புதன்கிழமை, 04 September 2019 00:00

ஈரோஸ் - பொதுஜன முன்னணி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Written by 
Rate this item
(0 votes)
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது சனாதிபதியை தெரிவு செய்ய நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ஈரோஸ் அமைப்புக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜீலை 26 ஆம் எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஈரோஸ் தலைவர் சரவணபவாநந்தன் துசியந்தன் மற்றும் பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவம்சம் ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தமிழ் பேசும் சமூகத்தின் அபிவிருத்தி, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமாலாக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறல், மலையக தமிழர்களின் காணியுரிமை, குடியேற்ற பிரச்சினைகள், காணி விடுவிப்பு, தொல்பொருள் திணைகளத்தின் அத்துமீறல்கள் ஆகிய விடயங்களில் ஈரோசின் கோரிக்கைகளுக்கு பொதுஜன முன்னணி வழங்கிய சாதகமான உறுதிமொழிகளின் பிரகாரமே, இருகட்சிகளுக்கும் இடையில் சனாதிபதி தேர்தலில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் கருத்து வெளியிட்ட ஈரோஸ் தலைவர் தோழர் துசியந்தன் அவர்கள், ‘தமிழ் பேசும் மக்கள் தொலைத்தவற்றை தொலைத்த இடத்திலேயே தேடி திரும்ப பெற வேண்டும்;’ எனவும், ‘சனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆதரவளித்து வெற்றி பெற்ற வேட்பாளர்கள் ஏமாற்றிய வந்துள்ளார்கள், அவர்களை கையாளும் அரசியல் வியூகம் தமிழ் தரப்புக்கு இருக்கவில்லை, ஈரோஸ் அமைப்பு வெற்றி பெற போகும் பொதுஜன முன்னணி வேட்பாளரை கையாளும் அரசியல் உத்திகளுடனேயே, ஒத்துழைப்பு நல்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது’ எனவும் தெரிவித்தார். மேலும், ‘இது முற்றிலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் நலன் கருதிய அரசியல் ரீதியான முடிவு’ எனவும், ‘குறித்த புரி ந்துணர்வு ஒப்பந்தம் சனாதிபதி தேர்தலுக்கானது மாத்திரமே’ எனவும் தெரிவித்தார்.
Read 309 times Last modified on செவ்வாய்க்கிழமை, 01 October 2019 17:29

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction