுகளை, நேர்மையாகவும் நீடித்து நிலைக்க கூடிய வகையில் விரைவாகவும் செய்விக்க வேண்டும் என்பதே ~நல்லிணக்க முயற்சிகளில்| தமிழ் பேசும் மக்களின் அபிலாசையாகும். இந்த நல்லிணக்க செயற்பாடுகளின் முன்னேற்றங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் துரித பொருளாதார, உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுப்பதுடன். நிரந்தமான வகையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய அந்தஸ்த்தை உறுபடுத்தும் நிர்வாக பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதற்காக பணியாற்றுவதும் குரல் கொடுப்பதும் மக்களுடன் இணைந்து அழுத்தங்களை உருவாக்குவதுமே தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பிரதிநிதிகள் செய்ய வேண்டியதாகும். ஆனால், மக்கள் பிரதிநிதிகளோ தமிழ் பேசும் மக்களை பிரதேச, மத ரீதியாக பிளவுப்படுத்தி, பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டு மக்களின் அபிலாசைகளை பிரதி பலிக்காமல் அரசின் சூழ்ச்சி திட்டங்களுக்கு மறைமுகமாக உடந்தையாகவிருக்கின்றனர். இதற்காக, சலுகைகளாக கிடைத்த பதவி களை தமிழ் பேசும் மக்களின் கௌரவமா கவும், அரசாங்கம் தவிர்க்க முடியாத வகையில் செய்து கொடுக்கும் உட்கட்டமைப்பு வசதி களை தமது மாபெரும் சாதனைகளாக காண் பித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். உண்மையில் எமது பிரதிநிதிகள் அரசாங்க த்தின் கடமைகளை வலியுறுத்தி, மக்களின் உடனடி அடிப்படை தேவைகளுக்காக செயற் படாதவர்களாகவே இருக்கின்றார்கள். நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழ் பேசும் மக்களின் தேசிய அந்தஸ்த்திற் கான போராட்டம் நெருக்கடியானதும், மிக தீர்க்கமானதுமான கட்டத்தை அடைந்திருக் கும் இன்றைய வரலாற்று நிலைமைகளை யும், இனிவரவிருக்கும் நிலைமைகளையும் விரிவாக ஆராய்ந்து, என்ன செய்ய வேண்டும் எனும் கேள்விக்கு விடை தேடிக்கொள்வதே எமது மிக முக்கியமான பணியாகும். இதற்கான பதிலிலிருந்து எமக்கான சித்தாந்த. அரசியல், கோட்பாடுகளை உருவாக்கி கொள்ள முடியும். ஆரம்பத்தில் கூறியது போல் சிறிலங்கா அரசு பெயரளிவிலேனும் நல்லிணக்க செயற்பாடு களை செய்வதாக காண்பிக்க வேண்டிய சூழ் நிலை பொறிக்குள் சிக்கியிருக்கின்றது. இது பிராந்திய சர்வதேச ஏகாதிபத்திய முரண் பாடுகளின் தர்க்க ரீதியான விளைவாகும். ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்கள் இச்சந்தர்ப் பத்தை சரியாக கையாள்வதே தம் தேசிய இருப்புக்கான போராட்டத்தின், எதிர்காலத்தை தக்க வைத்துக்கொள்ள வழிச்செய்யும். அதன் காரணமாகவே இது எமக்கு தீர்க்கமான காலகட்டமாகும். தமிழ் பேசும் மக்கள் ஓருமைப்பாட்டுடன் இத் தீவில் தமக்கிருக்கும் உடைமைப்பாட்டை வெளிப்படுத்தி, நல்லிணக்க முறையிலான தீர்வுக்கான தம் அபிலாசைகளை சிங்கள மக்கள் தரப்பிற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த உரையாடல் மூலம் பேரினவாதத்தின் மிலேச்சத்தனமானதும் மோசடியானதுமான திட்டங்களை அம்பலப்படுத்தி , இணக்கமான தீர்வுக்காணும் செயல்பாடுகளை நோக்கி அழைத்து வரவேண்டும். இப்படியானதொரு நகர்வே சிறிலங்கா அரசு சிக்கியிருக்கும் சூழ்நிலை பொறியில் காலம் கடத்தி தப்பிக்க முடியாத நெருக்கடியையும், அழுத்தத்தையும் கொடுக்கும். இந்த அழுத்த மும் , நெருக்கடியும் எமக்கு தரும் அரசியல் பலத்தை கொண்டு நேர்மையான நல்லிணக்க செயற்பாடுகளின் பால் அரசை இழுத்து எமது தேசிய அந்தஸ்த்தை உறுதிபடுத்தும் தீர்வை உரித்தாக்கல் வேண்டும். எனவே தமிழ் பேசும் மக்களை ஐக்கியப் படுத்தி, ஒருமைப்பாட்டுடன் செயலில் இறங்கு வதும், அதற்கான செயல்தந்திரங்களை வகுப் பதுமே தமிழ் பேசும் மக்களின் முன்னெடுப் பாளர்களினதும், வழிக்காட்டிகளினதும் இன் றைய பணியாகும். அதற்கான பிரவேசத்தை யும், சிறிலங்கா அரசின் நல்லிணக்க செயற் பாடுகள் தொடர்பான முன்னுரையையும் தருவதே இப்பந்தியின் நோக்காகும். நாம் இன்றைய சூடேறிய பிரச்சினைகளை இன்னும் விரிவாகவும் விரைந்தும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஏனெனில் இதுவொரு சூழ்நிலை பொறி திறந்திருக்கும் கதவாகும். சூழ் நிலைகள் விரைந்தும் மாறலாம். அதுவரையிலும், காலம் கடத்தும் பொறியில் சிக்கிவிடுவோமாயின், பேரினவாதம் தமிழ் பேசும் மக்களை உரிமைக்குரல் எழுப்பாத வகையில் அதன் சதிதிட்டத்தை நிறை வேற்றிக்கொள்ளும். நிலைமைகள் எப்படி யாக செல்லினும்,அதன் தீதும் நன்மையும் பிறர் தராவராது, நம் செயற்பாடுகளே அதை தீர்மானிக்கும்.
கடந்தகால வரலாற்றின் முன் நிகழ்வுகளால் இலங்கையில் பௌத்த சிங்கள பெருந்தேசிய வாதத்தின் அடக்குமுறைக்குத் தமிழ் பேசும் அனைத்து மக்களும் உள்ளாக்கப்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது. இன்று அதன் போக்கும்வளர்ச்சியும் கூர்மையடை ந்து கொண்டு வருவதையும், இதனால் ஒட்டு மொத்தமாக எழக்கூடிய வர்க்கப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு வருவதையும் காணக்கூடி யதாகவுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இலங்கையின் பாட்டாளி வர்க்கத்தின் முதுகெலும்பான மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் வர்க்க ரீதியாகவும், இன ரீதியாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில்,'மலையக மக்கள் ஒரு தனித் தேசிய இனம்" என்ற எண்ணக்கரு இன்று பரவலாகச் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. மலையகத்தில் வளர்ந்து வரும் முதலாளித்துவ அரசின் அடிவருடி தாபனங் களும், இடதுசாரிக் குழுக்களும் இத்தகைய கோசங்களை முன்வைத்து அம்மக்களை எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுக்க விடாமல் அவர்களைத் தனிமைப்படுத்துவ தோடு, பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளி லும் ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அம்மக்களின் வரலாற்றுப் பின்னணியையும், அவர்கள் எந்தமுறையில் அடக்கு முறைக் குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் மானசீகமாகச் சிந்திப்பவர்கள் அம்மக்கள் தனித்தேசிய இனமா? அல்லது தமிழ் பேசும் தேசிய இனத்தின் முதுகெலும்பான பாட்டாளி வர்க்கமா? என்பது புலனாகும். வரலாற்றின் முன் நிகழ்வுகள் தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து நிரந்தர குடியிருப்புக்களை உருவாக்கிய குடியேற்ற அலைகள் இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெற்று வந்துள்ளன. இவ்வாறு குடியேறிய மக்கள் அதன் சமூக அமைப்பின் வளர்ச்சியில் மதம், பொருளாதாரம், அரசியல் தன்மைகளின் செல்வாக்கால் மொழிரீதியாக வேறுபட்ட தோடு, கலாச்சார உருவாக்கமும் மாற்றமடை ந்து இரு வேறு இனங்களாக வளர்ச்சியடை ந்துள்ளன. இத்தகைய நிகழ்வுகளின் இறுதி யாக பிரித்தானிய காலனியாதிக்கத்தினால் தமிழ் நாட்டிலிருந்து தமிழ்பேசும் மக்கள் கூலித் தொழிலாளர்களாகக் கொண்டு வரப் பட்டு குடியமர்த்தப்பட்டார்கள். ஏற்கனவே கூறப்பட்டது போல், இலங்கையின் பிரதான இரு இனங்களின் உருவாக்கம் போல் மலையக மக்களும் ஒரு தனித்துவமான இனமாக வளர்ச்சியடைவதற்குரிய சாத்தியப் பாடுகள் குறுகியும், அதேவேளை தமிழ்பேசும் இனத்துடன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமா கவும் காணப்பட்டமையால் இன்று தமிழ் பேசும் தேசிய இனத்தின் ஒரு அங்கமாகவே மலையக மக்கள் ஒன்றித்துள்ளனர். இற்றை க்கு 200 வருடங்களுக்கு மேலாக இம்மலை யக தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் காடுகளை அழித்து, மேடு பள்ளங்களை நிரவி இலங்கையின் மூலப்பொருள் வளத்தை உற்பத்தி செய்து தேசிய வருமானத்தை ஈட்டிக்கொடுத்து வருகிறார்கள். தமது உதிரத்தை சிந்தி உடலுழைப்பால் பல இன்னல்கள் மத்தியில் சிறைப்பறவைகளாய் அம்மண்ணிலேயே உழைத்து ஏனைய மக்களின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கிறார்களே. இவர்கள் இம்மண்ணுக்கு உரித்துடையவர்கள் இல்லையா? பிரித்தானிய தந்திரோபாயம் பிரித்தானிய காலனியாதிக்கத்தின் போது இலங்கையில் அதுவும் கூடுதலாக சிங்கள மக்கள் மத்தியில் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை இறுக்கமாக இருந்தது. இதனால் யாழ்ப்பாணப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் பேசும் மக்களின் புத்திஜீவன்களைத் தமது நிர்வாக பரவலாக்கத்திற்கு நியமித்தார்கள் பிரித்தானியர். அத்துடன் யாழ்ப்பாணப் பகுதி களில் பாடசாலைகளைக் கட்டுவித்து, சில வசதிகளை ஏற்படுத்தி அம்மக்களை மேலும் மேலும் நடுத்தர வர்க்கத்தினராக உயர்த்தி, வேலை வாய்ப்புக்களை வழங்கித் தமது பிரதான நிர்வாகப் பொறுப்புக்களில் அமர்த்தி னார்கள். மலையகப் பகுதிகளில் பொருளா தார வளத்தைப் பெருக்கும் கூலித் தொழிலா ளர்களையும் நிர்வகிக்க, அதே மொழிபேசும் யாழ்பாணத்தவரை நியமித்துத் தமது இல குவான சுரண்டலுக்கு வழிவகுத்துக் கொண் டார்கள். தொழிலாள வர்க்கம், சுரண்டல் அடக்கு முறைகளிலிருந்து விடுபட எழுச்சி கொள்ளும் போக்கை மழுங்கடிக்கச் செய் யும் தந்திரோபாயமாக இதைக் கையாண் டார்கள். இதுபோலவே சிங்கள மக்கள் மத்தியிலும் நிர்வாகப் பகுதியினராக இவர் களை நியமித்ததோடு, அவர்கள் மத்தியில் புத்தி ஜீவிகளாகவும் புகுத்தினார்கள். தேசிய இன ஒருமைப்பாடு மலையக மக்களின் மொழி, கலாச்சாரம் என்பன இலங்கைவாழ் ஏனைய தமிழ் பேசும் மக்களிலி ருந்து பிரிக்க முடியாததாகவேயுள்ளது. முதலா ளித்துவ அமைப்புள்ள ஒரேதேசிய இனத்தி னுள் வர்க்க வேறுபாடுகளும், மத வேறுபாடுக ளும், பொருளாதார உற்பத்தி வேறுபாடுகளும் நிலவுவது இயல்பு. எனவே வர்க்க ரீதியாக வேறுபடுகின்ற கலாச்சார வித்தியாசங்களைத் தனித்தேசிய இனத்துக்கான அம்சம் எனச் சிலர் கருதுகின்றனர். இதுபோலவே மதரீதியான சில கலாச்சார வித்தியாசங்களும் இருக்கும். மொழியால் ஒன்றுப்பட்டு, குறிப்பிட்ட பிரதேசங் களைத் தன்னகத்தே கொண்டு வடக்கு,கிழக்கு, மலையக பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஒரே தேசிய இன ஒருமைப்பாடு நிறைந் தவர்களாகவே உள்ளனர். இந்தத் தேசிய இனத்தின் முதுகெலும்பான பாட்டாளி வர்க்கத் தின் கலாச்சாரத்திற்கும், வடக்கு - கிழக்கு பகுதிகளில் வாழும் இதர மக்களின் கலாசார த்திற்கும் வர்க்கரீதியான சில வித்தியாசங்கள் இருக்கத்தான செய்யும். இது தேசிய இனத்தின் இயல்பானதொன்று. இதுபோலவே சைவ, கிறிஸ்தவ, இசுலாமிய மதங்களைத் தழுவும் ஒரே தேசிய இன மக்களிடையே சில மத ரீதியான கலாச்சார வித்தியாசமும் இருக்கும். எனவே தமிழ் பேசும் தேசிய இனத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றம் காணும் போது இத்தகைய வேறுபாடுகள் தகர்வுறும் தேசிய இனஒடுக்குமுறை இலங்கையில் இனவாத வித்துக்கள் காலனி யாதிக்கத்திற்கு முன்பே விதைக்கப்பட்டிருந்தா லும், அதன் வளர்ச்சியை பிரித்தானிய காலனி யாதிக்க காலத்திலும், அதன் சுயரூப வெளிப் பாடுகளைப் பிரித்தானிய ஆதிக்கத்தின் பின்பும் காணக்கூடியதாக உள்ளது. இலங்கையில் தேசியவாதம் என்பது அடிப்படையில் பௌத்த சிங்கள தேசிவாதமாகச் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சிங்கள பேரினவாதிகளால் வளர்த்தெடுக்கப்பட்டது. இதனால் பிரித்தானிய ஆதிக்கத்தின் பின்பு ஆட்சிப் பீடம் ஏறிய பௌத்த சிங்கள பேரினவாதிகள் அதிகாரத் தின் மூலம் இன ஒடுக்குமுறையில் இறங்கி னார்கள். இதன் முதல் கட்டமாகவே 1948 ஆம் ஆண்டில் பிரசாவுரிடைச் சட்டம் கொண்டு வரப் பட்டு மலையக தமிழ்த் தொழிலாளர்கள் நாடு கடத்தும் படலம் ஆரம்பிக்கப்பட்டது. இதே வேளையில் இலங்கையர் என்ற தேசிய வாதத்தில் அக்கறைகொண்டு இயங்கிய தமிழ் பேசும் தலைவர்கள் இதன் உட்சூட்சுமத்தை உணராமல் தமது வர்க்க எண்ணப்பாட்டு நிலை யில் காலத்திற்குக் காலம் செயற்படத் தொடங் கினர். இதனாலேயே சிங்கள பெருந்தேசிய இனவாதத்தின் வளர்ச்சிப்போக்கும், அதன் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் வலுப்பெற்று இன்று தேசிய இன ஒடுக்கு முறையின் முழு வடிவத்தைப் பெற்றுள்ளது. திரிபுவாதத்தினுள் இனவாதம் இந்த நிலையில் இடதுசாரிகளெனத் தம்மை வரிந்து கட்டிக்கொண்டு நிற்பவர்களும், முதலா ளித்துவ சதிக்குள்ளான இடதுசாரி பிற்போக்கு வாதிகளும், சனநாயக விரும்பிகளும் மலையக தமிழ் பேசும் மக்களை 'இந்தி வம்சாவழிகள்" எனவும், 'இந்திய விஸ்தரிப்பு வாதிகள்" எனவும் வாதம் பேசி இலங்கையின் பாமர தொழிலாள வர்க்கத்தின் விமோசனத்தையும், இன்றைய நிலையில் தமிழ்பேசும் பாட்டாளி வர்க்கத்தின் விமோசனத்திற்கான முன்னெடுப்பையும் திசை திருப்ப முட்டுக்கட்டையிட்டு வருகின்றனர். இவர்களது வாதத்தினுள் இனவாதமே முழுமை யாக விரவி நிற்கின்றது. இத்தகைய முடக்கு வாதம் பேசுபவர்கள் மலையக கூலித் தொழிலா ளர்களுக்கும், வியாபார நோக்கத்திற்காக இங்கு வந்து அடிக்கடி இந்தியா சென்றுவரும் இந்திய வம்சாவழியினருக்கும் இடையேயுள்ள பாரிய வேறுபாட்டை உணர மறுக்கிறனர். தமது வாழ்க் கையில் உழைப்பதைத் தவிர வேறெதுவும் கண்டிராத, எந்தவித அடிப்படை வசதிகளைத் தானும் பெற்றுவராத தோட்டத் தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக இம்மண்ணி லேயே மடிகட்டி நிற்கும் போது அவர்களை 'இந்தியவம்சா வழியினர்",'விஸ்தரிப்புவாதி கள்" என முத்திரைகுத்தி விரட்டியடிக்க கங்க ணம் கட்டி நிற்கும் பிற்போக்குத் தலைவர் களும், வழிகாட்டிகளும், வியாபார நோக்கிற் காக இங்கு வந்து தலைவர்கள் எனத் தம் மைப் பறைசாற்றி இலங்கை முதலாளித்துவ பிற்போக்குவாதிகளுடன் கைகோர்த்து, தொழி லாள வர்க்கத்தைச் சுரண்டி செல்வத்தைச் சுருட்டிச் செல்கிறார்களே அவர்கள் இந்திய வழ்சாவழியினரா? அல்லது இம்மண்ணிலே உழைத்து இந்நாட்டிற்கும், மக்களுக்கும் இறைக்கிறார்களே அவர்கள் இந்திய வம்சா வழியினரா? என்பதை உணர வேண்டும். இதேவேளை மலையக பகுதிகளில் 'மலையக மக்கள் தனித்தேசிய இனம்" என்ற கோசத்தை முன்வைப்பவர்கள் தமிழ் பேசும் தேசிய இன ஒருமைப்பாட்;டையும் சிதறடிக்கும் வகையில், 'உங்கள் க~;டங்களுக்கெல்லாம் யாழ்பாணத் தாரே காரணம்" என்று பிரச்சாரம் செய்து பிரி வினையை வளர்க்கிறார்கள். இத்தகைய கருத்துக்கள் இன்று மலையக புத்திஜீவிகள் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களது எண்ண அபிலாசைகளைப் பிரதிபலிப்பதாக சமூக கருத்தோட்டம் உருவாக்கப்படுகிறது.புத்திசீவிகளும் தமது கல்விக்கும் திறமைக்கும் வேலைவாய்ப்புக்கள் அளிக்க வேண்டும் என்ற பின்னணியிலேயே இந்த கருத்தோட்டத்தில் வேரூன்றப்பட்டு வருகிறார்கள். இத்தகைய கருத்துக்கள் எந்த வகையிலும் அடிப்படைக் கல்வியைக் கூடப் பெறமுடியாமல் சிறு வயதிலிருந்தே தமது வயிற்றுப் பிழைப்புக் காகத் தோட்டங்களில் மாரடிக்கும் தொழிலாளர் களுக்கு எந்த வகையிலும் விமோசனம் அளிப்பதாக இல்லை. எனவே அடிப்படையில் இது மலையகத் தமிழ் முதலாளிகளையும் - புத்திசீவிகளையுமே பிரதிபலித்தது. இத்தகைய எண்ணக்கருவின் வளர்ச்சியின் பரிணாமமே 'மலையக மக்கள் தனித் தேசிய இனம்" என்ற எண்ணக் கருவாகும். மலையக தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கிய தமிழ்பேசும் தேசிய இனத்தின் போராட்டமுனைப்பும், சிங்கள பெருந் தேசியவாதத்தின் இன ஒடுக்கு முறையுமே இவ்வெண்ணக்கருவின் முகிழ்பிற்கும், சர்ச்சைக் கும் உள்ளாவதற்கு அடிப்படைக் காரணமாகும். எனவே , இலங்கையில் ஒட்டுமொத்தமான வர்க்கப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்த நிலையையும், தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் தன்மையினையும், அதன் வளர்ச்சிப் போக்கினையும், இன்றைய நிலைப்பாட்டையும் புரிந்து கொள்ளாமல் அதில் நம்பிக்கை இழந்தோர், 'மலையக மக்கள் தனித்தேசிய இனம்" என்ற கோசத்தின் மூலம் அவர்களைத் தனிமைப் படுத்தி பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட உணர்வுகளை மழுங் கடித்துத் திசைதிருப்பி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தின் பிரித்தாளும் சதித் திட்டத்துக்கும் துணை போகின்றார்கள்.
Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction