செவ்வாய்க்கிழமை, 27 August 2019 00:00

இலங்கை எங்கே போகிறது?

Written by 
Rate this item
(0 votes)
அபிவிருத்தி குறித்து திரிகரண சுத்தியுடன் சிந்திக்கும் எந்த தரப்பும், இலங்கையின் பொருளாதாரத்தின் நிலைப்பற்றி கவலைக் கொள்ளாமல் இருக்கமுடியாது. அதிக வட்டிக்கு கடன்வாங்கி சீர்குலைந்த குடும்பத்தின் நிலைபோல் ஆகியுள்ளது இலங்கையின் பொருளாதார நிலை. 2019 சனவரி 15 திகதிக்கு நாம் வெளிநாடுகளுக்கு குறைந்தபட்சம் 100 கோடி அமெரிக்க டொலரை கடன் தவனையாக செலுத்த தேடியாக வேண்டும். 2017ம் டிசம்பர் 31 ம் திகதியன்று இலங்கை 5800 அமெரிக்க கோடி டொலர் கடன்பட்டிருக்கின்றது. இதில் 505 கோடி அமெரிக்க டொலர்கள் மகிந்த ராசபக்சவின் ஆட்சிக் காலத்தில் வாங்கிய கடனாகும். இந்த கடனை எல்லாம் அமெரிக்க டொலர்களிலே செலுத்த வேண்டும். ஒரு அமெரிக்க டொலருக்கு, இலங்கை ரூபாயில் செலுத்த வேண்டிய தொகை அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்றைய நிலை யில் ஒரு டொலருக்கு இலங்கை ரூபாயில் 180 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகை அடுத்த வருட ஆரம்பத்தில் 200 ரூபாய் வரை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது. இவ்வாறு டொலரின் பெறுமதி அதிகரித்தால் இன்றைய நிலவரப்படி ஒரு டொலர் கடனை செலுத்த 180 ரூபாய் கொடுக்க வேண்டுமெனில் சனவரி மாதமளவில் 200 ரூபாய் கொடுக்க நேரிடும். 1953 ஆம் ஆண்டு ஒரு டொலருக்கு கொடுக்க வேண்டிய விலை நான்கு ரூபாய் 76 சதமாக இருந்தது. இரண்டு பெரும் சிங்கள தேசிய வாத கட்சிகள், தமிழ் பேசும் வலதுசாரி தரப்புகளுடன் இணைந்து ஆட்சி நடத்திய ஆறு தசாப்த காலங்களின் பின்னர் டொலரின் விலை 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இன்று உலக நாடுகள் சந்தையினால், இணைக்கப்பட்டுள்ளது. எந்த நாடும் உலக சந்தiயில் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுப்படாமல் தனித்து இயங்க முடியாது. உலக சந்தையுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் அமெரிக்க டொலரே பணமாக பயன்படுத்தப்படுகின்றது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த நிலையை நாம் அனுசரித்து தான் போக வேண்டும். எனவே நாம் ஏற்றுமதி செய்யும் போது நாட்டிற்கு டொலர் கிடைக்கும். இறக்குமதி செய்யும் போது டொலர் நாட்டிலிருந்து வெளியே கொண்டுச் செல்லப்படும். நாம் ஒரு வருடத்திற்கு தேவையான பொருட்களை உலக சந்தையிலிருந்து இறக்குமதி செய்வதற்கு 2000 கோடி அ.டொலர் தேவை. ஆனால் ஏற்றுமதி செய்வதின் மூலம் 1000 கோடி அ.டொலர்களே கிடைக்கின்றது. எனவே, அமெரிக்க டொலரின் உள்வருகையை விடவெளியேறுகை அதிகமாக உள்ளது. எந்த ஒரு பொருளும் தேவைப்படும் அளவை விட குறைவான அளவில் கிடைக்கும் எனில் அதன் விலை அதிகரித்து செல்லும் என்பது எளிமையான பொருளாதார விஞ்ஞானமாகும். தற்போது தேசிக்காய் விளையும் அளவு மிக குறைவாகும். எனவே. தேசிக்காய் ஒரு கிலோவின் விலை 1000 ருபாயாக அதிகரித்துள்ளது. ஆனால் தேசிக்காய் தாராளமாய் கிடைக்கும் காலங்களில் ஒரு கிலோ தேசிக்காயை 50 ரூபாய்க்கு வாங்க முடியும். அது போலவே, நாம் வருமானமாக ஈட்டும் அமெரிக்க டொலர்களை விட அதிகமான அமெரிக்க டொலர்கள் செலவீனமாக வெளியேறும் போது ஒரு அமெரிக்க டொலருக்கு இலங்கை ரூபாயில் செலுத்த வேண்டிய தொகை அதிகரித்து செல்லும். இந்நிலைமைக்கு காரணம் இது வரையிலும் ஆட்சியிலிருந்தவர்கள் உலக சந்தையுடன் போட்டியிட்டு அந்நிய செலவீனங்களை உழைக்கும் வகையில் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்க செய்யாமையும், இலங்கையின் உள்நாட்டு உற்பத்திகளை வீழ்ச்சியடைய செய்தமையும், அந்நிய செலவானியை ஈட்டி தரும் உள்நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தமையுமே ஆகும். 1977ம் ஆண்டு முதல் கடைபிடித்து வரும் திறந்த பொருளாதார கொள்கையின் விளைவே இது. 1977ம் நாம் இறக்குமதிக்காக 72.6 கோடி அமெரிக்க டொலர்களை செய்தோம். அதே நேரம் ஏற்றுமதி மூலம் 76.7 கோடி அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்தது. அதாவது 1977 ஆம் ஆண்டு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் 4.6 கோடி அமெரிக்க டொலர்களை வருமானமாக தேடி, சாதகமான மீதியை கொண்டிருந்தோம். ஆனால், 1977 இல் திறந்த பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 40 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இறக்குமதிக்காக ஏற்றுமதி வருமானத்தை விட இருமடங்கு அதிகமாக செலவிட்டு பாதகமான வர்த்தக மீதியை கொண்டிருக்கின்றோம். 1977ம் ஆண்டு தேயிலை, இறப்பர், தென்னை ஏற்றுமதி மூலம் பெருமளவு வருமானம் கிடைத்தது. எனினும் கடந்த 40 வருடங்களில் உலக சந்தை பெரும் வளர்ச்சி கண்டிருக்கின்றது. உலக சந்தையில் வருமானம் ஈட்டக் கூடிய வகையிலான தேசிய உற்பத்திகள் நாட்டில் கட்டியெழுப்பப்படவில்லை. 1977 இல் உலக சந்தையில் 0.5 சதவீத இடம் எமக்கிருந்தது. ஆனால் இன்று நாம் வெறும் 0.045 சதவீத இடத்தை தான் தக்க வைத்திருக்கின்றோம். மறுபுறம் திறந்த பொருளாதார கொள்கையை கட்டு பாடு இன்றி அமுல்படுத்தியதால் எமது உள்ளுர் உற் பத்திகள் வீழ்ச்சியடைந்தன. வெளிநாடுகள் பெரும் அளவில், பாரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்திகளை செய்வதால், உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விட குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பன்னாட்டு கம்பனிகள் மூலம் உள்நாட்டில் விற்கப்பட்டன. பன்னா ட்டு கம்பனிகளுக்கு அரசு தொடர்ந்து வரிச்சலுகை களையும் வழங்கி வருகின்றது. இதன் காரணமாகவும், அரசு உள்ளுர் உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவி க்காமையினாலும் உள்ளுர் உற்பத்திகள் தொடர்ந்து வீழ்ச்சி நிலையில் சென்றுக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாகவே இன்று எமக்கு தேவையான சீனியில் 92 சதவீதத்தையும், மிளகாயில் 80 வீதத்தையும். பெரிய வெங்காயத்தில் 82 வீதத்தையும், கடதாசியில் 100 சதவீதத்தையும், ஆடைகளில் 90 வீதத்தையும் இறக்குமதி செய்யும் நிலையில் இருக்கின்றோம். அதே போல் இலங்கைக்கு அதிகளவு டொலர் வருமானத்தை ஈட்டித்தரும் கொழும்பு துறைமுகத்தின் இறங் குதுறைகளும், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் கம்பனிகளும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டன. அதிகளவு வருமானம் ஈட்டும் டெலிகொம் போன்ற அரச நிறுவனங்களும் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டன. இதனால் நாட்டிற்கு கிடைக்கும் டொலர் வருமானம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. எனவே, இந்நிலைமைகளை சரிசெய்ய உள்நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பதை நிறுத்தி தேசிய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும், ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும். மாற்றுக் கொள்கைகளை தெரிவு செய்ய வேண்டும். ஆனால், நம் அரசியல்வாதிகளோ மக்களின் வாக்குகள் மூலம் தெரிவானாலும் வெளிநாட்டு கம்பனிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு தரகர்களாக வேலை செய்து நம் நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலையை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள்.
Read 333 times Last modified on செவ்வாய்க்கிழமை, 10 December 2019 01:30

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction