செய்திகள் (5)
வியாழக்கிழமை, 05 December 2019 00:00
எதிர்கால தமிழர் அரசியலை இளைஞர்கள் ஊடாக முன்னெடுப்போம்!
Written by Super Userஈரோஸ் - ஈழப்புரட்சி அமைப்பினராகிய நாம் எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை இளையோரை உள்வாங்கி முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் எதிர்காலம் இனி இளையோர்களின் முன்னெடுப்பில் தான் தங்கியுள்ளது.
இளைஞர்களை அமைப்புக்குள் உள்வாங்கி அவர்களிடம் தலைமையை ஒப்படைப்பது காலத்தின் நிர்பந்தம் ஆகும். இதை ஊருக்கு உரக்க சொல்லும் வகையில் டிசம்பர் மாதம் 21,22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பிராந்திய ரீதியான மாநாடுகளை நடத்த உள்ளோம்.
எனவே, தமிழ் பேசும் இளையோர்களை எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை ஏற்க இணைந்திடுமாறு அறைக்கூவல் விடுக்கின்றோம்.
ஆர்வம் கொண்ட இளையோர்கள் கீழே உள்ள இணைய படிவத்தை நிரப்பி உங்களது தரவுகளை பதிவு செய்யுங்கள். நாம் தொடர்பு கொண்டு உரையாடுவோம்.
Published in
செய்திகள்
செவ்வாய்க்கிழமை, 19 November 2019 00:00
சகல இயக்க போராளிகளையும் நினைவுக் கூறும் நினைத்தூபி நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டது!
Written by Super User
ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த சகல இயக்க போராளிகளையும் நினைவு கூரும் நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஈரோஸ் அமைப்பின் தலைவர் தோழர் துசியந்தனின் தலைமையில் இன்று நடைப்பெற்றது.
வவுனியா கனராயன்குளத்திலிருக்கும் ஈரோஸ் அமைப்பின் இன்னுயிர் ஈந்தவர் நினைவு பூங்காவிலேயே இத்தூபி அமைக்கப்படவுள்ளது.
ஈழப்போராட்டக் காலங்களில் சகல போராட்ட இயக்கங்களையும் ஒன்றிணைக்க நாம் பலத்த முயற்சிகளை எடுத்திருந்தோம். எமது முயற்சியின் பலனாக சிறிது காலத்துக்கேனும் ஈழப்போராட்ட இயக்கங்கள், ஈழதேசிய விடுதலை முன்னணி எனும் ஐக்கிய முன்னணியாக ஒன்றுப்பட்டிருந்தன.
கடந்த சில வருடங்களாக எமது இன்னுயிர் ஈந்தவர் நினைவேந்தல் நிகழ்வை சகல இயக்கங்களையும் இணைத்தே நடத்தி வந்துள்ளோம்.
ஈழவர் விமோசனம் எமது ஐக்கிய பட்ட போராட்டதிலேயே தங்கியுள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட நாம், அதற்கு எப்போதும் செயல்வடிவம் கொடுக்கும் பண்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளோம்.
அதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக சகல இயக்க போராளிகளையும் நினைவு கூறும் தூபி அமைக்கப்படவுள்ளது.
அமைக்கப்படும் தூபியில் இயக்கங்களின் தலைவர்களுடைய உருவங்கள் பொறிக்கப்பட்டு தூபியின் மேல் இன்னுயிர் ஈர்த்தவர்களை நினைவகூருவதற்காக பொதுவான நினைவுச்சின்னமும் அமைக்கப்படும்.
இதற்கான நிதியுதவியை ஈரோஸ் அமைப்பின் மூத்த தோழரான கந்தசாமி (கொமினிஸ் கந்தசாமி என்று அழைக்கப்படும்) அவர்களின் புதல்வர் தோழர் பிரபாகரன் அவர்கள் வழங்கியுள்ளார்.
இன்றைய தினம் நடந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மாவீரர்களுக்கு சிறப்பான கார்த்திகை மாதத்தில் உயிர்த்தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகளையும் நினைவு கூறும் தூபியை அமைக்கு பணியை ஆரம்பித்தமை நிறைந்த திருப்தியை தருவதாக ஈரோஸ் தலைவர் தோழர் துசியந்தன் கருத்து வெளியிட்டார். மேலும், தூபி நிர்மான பணிகளை விரைந்து முன்னெடுத்து, அனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து திறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரோஸ் தோழர்கள் 29- 09 -2019 அன்று வவுனியா கண்ணாட்டி கிராம மக்களை சந்தித்தார்கள். கண்ணாட்டி ஈரோசின் தாய் வீடு போன்ற இடம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் போரட்டத்தில் ஈரோஸ் அமைப்பு இன்னுமொரு பரிமான கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில் எமது வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் தளமாகவும், களமாகவும் இருந்த கண்ணாட்டி கிராமத்தின் மக்களை சந்தித்து அவர்களின் உளபூர்மான அன்பை பெற்றிருக்கின்றோம்.
ஈரோஸ் அமைப்பு ஈழத்தில் காலூன்ற ஆரம்பித்த வேளை முதல் முதலாக செய்த குறிப்பிடதக்க அரசியல் வேலை, கண்ணாட்டி கிராமத்தில் பொதுவுடைமை கூட்டுறவு பண்னையை நிறுவியதாகும். முதல் முறை பேரினவாத அடாவடிகளால் பாதிக்கப்பட்ட வடமத்திய மாகாணத்தை சேர்ந்த 5 குடும்பங்கள் இப்பண்ணைக்கு அழைத்து வரப்பட்டார்கள். அதனை தொடர்ந்து பல குடும்பங்களும், ஈரோஸ் தோழர்களும் இப்பண்ணைக்கு வந்து விரிவு படுத்தினார்கள். ஈரோஸ் தோழர்கள் மாத்திரமல்லாத ஏனைய இயக்கங்களின் தோழர்களும் இந்த பண்ணையின் மடியில் தவழ்ந்து வளர்ந்திருக்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கூட பல தடவைகள் கண்ணாட்டி பண்னைக்கு வந்து சென்றுள்ளார்.
இத்தகைய பெருமை மிகு பின்னணியை கண்ணாட்டி கிராமத்துக்கு ஈரோஸ் மீதிருக்கும் உரிமையை போல் ஈரோசினராகிய எமக்கும் அதிக உரிமையும், பொறுப்பும் இருக்கின்றது. எனவே தான், புது வேகமும், புதிய பரிமானமும் எடுத்திருக்கும் நாம் முதல் கண்ணாட்டியிலிருந்து எமது பாய்ச்சலை ஆரம்பித்திருக்கின்றோம்.
ஈழவர் சனநாயக முன்னணியின் தேசிய அமைப்பாளர் தோழர் மாணிக்கம் ஜெகன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் தோழர் சசிதரன், தோழர் மயுரன். தோழர் எடின் ஆகியேர் அடங்கிய குழுவினர் கண்ணாட்டி மக்களை சந்தித்திருந்தார்கள்.
கண்ணாட்டி மக்களுடன் பழைய நினைவுகளை மீட்தோடு, கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தோழர்கள் கேட்டறிந்தார்கள். மேலும் சமகால அரசியல் நிலவரங்கள், ஈரோசின் செயல்பாடுகள் தொடர்பான காத்திரமானதொரு கலந்துரையாடலும் நடந்தது.
கண்ணாட்டி கிராம இளைஞர்கள் முன்னதாக கேட்டுக் கொண்டதற்கு இணங்க விளையாட்டு உபகரணங்கள் தோழர்களால் வழங்கி வைக்கப்பட்டது. மேலும், கிராமத்து இளைஞர்களின் தமக்கு ஒரு விளையாட்டு மைதானம் தேவை எனக் கோரினார்கள். விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கண்ணாட்டியில் ஈரோஸ் வீழ்த்தப்பட்டதாகவும், வீழ்ந்ததாகவும் சரித்திரமில்லை. கண்ணாட்டியில் பலமுறை எம்மை அழிப்பதறகான முயற்சிகள் நடந்தது. அச்சுறுறத்தல்கள் எழுந்தது. எல்லாவற்றையும் எதிர்கொண்டே ஈரோஸ் எழுச்சிக் கண்டது. இனியும் எழுச்சிக் காணும்…. கண்ணாட்டி மக்களின் பேராதரவுடன் !

புதன்கிழமை, 04 September 2019 00:00
ஈரோஸ் - பொதுஜன முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம்
Written by Super User
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது சனாதிபதியை தெரிவு செய்ய நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ஈரோஸ் அமைப்புக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜீலை 26 ஆம் எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஈரோஸ் தலைவர் சரவணபவாநந்தன் துசியந்தன் மற்றும் பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவம்சம் ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் சமூகத்தின் அபிவிருத்தி, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமாலாக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறல், மலையக தமிழர்களின் காணியுரிமை, குடியேற்ற பிரச்சினைகள், காணி விடுவிப்பு, தொல்பொருள் திணைகளத்தின் அத்துமீறல்கள் ஆகிய விடயங்களில் ஈரோசின் கோரிக்கைகளுக்கு பொதுஜன முன்னணி வழங்கிய சாதகமான உறுதிமொழிகளின் பிரகாரமே, இருகட்சிகளுக்கும் இடையில் சனாதிபதி தேர்தலில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் கருத்து வெளியிட்ட ஈரோஸ் தலைவர் தோழர் துசியந்தன் அவர்கள், ‘தமிழ் பேசும் மக்கள் தொலைத்தவற்றை தொலைத்த இடத்திலேயே தேடி திரும்ப பெற வேண்டும்;’ எனவும், ‘சனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவளித்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஏமாற்றிய வந்துள்ளார்கள், அவர்களை கையாளும் அரசியல் வியூகம் தமிழ் தரப்புக்கு இருக்கவில்லை, ஈரோஸ் அமைப்பு வெற்றி பெற போகும் பொதுஜன முன்னணி வேட்பாளரை கையாளும் அரசியல் உத்திகளுடனேயே, ஒத்துழைப்பு நல்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது’ எனவும் தெரிவித்தார். மேலும், ‘இது முற்றிலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நலன் கருதிய அரசியல் ரீதியான முடிவு’ எனவும், ‘குறித்த புரி ந்துணர்வு ஒப்பந்தம் சனாதிபதி தேர்தலுக்கானது மாத்திரமே’ எனவும் தெரிவித்தார்.
Published in
செய்திகள்
திங்கட்கிழமை, 02 September 2019 00:00
ஈரோஸ் - பொதுஜன முன்னணி இடையில் விசேட சந்திப்பு
Written by Super User
எ
திர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடக்கு – கிழக்கு – மலையகம் வாழ் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் மற்றும் சனாதிபதி தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக ஈழப்புரட்சி அமைப்புக்கும் (ஈரோஸ்), சிறிலங்கா பொதுசன முன்னணிக்கும் இடையில் விசேட சந்திப்பும், கலந்துரையாடலும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி இடம்பெற்றது.
வவுனியா பூந்தோட்டத்திலிருக்கும் ஈரோஸ் தலைமை பணிமனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஈரோஸ் அமைப்பின் சார்பில் பொதுச் செயலாளர் நகுலேஸ்வரன் தலைமையில் ஒன்பது மாவட்டங்களின் அமைப்பாளர்கள் இ மாவட்ட குழு உறுப்பினர்கள் என நூறு பேர் கலந்து கொண்டிருந்தார்கள்.
சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுமதிபால, முன்னாள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரட்ன, பாராளுமன்ற உறுப்பினரும் பசில் ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர் தேவபிரிய அபேசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுரத்த ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இச் சந்திப்பில் சனாதிபதி தேர்தல் தொடர்பாகச் சிறிலங்கா பொதுஜன முன்னணி பிரமுகர்கள் கருத்துரை வழங்கி பின்னர் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகள், அபிலாசைகள் தொடர்பாக ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களால் கேள்விகள் முன்வைக்கப்பட்டுக் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது நீண்ட கால பிரச்சினையாகவிருக்கும் ;தேசிய இனமுரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. குறிப்பாக யுத்த காலங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் சிங்களமயமாக்கல், தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடிகள் மலையக மக்களின் காணி உரிமை போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
எதிர்வரும் நாட்களில் இந்த விவகாரங்கள் தொடர்பாகச் சனாதிபதி வேட்பாளர் கோட்டபாய இராபக்சஇ மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவா மகிந்த இராபக்சவுக்கும் ஈரோஸ் பிரமுகர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்றை நடத்துவது எனவும், தேர்தல் பிரச்சார விடயங்கள் மாவட்ட ரீதியிலான பிரச்சினைகளை ஆராய மாவட்ட மட்டத்திலான கலந்துரையாடல்களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் பிரச்சாரங்களுக்குப் புறம்பாக தென்பகுதி இளைய சமூகத்துடன் தமிழ் இளைஞர்கள் தமது தேசிய அரசியல் அபிலாசைகள், போராட்டம் தொடர்பாக வெளிப்படையான திறந்த உரையாடல்களை நடத்த ஏற்பாடு செய்வது எனவும், இவ்வாறான தெளிவுபடுத்தல் உரையாடல்களைத் தொடர்ச்சியாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கடந்த மாதம் எதிர்வரும் சனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாகவும், தமிழ் பேசும் மக்கள் தொடர்பான கோரிக்கைகள் தொடர்பாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஈரோஸ் தலைவர் சரவணபவாநந்தன் துசியந்தன் அவர்களுக்கும் சிறிலங்கா பொதுசன முன்னணியின் செயலாளர் சாகர காரியவம்ச அவர்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்தே மேற்குறித்த விசேட சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.
Published in
செய்திகள்