சனிக்கிழமை, 12 January 2019 00:00

ஈரோசும் இசுலாமியரும்

Written by 
Rate this item
(0 votes)
ஈழவர்களை பிரதேச, மத வாரியாக பிளவுப் படுத்துவதை சாதித்திருக்கும் பேரினவாதிகள் மென்மேலும் எம்மை துண்டாட பிரயத்தனம் செய்து வருகின்றார்கள். பிரித்தாளும் சூழ்ச்சி களை முறியடித்து, ஒருமைப்பாட்டை கட்டி எழுப்புவதற்கு, விடயங்களை தத்துவாhத்த ரீதிரியலும், வரலாற்று ரீதியிலும் ஆய்ந்தறி ந்து சரியான கண்ணோட்டத்தை வகுத்து கொள்வது அவசியமானதாகும் அந்த வகையில் ஈழப்புரட்சி அமைப்பு ஈழப்பிர தேசமெங்கும் கால்பரப்பி செயல்பட்ட காலம் (1975 - 90) தொட்டே இசுலாமியர்கள் குறித்த தெளிவான பார்வையைக் கொண்டிருந்தது. வரலாற்றுக் காலம் முதல் இலங்கை வாழ் இசுலாமியர்கள் வர்த்தக சமுதாயம் என்று கருதப்பட்டு வந்த போதிலும், உண்மையில் மொத்த இசுலாமியர்களின் சனத்தொகையில் வர்த்தகர்கள் எனக் கூறக் கூடியவர்கள் 5 சதவீதம் கூட இல்லை எனலாம். இலங்கை அரசியலைப் பொறுத்த வரையில் பொதுவாக இசுலாமியர்கள் என்றவுடனே, பிரித்தானிய காலனிய காலகட்டத்தில் சேர் வாப்பிச்சை மரைக்காயர், சேர் முகம்மது மாக்கான். அல் ஹாஜ் டி.பி. ஜாயா, அல்ஹாஜ் அப்துல் கபூர், அல்லாஹ் ஹமீம் போன்றோரையும், சுதந்திர த்துக்குப் பிற்பட்ட காலகட்டத்தில் அவர்களின் வாரிசுகளான, சேர். ராசிக் பரீத், அல்ஹாஜ் மாக்கான் மரைக்கார், அல்லாஜ் கிச்சிலான், அல்லாஜ் எம்.எச். முகம்மது, அல்ஹாஜ் முகம்மது ஹமீம், ஜனாப் ஹலீ இஷ்ஹாக், அல்லாஹ் பளீல் அப்துல் கபூர், அல்லாஹ் அப்துல் கபூர் போன்றோரையும் மனதிற் கொண்டே நோக்கும் நிலை வழக்கிலிருந்தது. கொழும்பை மையமாக வைத்து இரத்தினக் கல், மேலும் இதுசார்ந்த முதலீட்டில் ஈடுப்பட்டி ருந்த இவர்களே இசுலாமிய மக்களது ஏக போக பிரதிநிதிகளாகத் தம்மைத் தாமே மாற்றிக் கொண்டார்கள். ஆரம்ப காலங்களில் இவர்களது ஆதிக்கம் பெருமளவு இருந்த போதும் 1950களின் பின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இத்தலைமையின் ஆதிக் கத்தில் தளர்வைக் கொடுத்தது. 1950களில் கல்லோயா குடியேற்றத் திட்டம், அபிவிருத்தி என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்களுக்கு இடமளித்த போது திரு கோணமலையிலும், அம்பாறையிலும் தமிழர சுக் கட்சி நிலப்பறிப்பு அபாயத்தை வெளிப் படுத்தத் தொடங்கியது. இக்காலங்களில் கல் முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திரு கோணமலைப் பகுதிகளில் இக்கட்சி செய்த பிரச்சாரத்தினால் இசுலாமியர்களும் தம் எதிர் காலத்தின் அபாயத்தை உணரத் தொடங் கினர். இதனால் கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இசுலாமியர்கள் அரசியல் பிரவேசம் செய்யத் தொடங்கினர். இவ்வாறு, பரந்து வாழ்ந்த இசுலாமியர்கள் தத்தமது பிரதேசங்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி அரசியல் தலைமையை உரு வாக்க விளைந்ததால் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் பிரதேச ரீதியான பிரச்சினை களை மையப்படுத்தியதால் கொழும்பு வர்த்த கத் தலைமை ஆட்டங் காணத் தொடங்கியது. இதன் காரணமாகவே இலங்கைவாழ் இசுலாமி யர்களின் ஏகத் தலைவர் என வர்ணிக்கப்பட்ட சேர். ராசிக் பரீத் 1960ல் பொத்துவில் தொகுதி யில் தோற்கடிக்கப்பட்டார். இதே போன்று அல்ஹாஜ் மாக்கான் மாக்கார் 1965ல் நடந்த பொதுத் தேர்தலில் மட்டகளப்பில் தோற்றார் இவ் வரலாற்றுப் பின்னணி இசுலாமியர்களின் பிரதேச ரீதியான அரசியல் விழிப்புணர்வையே உணர்த்தி நிற்கிறது. இதன் காரணமாகவே பின்னர் உருவாகிய குறிப்பாகக் கிழக்கு மாகா ணத்தலைமை தாம் வாழும் பிரதேசத்தின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினை களை மையப்படுத்த ஆரம்பித்தது. இவ்வடிப்ப டையில் அல்ஹாஜ் காரியப்பர். அல்லாஹாஜ் முகம்மது அலி, ஜனாப் அப்துல் மஜீத், ஜனாப் முஸ்தபா, ஜனாப் எம். அப்துல் மஜீத், ஜனாப் எம்.சி.அகமது போன்றோர் தந்தை செல்வ நாயகத்தின் தமிழரசு கட்சியில் சேர்ந்தே உருவானார்கள். ஆயினும், 1965ம் ஆண்டில் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்;டமைத்து ஆட்சி செய்ய விழைந்தது முதல் குடியேற்ற பாதிப்புகள் மீது அதிக அக்கறை காட்டாது நழுவத் தொடங்கி, இசுலாமியரின் ஆதரவை விரைவாக இழந்து போனது. தமிழரசுக் கட்சியின் இந்தப் பலவீனத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய ஆட்சி யாளர்கள் இசுலாமியரின் செயலிழந்திருந்த கொழும்புத் தலைமையை மீண்டும் தூக்கி நிறுத்தினார்கள் இவ்வரசியல் மந்த நிலை யில் புதிதாக உருவாகிய கிழக்கு மாகாண அரசியல் தலைமையும் கொழும்பை மையப் படுத்தி முதலீட்டில் ஈடுப்படத் தொடங்கியது. இருந்த போதிலும் இசுலாமியர்களை பொறு த்த வரையில் பிரச்சினைகளை எவ்வாறு பூசிமெழுகினாலும் உள்ளக முரண்பாடுகள் கொழுந்து விட்டெரிந்துக் கொண்டிருந்தன. 1970-77 வரை கலாநிதி அல்லாஹ் பதீயுதின் மஹ்முத் கல்வி அமைச்சராக இருந்த காலத் திலேயே நாடு முழுவதும் 19 தடவைகள் இசுலாமியர்கள் மீது சிங்கள காடையர்களும், இராணுவமும் ஏவிவிடப்பட்டு பலத்த உயிர், பொருட் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. புத்தளத்தில் பொலிஸ் அத்தியட்சகராக ஜனாப் அப்துல் கபூரும், அத்தொகுதி பாராளு மன்ற உறுப்பினராக அசன்ருத்துசும் இருக் கையிலேயே பொலிஸ் காடையர்கள் புத்த ளம் ஜூம்மாப் பள்ளி வாசலுக்குள் துப்பாக் கிப் பிரயோகம் செய்தன் மூலம் பலரைக் கொலை செய்தார்கள். அதே ஆண்டில் கொம்பனித் தெருவில் நடந்த ஒரு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர். இவ்வாறான பல சம்பவங்கள் காலி, மடவல, கம்பளை, கண்டி, போன்ற இடங்களில் நடந்தன. அடுக்கடுக்காய் நிகழ்ந்த அச்சம்பவங்கள் காரணமாக கடும் அதிருப்தியுற்ற இசுலாமியர் கள் தமது சந்தர்ப்பவாத பிரதிநிதிகள் மீது மீண்டும் வெறுப்புற்றிருந்த நேரத்தில், வட பகுதி இளைஞர்களின் விழிப்புணர்வு புதிய நம்பிக்கையை கொடுத்திருந்தது. 1970களில் உருவாகிக் கொண்டிருந்த ஆயுதப் போரட்ட த்தை மையப்படுத்திய ஈழத்தலைமையை உன்னிப்பாக அவதானித்து வந்த இசுலாமிய இளைஞர்கள் தமது தனித்துவத்தை பேணுவ துடன் உமைமைப்பாட்டுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதில் நாட்டங்கொள்ளலாயினர். ஆயுதப் போராட்டத்தை மையப்படுத்திய தமிழ் இளைஞர்கள் மார்க்சிச - லெனினிச வழியில் ஈழவர்களின் பிரச்சினைகளை அணுகியதுடன் மிதவாத முதலாளி வர்க்க யாழ்ப்பாணத் தலைமையைத் தூக்கி எறிந்ததோடு இசுலா மியர்களுக்கும் மலையக மக்களுக்கும், மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்குமுள்ள பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாக அணுகத் தொடங்கினார்கள். மிதவாத தலைமை மக்களு க்கு இழைத்து வந்த பாரபட்சங்களையும் மற்றும் சாதிப் பிரச்சினை போன்றவற்றையும் அம்பலப்படுத்தியதோடு அவர்களின் இதர பிரச்சினைகளையும் ஆராயவிழைந்தனர். இந்த அடிப்படையில் அவ் இளைஞர்கள் மத, பிரதேச, வேறுபாடுகளுக்கு ஆட்படாது மலை யக தமிழர்களுக்கும், இசுலாமியருக்கும் ஏற் பட்ட பாதிப்புக்களை கவனத்தில் கொண்டு செயல்பட ஆரம்பித்தனர். 1972ல் சிவகுமாரன் உட்பட 10 இளைஞர்கள் மலையகம் சென்று நிலைமைகளை அறிந்து பிரச்சாரம் செய்ததும், கிழக்கு மாகாணத்தில் சேருவாவல, தீகவாபி, சம்மாந்துறை, கல்முனை, புத்தளம் போன்ற இடங்களில் இசுலாமியரது பிரச்சினைகளை கருத்தரங்குகள் வாயிலாக விளக்க முற் பட்டதும் இதன் ஆரம்பமே. இந்த நிகழ்வுகள் இசுலாமிய இளைஞர் மட்டத் தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொழும்பை மையமிட்ட இசுலாமிய பிரதிநிதிகளது வலிந்த தலைமையை மீண்டும் நிராகரிக்க வைத்தது. இவர்கள் தமது செயற்பாட்டுக்காக 'முசுலிம் ஐக்கிய முன்னணியை" உருவாக்கலாயினர். இம் முன்னணி, தமிழீழக் கோரிக்கையை முன் வைத்து தேர்தல் களத்துக்கு வந்த தமிழர் கூட்டணியுடன் ஒப்பந்தம் செய்து தேர்தலில் நின்றது. இத் தேர்தலில் வேட்பாளராக நின்ற வர்களில் ஜனாப் இலியாஸ் குறிப்பிடதக்கவர்.புத்தளத்தில் போட்டியிட்ட இவர் வெற்றி பெறா விட்டாலும் கொழும்புத் தலைமையை முன் நின்று நிராகரித்தவராவார். கொழும்பு வர்த்தகத் தலைமையானது இசு லாமியர்களை ஒடுக்கும் சிங்கள பேரினவாத அரசுக்குத் துணை போனதோடு சர்வதேச இசுலாமியர்களின் விரோதியும் சர்வதேச மனிதகுல பொது எதிரியும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஏவல் நாய்களுமான இசுரேலிய சியோனிசவாதிகளுக்கும் துணை போனமை யானது வேதனைக்குரியதாகும். இக்கொடும் செயலுக்கு தலைமை தாங்கியவர் அப்போது அமைச்சராகவிருந்த அல்லாஹ் எம்.எச்.முகம் மது அவர்களேயாவார். இவர் வெறிநாய்களு க்குத் துணை போனதும் அவர்களின் நலன் காப்பதிலும் நீண்டகால அனுபவத்தை கொண் டவர். 1960 களில் கொழும்பு மேயராக இருந்த போது இசுரேலுக்கு விஜயம் செய்து சர்வதேச இசுலாமியர்களை காட்டிக் கொடுத்து உலக மக்களின் அவமானச் சின்னமானவர். இத்தகைய பெருந்தகைதான் 1985ல் நடந்த ~இந்து இசுலாமிய மத கலவரத்தை| வெறிக் கொண்டு நாடாத்தியவரும் ஆவார். 1985-01-21 அன்று கொழும்பில் லங்கா ஒபராய் எனும் பெயரில் இயங்கிய ஹோட்டலில் அமைச்சர் முகமது, மொசாட்டின் முக்கிய புள்ளியான அவ்வறகாம் சோபி (யுஎயசாயஅ ஓழகi)யைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மேற்க்கூறிய கலவரத்திற்கு முன் கொள்ளு பிட்டியிலிருந்த அமெரிக்க தூதரகத்தின் முன்பாக இயங்கிய இசுரேல் நலன் காக்கும் பிரிவிற்கும் பல தடவைகள் சென்று ஆலோ சனை பெற்றிருந்ததும் குறிப்பிடதக்கது. இசுலாமிய ~பிரதிநிதிகள்| என்று சொல்லிக் கொண்டவர்கள் இவ்வாறு ஒரு புறமிருக்க இசு லாமிய இளைஞர்களைக் கொண்ட ~தீவிர வலதுசாரி| அமைப்பொன்றும் கொடுங்கோலன் ஜெயவர்த்தனவால் உருவாக்கப்பட்டது. தவ றாக வழிநடத்தப்பட்ட இசுலாமிய இளைஞர் களுக்கு ஆயுதப் பயிற்சியும், ஆயுதங்களும் சிறிலங்கா இராணுவத்தால் வழங்கப்பட்டு 'ஜிகாத்" எனும் பெயரில் அமைப்பு வடிவம் கொடுக்கப்பட்டது. இவர்களே இந்துகளுக் கும், கத்தோலிக்கர்களுக்கும் எதிராக தூண்டி விடப்பட்டு கலவரத்தை நடத்துவதற்கு அர சால் பயன்படுத்தப்பட்டார்கள். இது தமிழ் பேசும் மக்களை தமக்குள் மோதவிட்டு பலவீனமா க்க ஆட்சியாளர்கள் செய்த சதி என்பது வெளி ப்படையானது. அதே வேளையில் ஆழ்ந்த அரசியல் கோட்பாடுகள் எதுவும் இன்றி வெற்று இராணுவ வேட்டுகளிலே ஆர்வம் கொண்டு குறை பிரசவமடைந்து, ~விடுதலை இயக்கம்| என்று கூறிக்கொண்ட வேறு சிலரும் இந்த கலவரங்களுக்கு காரணமாகயிருந்தனர். புத்தளம், காலி, கொழும்பு, கண்டி, மடவெல, திருகோணமலை, தீகவாபி, கொம்பணாச்சி போன்ற இடங்களில் தலைவிரித்தாடிய இன வெறிக்கும், பொருள் கொள்ளைக்கும் பதில் கூறமுடியாது கைவிரித்த கொழும்பு வர்த்தக தலைமை, இறுதியாக கொழும்பு வர்த்தகர்களின் பதவிகள் பறிக்கப்பட்ட போதும், கோட்டாக்களில் பாரபட்சம் காட்டப் பட்ட போதும், சபாநாயகராக இருந்த அல் ஹாஜ் பாக்கீர் மாக்கார் தூக்கியெறியப்பட்ட போதும் , இந்த முதலாளித்து தலைமையானது கையால் ஆகாத வாய் மூடி மௌனியாக இருந்ததை வரலாறு மன்னிக்கவே, மறக்கவோ செய்யாது. உண்மை என்னவென்றால் பரந்து பட்டு வாழும் சாதாரண தமிழ் மக்களை தமிழர் விடுதலைக் கூட்டணி;யும் அதன் சகாக்களும் பிரதிநிதித்து வப்படுத்தாதது போலவே தான், முஸ்லிம் தலைமை என கூறிக் கொண்டோரும் சாதாரண இசுலாமிய மக்களை பிரதிநிதித்துவப் படுத்தி இருக்கவில்லை. இசுலாமிய முற்போக்கு இயக்கங்களும் இதே அடிப்டையிலான ஆய்வுகளை வெளிப்படுத்தி யிருந்ததும் இங்கு குறிப்பிடதக்கது. அன்று வெளிவந்த 'அல்ஹ்ஸநாத்" எனும் இதழ் பின்வருமாரு அறைகூவல் விடுத்திருந்தது. '... தூர நோக்கோடு தமிழ்-முசுலீம் இளைஞர் கள் செயல்பட வேண்டும். ஏனெனில் இரண்டு சிறுபான்மை சமூகங்களின் வீழ்ச்சியானது, இரு சமூகத்தவரும் விரும்பாத, பலரும் வருந்ததக்க பல விளைவுகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து விட முடியும். ஏற்கனவே கொடும் மனம் படைத்தோர் அத்தகைய முயற்சிகளுக்கு வித்திட்டு செயற்பட்டு வரு வதை அல்ஹ்ஸநாத் மூலம் நாம் பல முறை எச்சரித்து வந்துள்ளோம். அப்படி ஒரு நிலை தோன்றுமானால் ஒரு தமிழனோ அல்லது முசுலிமோ எந்த பெரிய இலாபத்தையும் அடையப் போவதுமில்லை. மாறாக மாற்றா ரிடம் எதுவித நிபந்தனையுமின்றி மண்டியிட்டு வாழும் நிலையயை உருவாக்கி விட முடியும். அதன் பின் கவலைப்படுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை..." 'அல்ஹ்ஸநாத்" இதழ் அன்றே நிலைமை களை ஆராய்ந்து விடுத்திருந்த எச்சர்pக் கையை கருத்திலெடுக்காமையின் விளைவு களாகவே இன்றைய மத அடிப்படையிலான பிரிவினையும் ஒடுக்குமுறையும், ஆறாத வடுக்களையும் மாறாத காயங்களையும் விதைத்து வளர்ந்திருக்கிறது. இன்றும் ரவூப் ஹக்கீPம், ரிசாத் பதியுதின், எச்.எம். மரிக்கார், பைசர் முஸ்தபா, பௌசி என முகங்கள் மாறியிருந்தாலும் நிலைமை கள் எதுவும் மாறிடவில்லை. எனவே தொடர்ந் தும் விழுந்த குழியிலேயே விழுந்துக் கொண் டிருப்போமாயின் மீண்டும் எழுந்திட முடியாம லேயே போகலாம். வரலாற்றை வழிக்காட்டி யாக கொண்டு சரியான பாதையில் செல்வதே நல் எதிர்காலத்திற்கு உசிதமானது. எனினும், ஈழவர்களின் உமைப்பாட்டு போராட் டத்தில் இஸ்லாமியரின் பங்குபற்றியும், அது எந்தளவில் இசுலாமிய சமூகத்தின் பிரச்சி னைகளை தீர்த்து வைக்கும் என்பதிலும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஈழப் புரட்சி அமைப்பானது வர்க்க அடிப்படை யில் - வடக்கு, கிழக்கு, மலையகம், இஸ்லா மிய, கிறிஸ்தவ, இந்து - எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து அதாவது ஈழவர்கள் என்ற அடிப்படையில் ஒரு பாட்டாளி வர்க்க தலை மையை தோற்றுவிப்பதில் தெளிவான நிலைப் பாட்டைக் கொண்டிருக்கின்றது. இசுலாமியர் களை போராட்டதினூடாக தாபன மயப்படுத்தி அவர்களது அபிலாசைகளை, அவர்களது தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கும் ஈழவர் என்ற அடிப்படையில் உருவாகும். கூட்டுத் தலைமையை உருவாக்குவதே ஈரோசின் கண்ணோட்டமாகும். எனவே தான் ஈழவர்களை மக்கள் - மொழி - தேசம் என்ற அடிப்படையில் தட்டியெழுப்பி, உடைமைப்பாட்டுக்கான போராட்டத்தை, நாம் ஈழவர், நமது மொழி, நம் தேசம் ஈழம் என கட்டியெழுப்பி வருகின்றோம்.
Read 283 times

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction