நிகழ்வுகள்

நிகழ்வுகள் (4)

முள்ளிவாய்க்கால் மௌனிப்புக்கு பின்னரான தமிழர்தம் அரசியல் அபிலாசைகளை வெல்லும் வகையில் மக்கள் வாக்குகளைப் பெற்ற எந்த அரசியல் தலைமைகளும் முன்னெடுக்கவில்லை.மக்களின் துன்பகரமான வாழ்க்கை முன்பு இருந்த்தை விட இன்னும் மோசமான நிலமைக்கே போய்க் கொண்டு இருக்கிறது.தற்போதைய அரசியல் செயற்பாடானதை சுயநலமிக்க கட்சிசார் நலத்தை முன்னிலைப்படுத்தியே காணப்படுகிறது.இந்திலையில் மீண்டும் தேர்தல் வரப் போகும் சூழ்நிலை ஒருபக்கம்..யாருக்கு வாக்களிப்பது என்பதில் முடிவு எடுக்க முடியாத நிலையில் தமிழ் மக்கள்..வாழ்க்கை செலவு நாளாந்தம் அதிகரித்து வருகிறது.

இதுவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கவில்லை.தமிழர்தம் நிலங்கள் இராணுவ பிடியிலிருந்து இன்னும் விடுவிக்கப்பட்வில்லை.சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலை பேசப்படவில்லை. முன்னாள் விடுதலைப் புலிகள் போராளிகளின் சமுக வாழ்வில் மாற்றம் ஏற்படவில்லை.

எனவே அரசியலுக்கு அப்பால் இவை அனைத்தும் பேசப்படவேண்டும் .இதை வலியிறுத்தி யாழ் முற்றவெளியில் எதிர்வரும் 16/09/2019 திங்கள் காலை 9 மணிக்கு பேரலையாக மக்கள் அனைவரும் அணிதிரண்டு உலக அரங்கில. ஒரிக்கும் வரைக்கும் குரல் கொடுக்கும் எழுக தமிழ் மக்கள் பேரலைக்கு ஈழப்புரட்சி அமைப்பு ஈரோஸ் தனது ஆதரவை தெரிவிக்கிறது .எம்தேச மக்களே அணிதிரண்டெழுந்து தேச நலனுக்காய் குரல் கொடுக்க அழைக்கிறோம்.

நாம் ஈழவர் - நமது மொழி தமிழ் - நம் நாடு ஈழம்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நீண்டக்காலமாக போராடி வரும் மக்களுக்கு வலு சேர்க்கு; விதமாகவும், ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈரோஸ் அமைப்புதொடர் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றது. படங்களில் வவுனியாவில் நடைப்பெற்ற போராட்டங்களில் ஈரோஸ் தோழர்கள் உணர்வு பூர்வமாக பங்கேற்றிருப்பதைக் காணலாம்.
ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பிலும், மட்டகளப்பிலும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு ஈரோஸ் அமைப்பினால் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஈரோசின் வவுனியா தலைமைக் காரியாலத்தில் தேசிய அமைப்பாளர் தோழர் ஜெகன் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்வில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிரான கண்டனம் வெளியிடப்பட்டது.
செவ்வாய்க்கிழமை, 27 ஆகஸ்ட் 2019 00:00

இன்னுயிர் ஈந்தவர் நினைவேந்தல் -2019

Written by
ஈழவிடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய ஈரோஸ் தோழர்களை நினைவுக்கூறும் நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஜுலை மாதம் 22ம் நாள் சக தோழர்கள், உறவுகள், பொதுமக்களின் பங்கேற்புடன் உணர்வுபூர்வமாக நடந்தேறியது. வவுனியா கனராயன்குளம் பிரதேசத்தில் குறிக்குட்வான் கிராமத்தில் ஏ9 வீதிக் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுப் பூங்காவில் இந்நிகழ்வு நடைப்பெற்றது. ஈழப் போராட்டத்தில் உயிர்தியாகம் செய்த தோழர்களை ஏனைய இயக்கங்கள் எல்லாம் நினைவுக் கூர்ந்து வந்த போதும், ஈரோஸ் அமைப்பு அவ்வாறான நினைவுக்கூறல்களை செய்திருக்கவில்லை. இம்மனக்குறையை போக்கி, ஈழவரின் விமோசனத்துக்காக ஈரோஸ் தோழர்கள் செய்த தியாகங்களை நினைவுகூரும் வகையிலும், அவர்தம் இதயவேட்கையை ஈடேற்றும் பாதைக்கு உந்துதல் தரும் வகையிலும் தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும், இந்நினைவுக் கூறல் நடத்தப்பட்டிருக்கின்றது.
Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction