செவ்வாய்க்கிழமை, 10 December 2019 00:00

Meet our Executive commitee

Written by

{loadccmember 02}ஈரோஸ் - ஈழப்புரட்சி அமைப்பினராகிய நாம் எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை இளையோரை உள்வாங்கி முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் எதிர்காலம் இனி இளையோர்களின் முன்னெடுப்பில் தான் தங்கியுள்ளது.

இளைஞர்களை அமைப்புக்குள் உள்வாங்கி அவர்களிடம் தலைமையை ஒப்படைப்பது காலத்தின் நிர்பந்தம் ஆகும். இதை ஊருக்கு உரக்க சொல்லும் வகையில் டிசம்பர் மாதம் 21,22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் பிராந்திய ரீதியான மாநாடுகளை நடத்த உள்ளோம்.

எனவே, தமிழ் பேசும் இளையோர்களை எதிர்கால அரசியல் தலைமைத்துவத்தை ஏற்க இணைந்திடுமாறு அறைக்கூவல் விடுக்கின்றோம்.

ஆர்வம் கொண்ட இளையோர்கள் கீழே உள்ள இணைய படிவத்தை நிரப்பி உங்களது தரவுகளை பதிவு செய்யுங்கள். நாம் தொடர்பு கொண்டு உரையாடுவோம்.


பெயர்:*
தொலைப்பேசி:*
மின்னஞ்சல்:
மாவட்டம்:
முகவரி:
ஈழவர் சனநாயக முன்னணியின் தலைவரும், ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவருமான லங்காராணி அருளர் என எல்லோராலும் அறியப்படும் ரிச்சர்ட் அருட்பிரகாசம் அவர்கள் 03-12-2019 அன்று இயற்கை எய்தினார். அன்னாரின் பிரிவால் துயரும் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கு ஈழவர் சனநாயக முன்னணி - ஈரோசின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து துயரில் பங்கெடுத்துக் கொள்கின்றோம்.

கடந்த சிலமாதங்களாகவே தோழர் அருளர் உடல் நிலை பாதிப்பால் கட்சி அரசியல் செயல்பாடுகளிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். விரைவில் உடல்நலம் தேறி அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த எமக்குத் தோழர் அருளர் அவர்களின் மறைவு பெரும் ஏமாற்றத்தையும், இடைவெளியையும் ஏற்படுத்தி விட்டிருக்கின்றது.

தமிழர் அரசியல் மாறு காலகட்டமொன்றில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் தோழர் அருளர் போன்ற முன்னோடிகளின் அனுபவமும், ஆலோசனைகளும் எமக்குப் பெரிதும் துணைசெய்யக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. அந்தவகையில் நாம் அரசியல் மாறு காலகட்டத்தின் ஒரு வழிகாட்டியை இழந்து விட்டிருக்கின்றோம். தோழர் அருளர் அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்திருந்தாலும், ஈழப்போராட்ட வரலாற்றில் அவர் பதித்த தடங்களுக்காகவே என்றும் வாழ்வார்.

1970 களின் பிற்பகுதியில் ஈழப்போராட்டத்தில் தோன்றியிருந்த அராஜக போக்கிற்கு முடிவுகட்டி அதற்குக் காத்திரமான இலட்சிய அடித்தளமிட்டு, தேச விடுதலைக்கான போராட்டமாகப் பரிணமிக்க வைக்க வேண்டிய தேவை எழுந்த போது, அந்த பணியை “லங்காராணி” நாவலை எழுதியதன் மூலம் அதிசிறப்பாக செய்திருந்தார் தோழர் அருளர்.

லங்காராணியை அவர் களத்திலிருந்து மலர் வித்திருந்தார். 1977 பேரினவாத வன்செயலில் நடந்து போன நிகழ்ச்சிகளைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, வெகு இயல்பான முறையில், படிப்பவர் மனதைத் தட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி, எண்ணங்களை ஒழுங்குப்படுத்தும் அவரின் எழுத்து யுக்தி பலநூற்றுக்கணக்கானோரை ஈழப்புரட்சியில் பங்கெடுக்க அழைத்து வந்தது. தோழர் அருளர் “லங்காராணி” நூலில் வெளிப்படுத்திய விஞ்ஞானக் கண்ணோட்டம், அந்நூலை ஈரோஸ் அமைப்பின் கொள்கை விளக்க நூலாகவும், ஈழப்புரட்சியின் பொது ஆவணமாகவும் வழிகாட்டி நிற்கிறது. இம்மாபெரும் பணி தோழர் அருளர் அவர்களை ஈழப் போராட்ட வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றவராக வாழச் செய்யும்.

லங்காராணியை படைத்தது போலவே, இதுவரை காலமும் தமிழர் அரசியில் சாத்தியமல்லாது போயிருக்கும் போராடும் அமைப்புகளை ஐக்கிய முன்னணியை தனிப்பெரும் ஆளுமையாக நின்று சில காலத்துக்கேனும் உருவாக்கும் அரும் பணியையும் தோழர் அருளர் அவர்கள் சாதித்திருந்தார். 1982 இல் பல முரண்பாடுகளுக்கும் மத்தியில் தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE), ஈழப்புரட்சி அமைப்பு(EROS), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(EPRLF), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), தமிழீழ விடுதலை இயக்கம்(TELO), தமிழீழ தேசி விடுதலை முன்னணி(NLFT) ஆகிய அமைப்புகளை ஈழ விடுதலைக் குழு எனும் பெயரில் இணைப்புக்குள் கொண்டுவந்திருந்தார்.

இவ்வண்ணமாகத் தோழர் அருளர் ஈழப்போராட்டத்தில் தனி ஆளுமையாகப் பதித்திருக்கும் தடங்கள் அவரை இறவா புகழுடையவராக்கும்.

தோழர் அருளரின் அனுபவமும், ஆளுமையும் மாறு காலகட்ட அரசியல் காலமொன்றில் மிக அரிய மிக அவசியமானதாகும். மிக அவசியமான ஒரு காலகட்டத்தில் தோழர் அருளரை இயற்கை எம்மிடமிருந்து பிரித்திருக்கின்றமை எமது அமைப்புக்கு பெரும் இழப்பாகும்.

தோழர் அருளர் எம்மத்தியில் இல்லாது போயிருந்தாலும் அவர் எமக்காக விட்டுச் சென்றிருக்கும் பதிவுகள் எமக்கு எப்போதும் வழிகாட்டியாக இருக்கும். தோழர் அருளரின் நினைவுகள் எமது செயல்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும்.
ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த சகல இயக்க போராளிகளையும் நினைவு கூரும் நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஈரோஸ் அமைப்பின் தலைவர் தோழர் துசியந்தனின் தலைமையில் இன்று நடைப்பெற்றது.

வவுனியா கனராயன்குளத்திலிருக்கும் ஈரோஸ் அமைப்பின் இன்னுயிர் ஈந்தவர் நினைவு பூங்காவிலேயே இத்தூபி அமைக்கப்படவுள்ளது.

ஈழப்போராட்டக் காலங்களில் சகல போராட்ட இயக்கங்களையும் ஒன்றிணைக்க நாம் பலத்த முயற்சிகளை எடுத்திருந்தோம். எமது முயற்சியின் பலனாக சிறிது காலத்துக்கேனும் ஈழப்போராட்ட இயக்கங்கள், ஈழதேசிய விடுதலை முன்னணி எனும் ஐக்கிய முன்னணியாக ஒன்றுப்பட்டிருந்தன.

கடந்த சில வருடங்களாக எமது இன்னுயிர் ஈந்தவர் நினைவேந்தல் நிகழ்வை சகல இயக்கங்களையும் இணைத்தே நடத்தி வந்துள்ளோம்.

ஈழவர் விமோசனம் எமது ஐக்கிய பட்ட போராட்டதிலேயே தங்கியுள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட நாம், அதற்கு எப்போதும் செயல்வடிவம் கொடுக்கும் பண்பாட்டை வெளிப்படுத்தி வந்துள்ளோம்.

அதற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக சகல இயக்க போராளிகளையும் நினைவு கூறும் தூபி அமைக்கப்படவுள்ளது.

அமைக்கப்படும் தூபியில் இயக்கங்களின் தலைவர்களுடைய உருவங்கள் பொறிக்கப்பட்டு தூபியின் மேல் இன்னுயிர் ஈர்த்தவர்களை நினைவகூருவதற்காக பொதுவான நினைவுச்சின்னமும் அமைக்கப்படும்.

இதற்கான நிதியுதவியை ஈரோஸ் அமைப்பின் மூத்த தோழரான கந்தசாமி (கொமினிஸ் கந்தசாமி என்று அழைக்கப்படும்) அவர்களின் புதல்வர் தோழர் பிரபாகரன் அவர்கள் வழங்கியுள்ளார்.

இன்றைய தினம் நடந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில், மாவீரர்களுக்கு சிறப்பான கார்த்திகை மாதத்தில் உயிர்த்தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகளையும் நினைவு கூறும் தூபியை அமைக்கு பணியை ஆரம்பித்தமை நிறைந்த திருப்தியை தருவதாக ஈரோஸ் தலைவர் தோழர் துசியந்தன் கருத்து வெளியிட்டார். மேலும், தூபி நிர்மான பணிகளை விரைந்து முன்னெடுத்து, அனைத்து இயக்கங்களையும் ஒன்றினைத்து திறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வருட இறுதியில் நடைப்பெறவிருக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது சனாதிபதியை தெரிவு செய்வதற்கான சனாதிபதி தேர்தல் தொடர்பாக ஈரோஸ் அமைப்புக்கும், சிறிலங்கா பொதுஜன முன்னணி;க்கும் இடையில் கலந்துரையாடல் சந்திப்பு ஒன்று கடந்த செப்டம்பர் முதலாம் திகதி நடைப்பெற்றது. ஈரோஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் நகுலேஸ்வரன் தலைமையில் வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள ஈரோஸ் தலைமை பணிமனையில் இச்சந்திப்பு நடைபெற்றது. ஈரோஸ் அமைப்பின் சார்பில் பொதுச் செயலாளர் தலைமையில் எட்டு மாவட்ட குழு உறுப்பினர்கள், இளைஞரணி பொதுக்குழு உறுப்பினர்கள், மத்தியக் குழு உறுப்பினர்கள் என நூறு பேர் கலந்துக் கொண்டிருந்தார்கள். பொதுஜன முன்னணி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திக அனுரத்த, சுசந்த புஞ்சி நிலமே, முன்னாள் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மகிபால ஹேரத், முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எச்.எம்.ரஞ்சித், முன்னாள் பிரதியமைச்சர் சரத் கீர்த்திரட்ன, பசில்; ராசபக்சவின் இணைப்பாளர் தேவபிரிய அபேசிங்க, பொதுஜன முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சுமதிபால ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தார்கள். ஏலவே, ஈரோசும் பொதுஜன முன்னணியும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள நிலையில், ஈரோஸ் தலைவர் துசியந்தன் அவர்கள், பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராசபக்சவிடம் விடுத்தக் கோரிக்கைக்க அமைய குறித்த கலந்துரையாடல் சந்திப்பு நடைபெற்றது. தென்னிலங்கை கட்சிகள் தமிழ் கட்சிகளின் பிரமுகர்களை சந்திப்பது வழக்கமான விடயம் எனினும், கொழும்பு அரசியலில் பிரதான இடத்தை வகிக்கும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், தமிழர் தரப்பு கட்சியின் தலைமை பணிமனைக்கே வந்து கலந்துரையாடல் நடத்தியது மிக முக்கிய அம்சமாகும். இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய பொதுஜன முன்னணியின் பிரமுகர்கள் சந்திப்பு கூட்டத்தை தேர்தல் பிரச்சார கூட்டம் போல் நடத்த விளைந்தாலும், ஈரோஸ் அமைப்பாளர்கள் குறுக்கீடு செய்து, அரசியல் கலந்துரையாடலாக கொண்டு செல்ல வேண்டும் என முன்மொழிந்தார்கள். இதை ஏற்றுக் கொண்ட பொதுஜன முன்னணி பிரமுகர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், ஈரோஸ் அமைப்hளர்கள் முன்வைத்த பல கேள்விகளுக்கும், கருத்துக்களுக்கும் திறந்த மனதுடன் பதிலுரைத்திருந்தார்கள். இதன் போது, வலிந்து காணாமல் போனோர், அரசியல் கைதிகள் விவகாரம், சிங்கள குடியேற்றங்கள், காணி அபகரிப்பு, பலாத்காரமாக விகாரைகள் அமைத்தல், தொல்பொருள் திணைக்களத்தின் அடாவடி நடவடிக்கைகள், அரச திணைக்களங்களில் பிரதேச மக்களுக்கு வேலை முன்னுரிமை இன்மை போன்ற சமகால பிரச்சினைகள் தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. மேலும், பல தசாப்தங்களாக நீண்டு செல்லும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பற்கான முயற்சிகள் குறித்து கதைக்கப்பட்டாலும், தீர்வைக் அடைவதற்கான சூழலை உருவாக்குவதில் அக்கறை செலுத்தபடவில்லை. எனவே, முதலில் தீர்வை தேடும் கட்டத்தை அடைவதற்கான சூழலை உருவாக்கும் வகையில் அரசியல் தெளிவுபடுத்தல்களும், நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என கலந்துரையாடலில் கருத்து வெளியிடப்பட்டது. இதற்கமைய வடகிழக்கு பகுதியில் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வண்ணம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை பொதுஜன முன்னணி பிரமுகர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அதே போல் தென்னிலங்கையிலிருந்து பிரமுகர்கள் தமிழ் பிரதேசங்களில் ந்ல்லிணக்கம் குறித்து கதைத்தாலும், தமிழ் இளைஞர்கள் தென்பகுதிக்கு சென்று தமிழ் தரப்பின் போராட்டம், அரசியல் அபிலாசைகள் குறித்து தெளிவுபடுத்வோ, கலந்துரையாடவோ வாய்பிருக்கவில்லை. எனவே, அந்த கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வழி செய்ய வேண்டும் என ஈரோஸ் தரப்பால் கருத்து முன்வைக்கப்பட்டது. இதை ஏகமனதாக வரவேற்ற பொதுஜன முன்னணி பிரமுகர்கள் உடனடியாக இவ்வகையான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவும், அதற்கு தடை போட நினைப்பவர்களை எதிர்த்து தாம் நடத்தவதாகவும் உறுதி அளித்தார்கள். அத்துடன் விரைவில் இதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும், மேலதிக விடயங்களை கலந்துரையாட தலைவர்கள் மட்ட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்வதாகவும் தீர்மானிக்கபட்டது. இந்த வகையில், இனப்பிரச்சினை தொடர்பான இரு சமூக மட்;ட இளைஞர்களிடையே கலந்துரையாடலுக்கு ஆரம்ப புள்ளி இட்டிருக்கும் இந்த சந்திப்பானது முன்னேற்ற பாதைக்கு ஆரம்ப புள்ளி இட்டிருக்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கின்றது.
வியாழக்கிழமை, 14 November 2019 00:00

ஈரோசும் சனாதிபதி தேர்தலும்

Written by
1939 ஆகஸ்ட் 23 ஆம் நாள் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஸ்டாலினும், யேர்மனியின் சர்வாதிகார தலைவர் ஹிட்லரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஒப்பந்தத்துக்கு மொலோடாவ் - ரிப்பன்ட்ராப் என்று பெயர். 'நான் உன்னை தாக்க மாட்டேன், நீயும் என்னைத் தாக்காதே" இது தான்ஒப்பந்தத்தின் சாரம்.

உலகமே இந்த ஒப்பந்தத்தை விநோத ஒப்பந்தம் என்றது. ஆம், இதை விநோதமான ஒப்பந்தம் என்று தனியாகச் சொல்ல தேவையில்லை. ஹிட்லரும் - ஸ்டாலினும் கீரியும் பாம்பும் போன்றவர்கள்.

சோவியத் ஒன்றியம் உலகின் முதலாவது உழைக்கும் வர்க்க மக்களின் அரசு. முதலாவது சோசலிச அரசு. அனைத்து மக்களையும், அனைத்து தேசிய இனங்களையும் சமமானவர்களாக கருதிய அரசு. யேர்மனியின் ஹிட்லரோ யேர்மானிய ஆரிய இனத்தவர்களே மனித இனத்தில் மேன்மையானவர்கள், அவர்களுக்கே உலகை ஆளும் தகுதியுண்டு எனப் பிரகடனம் செய்து,தமது பிரதான எதிரிகளாகக் கருதிய யூதர்களைப் படுகொலை செய்து, அயல்நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்த பாசிசவாதி. கம்யூனிஸ்ட்களை மனிதக் குலத்தின் எதிரிகள் எனப் பிரகடனம் செய்து அழித்தொழிக்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்தார் ஹிட்லர்.

முதலாம் உலகப் போரின் பின்னர் கம்யூனிச பேய் வரப்போகி றது என யேர்மானிய மக்களுக்குப் பூச்சாண்டி காட்டி தான் சர் வாதிகார ஆட்சியை நிலைநாட்டினார் ஹிட்லர். ஹிட்லரின் ஆட்சியில் யேர்மனி படைபலத்தைப் பெருக்கியது. அப்போது சோவியத் ஒன்றியமோ தவழும் குழந்தை. அங்கு சோசலிச புரட்சி நடந்து சிறிது காலம் தான். முன்னைய மன்னராட்சியில் சோவியத் ஒன்றியத்தின் ( அப்போது ரசியா) அரச நிதி முழு வதுமாக காலி செய்யப்பட்டிருந்தது. சிறிய செம்படை மாத்தி ரமே இருந்தது. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், சோசலி சத்தை நிலை நாட்டவும் கடுமையாக உழைத்துக் கொண்டிரு ந்தது சோவியத் ஒன்றியம். சோவியத் ஒன்றியத்தின் உழைப் பையும், வளர்ச்சியையும் கண்டு அயல் நாடுகள் பல சோசலிச பாதையைப் பின்பற்றத் தொடங்கின. இது சோசலிச எதிர்ப்பாளர் களுக்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது. சோசலிசம் வளர்கின்றது என்றால் முதலாளித்து வமும், ஏகாதிபத்தியமும் அழிகின்றது என்று தானே அர்த்தம்!

சோவா பேரரசரின் சர்வாதிகார ஆட்சியில் பெரும் படைபலத் தைக் கொண்டிருந்த ஜப்பானும், சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சியிலிருந்த இத்தாலியும் ஹிட்லருடன் கூட்டுச் சேர்ந்தன. போதாக் குறைக்கு பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளும் யேர்மனியுடன் இராணுவ உடன்படிக்கையைச் செய்து கொண்டிருந்தன.

1931 இல் ஜப்பான் நாடு ஆசியாவில் கம்யூனிசம் பரவுகிறது எனக் காரணம் சொல்லி மஞ்சுரியா நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டது. 1937 இல் சீனாவுக்குள் நுழைந்தது ஜப்பான்.

மறுபக்கம் இத்தாலி, கம்யூனிஸ்டுகளிடமிருந்து பாதுகாக்கி ன்றேன் எனக் கூறி எதியோப்பியாவையும், அபிசீனியாவையும் ஆக்கிரமித்துக் கொண்டது. இத்தாலியும், ஜேர்மானியும் கூட்டுச் சேர்ந்து ஸ்பெயின் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டன. 1937 ஆஸ்திரியா நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டார் ஹிட்லர்.

ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு நாடுகளை ஆக்கி ரமித்துக் கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் பொது எதிரி சோவியத் ஒன்றியம். உழைக்கும் மக்களின் தலைமையிலான ஆட்சியில் சோவியத் ஒன்றியம் பிரமாண்ட வளர்ச்சி அடை வதை உலக முதலாளிகள் வெறுப்புடன் பார்த்தார்கள். சோவியத் ஒன்றியத்தைச் சிதைக்கப் புலனாய்வுத் துறையை ஏவி மும்முரமாக வேலை செய்தார்கள். ஆனால், சோவியத் ஒன்றியத்துக்கோ, யுத்தத்துக்குச் செல்வது அப்போது தற் கொலைக்கு ஒப்பான செயல். பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தாலும் சோவியத்தின் செம்படையோ சிறியது. வளங்கள் குறைந்தது. இராணுவத்தை வளர்க்கச் செலவு செய்தால் வளர்ச்சியடைய முடியாது.

ஹிட்லர் எல்லா நாடுகளையும் குறிவைத்தார். அவருக்கு பிரதான சவால் சோவியத் ஒன்றியம். பிரிட்டன். பிரான்ஸ், அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளுக்குச் சோவியத் ஒன்றிய த்தை வீழ்த்தி சோசலிசத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இலக்கு. அவர்களுக்கு யார் குற்றி அரிசி ஆனாலும் பரவாயி ல்லை. ஹிட்லர் ஆபத்தானவர் தான், ஆனால் அவர் அடித்து சோவியத் ஒன்றியம் வீழ்ந்தாலும் சரி.

நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து ஆராய்ந்தார், சோவியத் ஒன்றியத்தின் அதிபர் ஸ்டாலின். யுத்தம் வர போவது உறுதி. ஹிட்லரைத் தனியாகச் சமாளிக்க முடியாது. பிரிட்டன். பிரான்சுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முடியுமாக எனப் பார்த்தார். முடியவில்லை.

சோவியத் மீது யார் கைவைத்தாலும் பதிலடி கொடுக்க தயார் என்று அறிவித்தார். ஆனால், சோவியத்தின் உண்மையான படைபலம் அவருக்குத் தெரியும். முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டை போரில் ஈடுபடுத்த முடியாது. இப்போதைக்கு தேவை உறுதியான முன்னேற்றத்தை அடைவது. படை பலத்தைக் கட்டியெழுப்புவது.

இந்த நிலையில் சோவியத் ஒன்றியம் என்ன செய்யவேண்டும்?

போரில் இறங்க முடியாது. முடிந்தால் ஹிட்லருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஆம், ஸ்டாலின் அதைத் தான் செய்தார். சோவியத்தை எப்போது தாக்கலாம் என்று ஹிட்லரும், யேர்மனி தாக்கினால் எப்படி பதிலடி கொடுக்கலாம் என ஸ்டாலினும் மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனாலும், ஒப்பந்தத்தில் ஒரு உபயோகம் உண்டு. பத்தாண்டு காலத்துக்கு ஒப்பந்தம் நீடிக்கும். ஹிட்லரை நம்ப முடியாது தான். எப்போது வேண்டுமானாலும் ஹிட்லர் எனும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறலாம். ஆனால், ஒரே நம்பிக்கை உடன டியாக ஹிட்லர் சோவியத் மீது போர் தொடுக்க மாட்டார். கொஞ்சம் அவகாசம் கிடைக்கும், அதற்குள் இராணுவத்தை தயார்ப்படுத்தி விடலாம்.

சோவியத்துடன் உடன்படிக்கை செய்து கொண்ட ஹிட்லர், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளுடன் ஏற்படுத்தியி ருந்த இணக்கப்பாடுகளை எல்லாம் கைவிட்டு, கரப்பான் பூச்சி களை நசுக்குவது போல் போலாந்து, டென்மார்க், நோர்வே, ஹாலாந்து, பெல்ஜியம், லக்சம்பேர்க் என நாடுகளை ஆக்கிரமி த்தார். இதெல்லாம் பரவாயில்லை அப்போதையை இராணுவ வல்லரசுகளில் ஒன்றாகவிருந்த பிரான்சு நாட்டையும் புறங்கை யால் மண்கவ்வ செய்து உலக நாடுகளைக் கிலிக் கொள்ள செய்தார் ஹிட்லர்.

இப்படியாக, 1941 ஆம் ஆண்டு, ஜீன் மாதம் 22 ம் திகதி அதி காலை 3 மணிக்கு, ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து சோவியத் ஒன்றியம் மீது போர் தொடுத்தார் ஹிட்லர்.

ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் சோவியத் செம்படை அசுர வளர்ச்சி கண்டது. முப்பதாயிரம் பீரங்கிகள், ஐம்பத்திரெண்டாயிரம் சிறிய ரக பீரங்கிகள். நவீன கவச வாகனங்கள், போர்விமானங்கள், நவீனத் துப்பாக்கிகள் என செம்படை பிரமாண்டமாக வளர்ச்சியடைந்தது.

ஆனால், ஹிட்லரின் படைகளுடன் ஒப்பிடும் போது பலவீன மானது தான். ஹிட்லரிடம் பெரும் நாசக்கார படை இருந்தது. சுண்டைக்காய் நாடு பின்லாந்தையே 6000 பீரங்கிகள், 2800 கனரக டாங்கிகள், 2000 போர்விமானங்கள் கொண்ட 16 இலட்சம் படைவீரர்களை அனுப்பி அடித்தார் ஹிட்லர்.

சோவியத் ஒன்றியத்துக்கு ஆரம்பத்தில் 30 இலட்சம் வீரர்களை அனுப்பினார். கூடவே, 7000 பீரங்கிகள். 3350 டாங்கிகள். 5000 போர்விமானங்கள். போதாக்குறைக்கு ருமானியா, பின்லாந்து, இத்தாலி, ஹங்கேரி, ஸ்பெயின், ஸ்லோவாக்கியா எனப் பூமி யின் கால்வாசி நாடுகளின் படைகளும் சோவியத்துக்கு எதிராக களத்தில் இறக்கப்பட்டன. நினைத்துப் பார்க்கவே முடியாத அச்சுறுத்தல்.

ஆனால், செம்படை எதிர்த்துப் போரிட்டது. 1945 ஆம் ஆண்டு, ஏப்ரல் 30 அன்று செம்படைகள் யேர்மனிக்குள் நுழைந்து, ஹிட்லர் பதுங்கியிருந்த பதுங்குகுழியைச் சுற்றி வளைத்தன. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

உலகமே, சோவியத்தை அண்ணாந்து பார்த்தது. சோவியத் செம்படை இதைச் செய்திருக்காவிட்டால் யேர்மானிய ஆரியர் கள் மட்டுமே உலகை ஆள வேண்டும். மற்றவர்கள் எல்லாம், அவர்களுக்குக் கீழானவர்கள் என உலகை ஆக்கிரமித்து அடிமைப்படுத்த நினைத்த ஹிட்லரின் கையில் உலகம் சிக்கியிருக்கும். சோவியத் ஒன்றியம் மாத்திரம் யேர்மனியிடம் வீழ்ந்திருந்தால், உலகத்தின் தலைவிதியே மாறியிருக்கும்.

ஆனால், இந்த வரலாற்றை மாற்றியது ஸ்hடாலின், ஹிட்லரு டன் செய்து கொண்ட ஒப்பந்தம் தான். இல்லை என்றால், ஹிட் லரின் நாசக்கார படைகள், சிறிய செம்படையைச் சிதைத்து சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்திருக்கும். ஸ்டாலின் சாதுரியமாகச் சிந்தித்து ஹிட்லருடன் செய்து கொண்ட ஒப்பந்தம் தான் சோவியத் ஒன்றியம் தனது படை பலத்தை கட்டியெழுப்பச் சந்தர்ப்பத்தைக் கொடுத்தது.

இத்தனைக்கும் ஸ்டாலின் ஒரு முற்போக்குவாதி. சோசலிச வாதி. உழைக்கும் வர்க்க அரசின் தலைவர். தேசிய இனங் களை வரையறுப்பது தொடர்பாக இவர் வகுத்த கோட்பாடு களை முன்வைத்துத் தான் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஏன் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கும் இவரின் கோட்பாடுகள் தான் வழிகாட்டியாகின.

ஆனால், ஹிட்லரோ சர்வாதிகாரி. பிற்போக்குவாதி. பாசிசவாதி. இலட்சக்கணக்கான யூதர்களைத் தேடித் தேடி கொலை செய்தவர். தீவிர சோசலிச எதிர்ப்புவாதி. சோசலிஸ்டுகளையும் தேடித் தேடி அழித்தார்.

இன்று வரை உலகமே அருவருக்கும் ஹிட்லருடன் , புரட்சிகர தலைவர் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்து கொண்ட போது உலகெங்கும் வாழ்ந்த அறிவுஜீவிகள், முற்போக்காளர்கள், இடதுசாரிகள். சமூக ஜனநாயக வாதிகள் என பலரும் கடுமையாக விமர்சித்தார்கள்.

ஸ்டாலின் உழைக்கும் வர்க்க மக்களுக்கும். சோசலிசத்துக் கும் துரோகம் செய்து விட்டதாகவும், சமதர்மத்துக்கான போரா ட்டத்தைக் காட்டிக் கொடுத்து விட்டதாகவும். சோவியத் ஒன்றியத்தை அவமானப்படுத்தி விட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார்கள்.

அமெரிக்க இடதுசாரிகள் ஸ்டாலின் செய்த காரியத்தால் மக்க ளைச் சந்திக்க முடியாது, அவமானம் எனக் கூறி இடதுசாரிய த்தைக் கைவிட்டு, வலதுசாரிய அரசியலையம் ஏற்காத மத்திம நிலைப்பாட்டைப் பின்பற்றப் போவதாக அறிவித்தார்கள்.

ஆனால். ஈற்றில் ஸ்டாலின் செய்ததே சரி எனப் பலரும் ஏற்றுக் கொண்டார்கள். உணர்ச்சிவயப்பட்டு. வீம்புக்கு எதிர்த்து அழிவதை விட, எம்மை பலமிக்கவர்களாகக் கட்டியெழுப்பும் வாய்ப்பை தரும் சமரசம் சிறந்தது என்ற பாடத்தை கற்றுக் கொண்டாhகள்.

ஸ்டாலினின் ஒப்பந்தத்தை எல்லோரும் தார்மீக ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவுமே விமர்சித்தாhகள். ஆனால். ஸ்டாலின் செய்த ஒப்பந்தம் சோவியத் ஒன்றியத்தின், சோவியத் மக்க ளின் நலனில் அக்கறை கொண்டு அரசியல் ரீதியாகச் சிந்தித்து தீர்க்கதரிசனமாகச் செய்த ஒப்பந்தம்.

இது உலக வரலாறு ஆகும். போராடும் ஒடுக்கப்படும் மக்களு க்கு வரலாறே மிகச் சிறந்த வழிகாட்டியாகும்.

30 வருட ஆயுத போராட்டத்தில் பெரும் இழப்புக்களைச் சந்தி த்து, துவண்டு போயிருக்கும் ஈழச் சமூகத்துக்கும் இந்த வரலாறு இன்று சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வழி காட்டி நிற்கிறது.

2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தேவைக்கு ஏற்ப ஆயுத போராட்டம் முறியடிக்கப்பட்டது. அமெரிக்காவு க்கும் அதன் சகபாடிகளுக்கும், சீனாவுடனான யார் பெரியவர் என நடக்கும் சண்டையில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். குறிப்பாகத் திருகோணமலை துறைமுகம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளம்.

எனவே, அவர்களுக்கு இலங்கைத் தீவில் இரண்டு எதிர் எதிர் தரப்புகள் இருக்கக் கூடாது. இலங்கை தீவில் ஒரே ஒரு அரசு தான் இருக்கவேண்டும். அதுவும் அவர்களின் கையாளாக இருக்க வேண்டும். எனவே, முதலில் பிராந்தியத்தில் வலுமிக்க கடற்படையை வைத்திருந்த, விடுதலைப்புலிகளை அழித்தார்கள். விடுதலைப் புலிகள் அழியும் வரை யுத்தம் நடந்திருக்கும் என்பது தான் உண்மை.

யுத்தத்தின் போது சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டிருந்த சர்வதேச யுத்த விதிமுறைகளையெல்லாம் மீறி சாரை சாரையாகப் பொதுமக்களைக் கொல்வதை எல்லாம், செய்மதிகளின் ஊடாக வெற்றிக் களிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அமெரிக்கச் சகபாடிகள். சொல்லப்போனால், அவர்களும் களத்தில் நின்று மக்கள் கொல்லப்படுவதை தூண்டினார்கள். இறுதி யுத்த காலத்தின் போது சீருடை அணிந்த சீக்கிய ஆர்மி மாமாக்களும், வெள்ளைக்கார ஆர்மி மாமாக்களும் வவுனியா பிரதேச உணவகங்களில் உணவருந்துமளவுக்கு பெருகிப் போயிருந்தார்கள்.

என்ன இருந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் கிராமிய நிலப் பிரபு வம்சங்களின் வாரிசுகளைப் பின்புலமாகக் கொண்ட சிறிலங்கா சுதந்திர கட்சியை நம்பத் தயாரில்லை. அவர்கள் மேற்கத்தைய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட, காலனி ஆட்சிக்கால வரபிரசாதங்களைப் பயன்படுத்தி தனவந்தர்களான நகர்ப்புற அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி போல் நம்பகமானவர்கள் இல்லை.

எனவே, சிறிலங்கா ஆட்சியாளர்கள் அமெரிக்க நலனுக்கு எதிராக ஏதும் செய்தால், அவர்களை வழிக்குக் கொண்டு வரும் உத்தியாகப் போர்க்குற்ற விசாரணையைப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே, போர்க்குற்றங்கள் நடந்ததை அமெரிக்க ஏகாதிபத்தியம் கண்டு கொள்ளவில்லை. உலகெங்கும் இதைத் தான் அவர்கள் செய்திருக்கின்றார்கள்.

போருக்குப் பின்வந்த காலத்தில் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைவர்கள், தம் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளை முன்வைத்து தமது தேசிய அபிலாசைகளை அடையலாம் என நினைத்தாhகள். தேர்தல்களில் எல்லாம் தமிழ் பேசும் மக்களிடம் இந்த நம்பிக்கையைத் தான் விதைத்தார்கள். ஆனால், சீனா பக்கம் சார்ந்த மகிந்த ராசபக்ச அரசை வழிக்கு கொண்டு வரப் போர்க்குற்ற விசாரணைகளைத் தூக்கிப் பிடித்த சர்வதேச சமூகம், தங்களின் சிறந்த அடிவருடியான ரணில் விக்கரமசிங்கா ஆட்சிக்கு வந்தவுடன், போர்க்குற்ற விசாரணை கோப்புகளைக் கிடப்பில் போட்டுவிட்டது.

சர்வதேச சமூகத்தைப் பொருத்தவரை, அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அவர்களின் சகபாடிகளையும் பொருத்தவரை, இலங்கையில் இன்னுமொரு தேசிய விடுதலை போராட்டம் நடக்கக் கூடாது. இலங்கை தீவு முரண்பாடுகள் எதுவும் இல்லாது இறுக்கமாக ஒருமைப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான், அவர்களின் எதிரிகளால் , அதாவது சீனாவால் காலூன்ற முடியாது. எனவே, இதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தின் எஞ்சிய கூறுகளை அழித்து , இனப்பிரச்சினை மழுங்கடிக்க வேண்டும். இல்லையெனில், 1970 களில் இந்தியா, அவர்களுக்கு எதிராக இருந்த சிறிலங்கா அரசை வழிக்குக் கொண்டுவர தமிழ் விடுதலை போராட்ட இயக்கங்களை வளர்த்தது போல் சீனா அரசு போராட்ட இயக்கங்களை வளர்த்து விடக் கூடிய சந்தர்ப்பங்கள் கூட உண்டு.

ஆகவே, இலங்கையில் ஏகாதிபத்திய சார்பு ஆட்சியும் இருக்க வேண்டும், தமிழ் பேசும் மக்கள் முரண்பாடு இல்லாது அந்த ஆட்சியுடன் சங்கமமாகவும் வேண்டும். தமிழ் பேசும் சமூகத்தின் முதலாளித்துவ அதிகார வர்க்கம் ஐக்கிய தேசிய கட்சியுடன் நடத்தும் இணக்க அரசியலில் இந்த இரண்டு விடயங்களும் நிறைவேறும். கடந்து போன 5 வருடங்கள் அதற்கான ஆரம்பமும் ஆதாரமும் ஆகும்.

தமிழர் தரப்பும். ஐதேகவும் சந்தேகமில்லாமல் முதலாளித்துவ கட்சிகள். இவர்களின் இணக்க அரசியலில் தமிழ் சமூகத்தின் வெறும் 2 சதவீதத்துக்கும் குறைவானவர்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரமே தீர்வு கிடைக்கும். இந்த நல்லாட்சியில் சிலருக்கு சொகுசு வீடும், வரப்பிரசாதமும் கிடைத்தது. ஆனால், ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்க தமிழ் பேசும் மக்களுக்கு என்ன கிடைத்தது? கேப்பாபுலவில் 800 நாட்களுக்கு மேலாக மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் பேசும் சமூகத்தைப் பிரித்தாள்வதும், அதிகார வர்க்கத்துக்கு மாத்திரம் சலுகை வழங்கி சமாளித்து விட்டு, அடித்தட்டு மக்களை அழிப்பதுமே ஐக்கிய தேசிய கட்சியினதும், முதலாளி வர்க்கத்தினதும் தந்திரம் என்பதைக் கடந்த காலம் முழுவதும் கண்டிருக்கின்றோம். எனவே, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணங்கி நடத்தும் அரசியல் என்பது தமிழ்ச் சமூகத்தை சவக்குழியில் தள்ளிவிடும் செயலே ஆகும்.

இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்ச் சமூகத்தின் நிலைமைகளையும், இலங்கை அரசியலின் போக்கையும், சர்வதேச நிலைமைகளையும் கருத்திலெடுத்து அரசியல் ரீதியான மிகச் சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வெறும் உணர்ச்சிகளுக்கும், வீர பேச்சுகளுக்கும், மாயைகளுக்கும் அகப்பட்டு தார்மீக முடிவுகளை நாடக் கூடாது. திறந்த ஆய்வுகளுடன் தர்க்கீக கண்ணோட்டத்தில் அரசியல் முடிவுகளையே எடுக்க வேண்டும். அதுவே ஈரோசின் வழிமுறையும் ஆகும்.

குறிப்பாகச் சனாதிபதி தேர்தல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் விடயங்களில் நாம் சரியான முடிவுகளை எடுத்து செயல்படுவது கட்டாயமானதாகும்.

இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கை பொதுசன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசத்துக்கும், ஈழவர் சனநாயக முன்னணி - ஈரோஸ் தலைவர் ச.துசியந்தன் அவர்களுக்கும் இடையில் சனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

2009 க்கு பின்னர் தமிழ் பேசும் மக்கள் பிரதேச ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்தாளப்படுதல் தீவிரமாகியுள்ளது. யுத்தத்தில் பெரும் பொருளாதார வீழ்ச்சியையும், சமூக கட்டுமான சீர்குலைவையும் சந்தித்த தமிழ் மக்கள் அதிலிருந்து மீள முடியாத வண்ணமே உள்ளனர்.

தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய அம்சங்கள் எல்லாம், பௌத்த மதத்தின் பெயராலும், அபிவிருத்தியின் பெயராலும் சூறையாடப்படுகின்றது.

தமிழ் பேசும் மக்களின் ஒரு அங்கமாக இருந்த இசுலாமியர்கள் மத்தியில் மதவாதத்தையும், அரபு பண்பாட்டையும், முசுலிம் தேசியத்தையும் வளர்த்து விட்ட அரசு, இன்று அவர்களைத் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்துக்கு எதிராகப் பயன்படுத்துவதோடு, தமிழ் பேசும் மக்களை மேலாதிக்கம் செய்யும் வகையில், அரசு நிறுவனங்கள் உட்படப் பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த வழி ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. இதற்குக் கைமாறாக முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதரவை பெற்றுக் கொள்கிறது.

சிறந்த எதிர்காலம் குறித்த நம்பிக்கை இழந்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றார்கள். ஏலவே யுத்தத்தால் பெருமளவில் இளைஞர்களை இழந்துள்ளோம். இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலங்களில் எமது சமூகத்தின் இருப்பே கேள்வி குறியாகிவிடும்.

வர்த்தகம், தொழிற்துறைகளில் தமிழர்களின் பங்கு தொடர்ந்து குறைந்து வருகின்றது. கல்வித் துறையிலும் வீழ்ச்சி போக்கே காணப்படுகின்றது. மலையக தமிழர்கள் வேலைக்கு ஏற்ற சம்பளம் கூட கிடைக்காமல் ஒடுக்கப்படுகின்றார்கள்.

இந்த அவலங்களைப் பல பக்கங்களில் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதன் சாரம் என்னவெனில், தமிழ்ச் சமூகத்தின் தேசிய இருப்பு தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதாகும். இந்த நிலையில் யுத்தத்தின் பின் பத்து வருடங்களில் தமிழ் சமூகம் அடைந்த முன்னேற்றங்களை விடச் சறுக்கல்களே அதிகம்.

எனவே, எல்லாவற்றுக்கும் முன்பாக, சமூக உரிமைகளுக்கு முன்பாக, பொலிஸ், காணி அதிகாரங்களுக்கு முன்பாக சமூகம் இருக்க வேண்டும். வாழ வேண்டும். சமூகமொன்றின் உயிர் நாடி பொருளாதாரமும், பண்பாடும் ஆகும்.

சிதைந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தை ஒருமைபடுத்தி அதன் இருப்பை உறுதி செய்ய வேண்டியது நாம் உடனடியாக செய்ய வேண்டியதாகும். சமூக கட்டுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே எமது இருப்பையும், உரிமை போராட்டத்தின் எதிர்காலத்தையும் தக்க வைக்க வழி செய்யும்.

எனில், ஆளும் தரப்புகளுடன் , அதுவும் எம்மால் வெற்றி பெற முடியாத சனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளருடன் உறுதியான ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடுவது அவசியமாகும். யார் சனாதிபதி ஆனாலும், தமிழ்ச் சமூகத்தை அழிக்கும் வேலையைத் தொடரத் தான் போகின்றார்கள்.

ஆனால், அவர்களின் உடனடி எதிரி எதிர் வேட்பாளரின் தரப்பாகத் தான் இருக்கும். எதிர்த்தரப்பை வீழ்த்த அவர்களுக்கு எமது ஒத்துழைப்பு தேவை. அடுத்தது ஏகாதிபத்தியத்தின் நெருக்குவாரங்களையும் சமாளிக்க வேண்டும். அதற்குத் தமிழ் பேசும் மக்களை அரவணைக்கவும் வேண்டும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எமது மக்களின் நலனுக்கும், சமூகத்தின் இருப்புக்கும் தேவையான ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திடுவது மிகவும் புத்தி சாதுரியமான நகர்வாகும்.

இதன் மூலம் எமக்குக் கிடைக்கும் அவகாசத்தையும், அரச தலைவரின் ஒத்துழைப்பையும் பயன்படுத்தி எமது சமூகத்தை மீள்கட்டுமானம் செய்து பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்.

அந்த வகையிலேயே ஈரோஸ் அமைப்பு சனாதிபதி வேட்பாளராகக் கூடியவர்களுடன் ஒப்பந்தமொன்றுக்கு வர முயற்சித்தது. ஐக்கிய தேசியக் கட்சியை பொருத்த வரை அவர்கள் எம்மை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து வேலை செய்யப் பணித்தார்கள். எம்மால் 98 சத வீத மக்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது.

அதே போல் இலங்கை பொதுசன முன்னணி எமது பெரும்பாலான கோரிக்கைகளுக்கு இணங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட முன்வந்தது. அந்தவகையிலேயே மக்களுக்கு அவசியமான பல விடயங்களை வலியுறுத்தி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளோம். இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தக்க சமயத்தில் வெளிப்படுத்தப்படும்.

இந்த ஒப்பந்தம் சனாதிபதி தேர்தலுக்கானது மாத்திரமே ஆகும். பலர் கூறுவது போல் எல்லா தேர்தலுக்கும் ஆனது அல்ல.

இந்த ஒப்பந்தத்தைத் துரோக செயல் போல் சிலர் சொல்லி வருகின்றார்கள். முதலில் நாம் ஈழப்புரட்சி அமைப்பு என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றோம். நாம் எப்போதும் ஒட்டுமொத்த ஈழவர் தொடர்பாகவும் கரிசனை கொள்பவர்கள். வடக்கையும் சைவ , கத்தோலிக்க மேல் தட்டு மக்களை மாத்திரம் கவனத்தில் கொள்பவர்கள் அல்ல.

வடக்கு, கிழக்கு , மலையகம் வாழ் அனைத்து ஈழவர்களையும் அரவணைத்துக் கொண்டவர்கள் நாம். தம்மை அரபுமயமாக்கலில் இருந்தும், முஸ்லிம் மனப்பாங்கிலிருந்தும் விடுவித்து ஈழவராய் இணைந்த இசுலாமியர்களும் ஈழவர்களே. ஏனைய இசுலாமியர்கள் தற்சமயம் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் எமக்கு எதிராக இருந்தாலும், அவர்கள் ஒருநாள் ஈழவராய் எம்முடன் கரம் கோர்க்கப் போகின்றவர்களே.

எனவே, இலங்கை பொதுசன முன்னணியை சேர்ந்தவர்களுக்கு ஈழவர்கள் ஆதரவு கொடுக்கின்றமை இதுவொன்றும் புதிய செயலும் அல்ல.

ஏன், யுத்தத்துக்கு தலைமை தாங்கிய சரத்பொன்சேகாவுக்கும், யுத்தத்தின் இறுதி நாட்களில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தமைத்திரிபாலவுக்கும் தமிழ் மக்கள் பேராதரவு கொடுத்திருக்கின்றார்கள். இவை அரசியல் ரீதியான முடிவுகள்.

நாம் இன்று எடுத்திருக்கும் முடிவும் அரசியல் ரீதியானதே. உள்ளுர், பிராந்திய, சர்வதேச நிலைமைகளை கவனத்தில் எடுத்ததே ஆகும்.

மீண்டுமொரு முறை அமெரிக்கச் சார்பு ஐதேக வை வெற்றிபெறச் செய்தால், போர்க்குற்றம் தொடர்பான கதைகள் மீண்டும் கிடப்பில் போடப்படும்.

சீனசார்பு பொதுசன முன்னணியை வெற்றி பெற செய்தால், அமெரிக்க ஏகாதிபத்தியம் போர்க்குற்ற விடயத்தையும், இனப்பிரச்சினை விடயத்தையும் மீண்டும் கையிலெடுக்கும். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டி தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இது ஒரு பாரிய தீர்க்கமான விடயமாக முன்னரங்குக்கு வரும்.

எனவே, இந்த அழுத்தங்களைச் சமாளிக்க அரசு தமிழ் மக்களை வென்றெடுக்க வேண்டியதும், அரசியல் தீர்வை வழங்க வேண்டியதும், அவர்களின் அபிலாசைகளைத்; தீர்க்க வேண்டியதும் தவிர்க்க முடியாததாகும்.

எனவே, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்கும், சமூகத்துக்கும் அவசியமான ஏராளமான விடயங்களை எம்மால் சாதிக்க முடியும்.

இந்த நிலைமைகளைக் கையிலெடுத்தே நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். ஸ்டாலின் , ஹிட்லருடன் செய்துக் கொண்ட ஒப்பந்தம் உலக மக்களின் தலைவிதியையே மாற்றியது. அதற்கான காரணம்நி லைமைகளை ஆய்தறிந்து அரசியல் ரீதியாக முடிவெடுத்தமையே ஆகும்.

உலகம் இரண்டு வல்லரசுக்களுக்கிடையே அதிகார மோதலொன்றை எதிர்நோக்கி இருக்கும் சூழலில் நாம் அரசியல் ரீதியாகச் சிந்தித்துச் சரியான முடிவை எடுக்க வேண்டும். அதற்கு எமக்கு வரலாறு வழிகாட்டியுள்ளது.

எனவே, வெற்று உணர்ச்சிகளுக்கும், சோற்றுப்பருக்கையை கூட விளைவிக்காத தார்மீக கேள்விகளுக்குள்ளும் அமிழ்ந்து விடாமல், தர்க்க ரீதியாக ஆய்தறிந்து முடிவுக்கு வரவேண்டும்.

எமது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னாலிருக்கும் அரசியல் சாரத்தையும், தர்க்க ரீதியான தந்திரோபாயத்தையும் ஆய்ந்தறிந்து எம்முடன் கரம் கோர்க்க முன்வர வேண்டும்.

அசாத்தியங்களைச் சாதிப்பதும், அதற்காக அச்சமில்லாத முடிவுகளை எடுப்பதும் புரட்சியாளர்களின் பண்பாகும்.
ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த அன்பு தோழர் சுதனின் துணைவியார் காலமானார். போராட்டங்களின் ஒன்றாய் பயணித்த அன்புக்குரியவர்ளின் பிரிவுகள்இ போரினால் பாதிக்கப்பட்டு நிழல் தேடும் மக்களுக்கு விரைந்து பணி செய்ய வேண்டிய அவசியத்தைஇ இதயத்தை துளைத்து உணர்த்துவதாக ஈரோஸ் தலைவர் ச.துசியந்தன் தொிவித்துள்ளார். அவர் துயர் பகிர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அwpக்கையின் முழுமையாக கீழே ... தோழர் சுதனின் துணைவியார் அமரர் மேரிகிறேசின் மறைவுக்கு துயர் பகிர்கின்றோம் எமது அன்புத் தோழர் சுதனின் துணைவியார் மேரிகிறேஸ் (வனிதா) அவர்கள் காலமாகிய செய்தி எம்மை பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தோழர் சுதன் ஈரோஸ் அமைப்பின் தலைவர் தோழர் பாலகுமார் அவர்களின் மெய்பாதுகாப்பாளராக பணி செய்தவர். ஈழப் போராட்டம் கண்ட மிக அற்புதமான தலைவரை பாதுகாத்த பெரும் பணியை விருப்புடனும் அர்பணிப்புடனும் செய்தவர் தோழர் சுதன். தோழர் சுதனின் போராட்ட வாழ்வில் ஓரூயிராக பயணம் செய்தவர் அவரின் துணைவியார். புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் மீது விமானத்தாக்குதல் நடத்தப்பட்ட போது அதிர்ச்சியுற்று மன உளைச்சலுக்குள்ளாகி சுகவீனமுற்ற அமரர் மேரிகிறேஸ் (வனிதா) அவர்கள் அதிலிருந்து மீளாமலேயே மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார். மக்களுக்காக சிந்தித்து, மக்களுக்காகவே வாழ்ந்த சக தோழர்களின் இழப்பு எமக்கு பெரும் வேதனையை தந்து மனதை நிலைக்குலைய செய்துவிடுகின்றது. மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக தன்னை அர்ப்பணித்தவர்கள், அதை காணமலேயே எம்மை விட்டு பிரிவது எம்மை சற்றே சோர்வடைய செய்தாலும், அவர்கள் எமக்காக விட்டுச்சென்றுள்ள அர்த்தம் நிறைந்த நினைவுகள் இலட்சியம் நோக்கி பயணிக்க எமக்கு துணை செய்யும். போரின் பின் நிழல் தேடும் தமிழ் மக்களுக்கு குறிப்பாக போரின் கோரத்தாண்டவத்தால் இன்னலுற்ற வன்னி பிரதேசம் வாழ் மக்களுக்காக விரைந்து பணியாற்றி, ஆற்றுப்படுத்த வேண்டிய அவசியத்தை மேரிகிறேஸ் அவர்களின் மறைவு இதயத்தை துளைத்து உணர்த்தியுள்ளது. அன்பு மனைவியின் பிரிவால் துயருற்றிருக்கும் எமது அன்பு தோழர் சுதனின் கரங்களை இறுகப்பற்றி அவரின் துயரில் ஈரோஸ் - ஈழவர் சனநாயக முன்னணியாக நாமும் பங்கெடுப்பதோடு, இதயத்தின் ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வண்ணம் ச.துசியந்தன் தலைவர் ஈரோஸ் - ஈழவர் சனநாயக முன்னணி
வியாழக்கிழமை, 31 January 2019 00:00

மனித சமுதாயத்தின் அடுத்த கட்டம்?

Written by
பூமியில் மனிதர்கள் தோன்றி இருநூறு இலட்சம் வருடங்கள் ஆகிவிட்டது. காடுகளில் உலாவி திரிந்த ஆதிமனிதன் தொடக்கம் கட்டிடங்களில் அடைந்து கிடக்கும் இன்றைய மனிதன் வரையிலான மனித வரலாறு என்பது மனித சமுதாயத்தின் வாழ்வு குறித்த வரலாறாகவே விரிந்திருக்கின்றது. இன்னும் விரிவாக கூறுவதானால், மனித வாழ்வின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றியதே வரலாறு ஆகும். இந்த வரலாறு முழுவதிலும் மேன்மையான மனித வாழ்வு குறித்த சிந்தனையும் வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது. பலர் மிக சிறந்த மனித சமுதாய வாழ்வை தம் கற்பனையில் உருவாக்கினார்கள். அன்பு, ஒழுக்கம், சமத்துவம், சுதந்திரம், மகிழ்ச்சி நிறைந்த மேன்மை யான மனித வாழ்வு குறித்து பலர் தம் கற்பனையையும் சிந்தனையையும் முன்வைத்திருக்கின்றார்கள். 1500 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த தோமஸ் மோர் எனும் அறிஞர் 'உடோபியா' எனும் நாவல் மூலம் மிகச்சிறந்த மனித வாழ்க்கை நிலவும் புதிய சமூக அமைப்பு தொடர்பான கற்பனை சித்திரத்தை விளக்கமாக முன்வைத்திருந்தார். அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஒரு கற்பனைத்தீவில் நிலவும் சமுதாயம் குறித்து விவவரிக்கும் வகையில் 'உடோபியா" நாவல் அமைந்திருந்தது. இத்தீவில் ஒருவரை ஒருவர் சுரண்டி வாழாது அனைவரும் உழைத்து மகிழ்ச்சியாக வாழ்வது விவரிக்கப்பட்டி ருந்தது. மிக சிறந்த சமூக அமைப்பு குறித்து விளக்க மான திட்டத்தை முன்வைத்த காரணத்தால் இந்நூல் தோமஸ் மோரிற்கு இறவா புகழை தேடி தந்தது. இருந்த போதும், தோமஸ் மோர் உடோபியா கற்பனைக் சமூகத்தை முன்வைப்பதற்கு 1700 வருடங்களுக்கு முன்னதாகவே ஷஉத்தரகுரு| எனும் போகபூமி குறித்த தகவல்கள் நம்; இலக்கியங்களில் காணப்படுகின்றன. இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் காப்பிய நாயகன் வாழும் பூம்புகார் ஊரின் செல்வ வளத்தை விவரிக்கும் போது உத்தரகுருவுக்கு ஒப்பா னதாக குறிப்பிட்டு பின்வருமாரு விவரிக்கின்றார். "அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தரகுருவின் ஒப்பத் தோன்றிய கயமலர்க் கண்ணியும் காதற்கொழுநனும் மயன் வித்தித்தன்ன மணிக்கால் அமளிசை நெடுநிலை மாடத்து இடைநிலத்து இருந்துழி” - சிலப்பதிகாரம்,புகார் காண்டம்(2-10) - பொருள் - வாழ்வில் பெரும் தவம் செய்தவர்கள் அதன் பலனாக உத்தரகுரு எனும் இடத்தில் வசிக்க கடவர். அவ்வாறான உத்தரகுருவுக்கு ஒப்பான பூம்புகாரில் கோவலனும் கண்ணகியும் வாழ்கின்றார்கள். இதன் முன்னைய பாடல் உத்தரகுருவை மேன்மை நிரம்பிய மக்கள் வாழும், செல்வமும் வளமும் மிகை நிரம்பிய மனித வாழ்க்கைக்கு சால சிறந்த இடம் என வர்ணிக்கின்றது. அதே போல், சமயங்களும் மிக மகிழ்ச்சியான வாழ்வு நிலவும் கற்பனை உலகை குறிப்பிடுகின்றன. இந்து சமய மரபில் சொர்க்கம், தேவலோகம் என்றும், கிருஸ் தவ சமயத்தில் விண்ணுலகம், இறையரசு என்றும், இசுலாத்தில் சுவனம் என்றும் கூறப்படுகின்றது. இங்கெல்லாம் மனிதர்கள் பெரும் களிப்புடன், எந்த துயரமும் ஒன்றி மேன்மையான வாழ்வை பெறுவார்கள் என்று கூறப்படுகின்றது. தோமஸ் மோரை போலவே இன்னும் பலரும் சாலச் சிறந்த சமுதாயம் குறித்த சிந்தனைகளை முன்வை த்திருந்தார்கள். பிரஞ்சு புரட்சி காலத்தில் வாழ்;ந்த பிரான்சின் பிரபுகுல வம்சத்தை சேர்ந்த ஹென்ரி-செயின்-சிமோன் எனும் தத்துவியலாளர் விஞ்ஞானிகளாலும், தொழில்துறையா லும், தொழிலதிபர்களாலும் நிர்வகிக்கப்படும், உழைப்பை சமுதாய வாழ்வின் முக்கிய கோட்பாடாக கருதும் சாலச் சிறந்த சமுதாயம் குறித்து போதனைகள் செய்தார். பிரித்தானியாவை சேர்ந்த ரொபர்ட் ஒவன் தொழிற்சாலை உரிமையாளர், உழைப்பு குடியிருப்புகள் மூலம் சமூகத்தை சிறந்ததாக மாற்றியமைக்கும் திட்டத்தை முன்வைத்தார். இதை நடைமுறையில் மெய்ப்பிக்க அமெரி;காவிற்கு சென்று உழைப்பு குடியிருப்பு ஒன்றை நிறுவினார். இங்கு அனைவரு க்கும் பால், நிற, உருவ வேறுபாடுகள் இன்றி சமவுரிமை இருந்தது. சொத்துக்கள் அனைவருக்கும் பொதுவானவை யாக இருந்தன. சமூக உறவுகளில் தோழமை நிறைந் திருந்தது. எனினும் இம்முயற்சியல் பூரண வெற்றி பெற முடியாமையினால், பிற்காலங்களில் தொழிலாளர் இயக்க ங்களில் தன் கருத்துகளை பரப்புவதில் ஈடுப்பட்டார். ருசியாவை சேர்ந்த நிக்கலாய் செர்னீசேய் என்ற சிந்தனையாளர் உழைப்பின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் சமூக அமைப்பை மேம்பட செய்ய முடியும் என்ற கருத்தை முன்வைத்தார். எனினும், இவர்கள் யாரும் இந்த சமுதாய முறை மையை அடையும் பாதையை கண்டுபிடிக்கவில்லை. மதங்கள் வாழ்நாள் முழுவதும் கடவுளை வழிப்பட்டு புண்ணியங்கள் செய்வதின் மூலம் இறப்பின் பின் மேன்மையான உலகிற்கு செல்ல முடியும் என்றன. இம்மதங்கள் அனைத்தும் கூறிய மேன்மையான உலகங்கள் பெண்களை புறக்கணித்து ஆண்களுக் குரியதாகவே கருத்தை முன்வைத்துள்ளன. அனை த்தும் உழைப்பின்றி கிடைக்கும் என்பதின் மூலம் உழைப்பு என்பது அவசியமில்லாதது என்றன. ஆனால் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்த சிந்தனையாளர் கள் பால் பேதமற்றதும், உழைப்பை மையப்படுத்தி யதும், மனித வாழ்க்கை காலத்தில் சாதிக்க வேண் டியதுமான சமூக அமைப்பையே வலியுறுத்தினார்கள். தாமஸ் மோர் உற்பத்தி சாதனங்களின் தனியுடைமை தான் சமூக அநீதியின் அடிப்படை காரணம் என கண்டு, பொதுசொத்துடைமையின் அடிப்படையில் உற்பத்தியை மாற்றி அமைக்க வேண்டும் என்றார். ஹெண்ரி செயின்ட் சிமோன் சுரண்டுபவர்கள், சுரண்டப்படுபவர்களிடையே சமரசத்தை ஏற்படுத்தி தொழிற்துறை வர்க்கத்தை தோற்றுவிப்பது மூலம் புதிய சமூக அமைப்பை உருவாக்கலாம் என்றார். எனினும் இவர்களால் இவர்கள் பிரச்சாரபடுத்திய சால சிறந்த சமூக அமைப்பு முறையை அடையும் சரியான பாதையை கண்டுபிடிக்க இயலாமல் போனது. காரணம் மதங்களும், சிந்தனையாளர்களும் சமுதாய வளர்ச்சியின் நியதிகளை விளங்கியிருக்கவில்லை. புதிய சமுதாயத்தை படைக்க கூடிய சமூக சக்திகள் யார் என்பதையும் கண்டுபிடித்திருக்கவில்லை. மனித குலம் புதிய சமுதாயத்தை நோக்கி செல்லும் நியதியை பொருளாதார ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் ஆதாரப்படுத்த இயலவில்லை. ஆனால், 1800களில் தத்துவ வித்தகன் கார்ல் மார்க்ஸ் வரலாற்றைய பற்றிய பொருண்மை வாத கருத்தை கண்டுபிடித்தது முதல் மனிதகுல வரலாற்றின் இயங்கு விதிகள் என்னவென்று உலகம் அறிந்துக் கொண்டது. புதிய சமுதாயத்தை படைப்பதற்கான பாதையை வகுத்துக் கொண்டது. கார்ல் மார்க்ஸ் மனிதர்கள் அரசியல், விஞ்ஞானம். கலை,மதத்தில் ஈடுபாடு கொள்ளும் முன் முதலில் அவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இருப்பிடமும் வேண்டும் என்ற எளிய உண் மையை எடுத்துரைத்தார். எனவே இந்த தேவையை நிறைவேற்றும் பொருண்மிய நடவடிக்கைகள் தான் சமுதாயத்தின் அனைத்தையும் தீர்மானம் செய்யும் என்பதை நிறுவினார். எனவே வரலாற்றை பொருண் மைவாத அடிப்படையில் ஆராய்ந்து, மனித குலம் அதுவரை அறிந்திராததும் கடந்து வந்திருப்பதுமான வரலாற்றை கண்டுபிடித்து நிகழ்காலத்தை விளக்கி எதிர்காலத்தை தெளிவுபடுத்தினார். அதன் அடிப்படையில் மனித குலம் புராதன கூட்டு சமூக அமைப்பு, அடிமையுடைமை அமைப்பு என நிலப்பிரபுத்துவ அமைப்பிலிருந்து முதலாளித்துவ அமைப்பு முறைக்கு வந்திருக்கும் முன்னேற்ற படி கள் தெளிவாகின. இந்த தொடர்ச்சியான மாற்றத்தி ற்கு காரணமாக உற்பத்தி முறையே அடிப்படை காரணமாக அமைந்தது. இச்சமூக அமைப்புகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் பழைய உற்பத்தி உறவுகளுக்கும் புதிய உற்பத்தி சக்திகளுக்கும் இடையிலான முரண்பாடுகளும் மோதலும் வளர்ந்து சமூக புரட்சி ஒன்றினால் புதிய சமூக அமைப்பை தோற்றுவித்தன. புதிய சமூக அமைப்பிலும் உற்பத்தி சக்திகள் குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தை அடையும் போது புதிய முரண்பாடுகள் தோன்றும். இம்முரண்பாடுகளின் மோதலினால் புதிய சமூக அமைப்பு தோன்றும். புராதான கூட்டுச் சமூக அமைப்பில் உற்பத்தி சக்தி களின் வளர்ச்சியினால் உருவான உற்பத்தி கருவிக ளையும், மிகையான உற்பத்திகளையும் தனி நபர்கள் ஆக்கிரமித்து கொண்டதன் விளைவாக ஆண்டான் அடிமை சமூக அமைப்பு உருவானது, ஆண்டான் அடிமை சமூகத்தில் ஏற்பட்ட விவசாய உற்பத்தி களின் வளர்ச்சி ஆண்டான் - அடிமை உற்பத்தி உறவு களை வீழ்த்தி பிரதான உற்பத்தி சாதனமாக இருந்த நிலத்தையும் உற்பத்தி கருவிகளையும் உடைமை யாக்கி கொண்ட நிலபிரபுக்களையும் உழைப்பாளர் களையும் கொண்ட நிலப்பிரபுத்துவ சமூகத்தை தோற்றுவித்தது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஏற்பட்ட கைத்தொழில் வளர்ச்சி நிலப்பிரபுக்களின் ஆதிகத்தை ஒழித்துக் கட்டி, கைத்தொழில் வளர்ச்சி உருவாக்கி விட்ட முதலாளிகளையும் தொழிலாளர்களையும் கொண்ட நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்பை தோற்றுவித்தது. இதுவே மனித குலம் 200 இலட்சம் வருடங்களாக கடந்திருக்கும் வரலாறாகும். எனினும் இந்த வளர்ச்சி களும் உலகின் எல்லா பாகங்களிலும் ஒரே மாதிரியா னதாகவும், வரிசை கிரமமாகவும் நடந்தேறவில்லை. ஆனால் பொதுவான அம்சத்தை கொண்டிருந்தது. முதலாளித்து அமைப்பில் உற்பத்திசக்திகளின் வள ர்ச்சியும், உழைப்பை சுரண்டுபவர்களுக்கும், சுரண்டுபடு வர்களுக்கும் இடையில் தீவிரமடையும் முரண்பாடுக ளும் ஒரு சமூக புரட்சி மூலம் உற்பத்தி சாதனங்கள் முழுவதையும் முழு உழைக்கும் வர்க்கத்திற்கும் உரிமையாக்க வேண்டிய அவசியத்தை நிபந்தனை யாக்கியிருக்கின்றன. இந்த முரண்பாடுகள் உற்பத்தி சாதனங்கள் முழு சமுதாயத்துக்கும் பொதுவானதாக இருக்கும் பொதுவுடைமை சமுக அமைப்பை தோற்று விக்கும். இதன் முதல் படியே சமதர்ம சமூகமாகும். இவ்வாறு வரலாற்று வளர்ச்சியில் உற்பத்தி முறை நிர்ணயமான காரணியாகவும், வர்க்கங்களும், வர்க் கங்களுக்கிடையிலான முரண்பாடுகளும் இயங்கு சக்தியாகவும் இருப்பதை கண்டுபிடித்து மனித குலத் தின் விமோசன்திற்கான பாதையை காட்டியவர் தத்துவ வித்தகர் கார்ல் மார்க்சே ஆவார். இந்த வரலாற்று இயக்கத்தின் வழியே புதியதான சால சிறந்த சமூக அமைப்பை புரட்சிகர நடவடிக்கை களின் மூலம் படைக்க வேலை செய்பவர்களே புரட்சியாளர்கள் ஆவார்கள். அதற்காக புதிய சமூக அமைப்பின சிற்பிகளாக இருக்க போகும் பாட்டாளி வர்க்கத்தை வர்க்க போராட்டம் நோக்கி அணிதிரட்டு கின்றார்கள். அதற்காக பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி கர கட்சியை அமைத்து அதன் தலைமைத்துவத்தின் கீழ் சகல சமூக அநீதிகளுக்கு எதிராகவும் போராடு கின்றார்கள். இவ்வாறு சமூகத்தை - வரலாற்றை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல சிந்திப்பவர் களே முற்போக்காளர்கள். எனினும் இந்த மனித குலத்தின் வளர்ச்சி பயணம் அதற்கே உரிய தமைகளையும், எதிரிகளையும் எதிர்கொண்டே வெற்றி பெற வேண்டும். மனித சமுதாயத்தின் இந்த வளர்ச்சிக்கு தடைபோடுபவர் கள் யாராக இருக்க முடியும்? அழுகி போய்கொண்டி ருக்கும் முதலாளித்து அமைப்பில் சுகபோகம் அனு பவிப்பவர்கள் மாத்திரமே; தான். ஆனால் இவர்கள் சுரண்டப்படும் மக்களிடையே முன்னேற்றத்துக்கு எதி ரான மனநிலையை உருவாக்கியும், முன்னேற்றம் என்பதை திரித்து கூறியும், அரச நிறுவனங்கள். ஊடகங்கள் மூலம் பாட்டாளி மக்களை மாயையிலும், சமூக புரட்சியில் நம்பிக்கையில்லா மனநிலையிலும் வைத்திருக்கின்றார்கள். எனில் சால சிறந்த சமூகம் காண சித்தம் கொண்டவர்கள். இந்த மாயை அம்பலப்படுத்தவும், பாட்டாளிகளுக்கு வர்க்க உணர்வும், அரசியல் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். அது இனி மனித சமூகம் காண போகும் சமதர்ம சமூக அமைப்பை போதனை செய்வதாலும், அதை அடையும் பாதையை கற்று கொடுப்பதனாலும், முதலாளித்துவத்தின் அநீதிகளை அம்பலப்படுத்தி போராடுவதன் மூலமுமே அது சாத்தியமாகும். எனில், சமதர்மம் என்னறால் என்ன? அங்கே சமூக -பொருளாதார உறவுகளும் நிலைமைகளும் எப்படி அமையும் எனும் கேள்வியிலிருந்தே ஆரம்பமாகும்.
சனிக்கிழமை, 26 January 2019 00:00

கட்டுப்பாடு

Written by
புரட்சிகர இலட்சியம் ஒன்றை நிறைவேற்றும் பொருட்டு புரட்சிகர இயக்கத்தில் செயலாற்றும் செயற்பாட்டாளர்கள், என்றும் அதற்கான பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனதும் செயற்பட வேண்டியது தலையாய கடமையாகும். அடிப்படையிலேயே மக்களை நேசித்து, அந்த மக்கள் படுகின்ற சிரமங்களில் இருந்து அவர்களை விடுவிக்கும் பொறுப்பை எமது தோள்களில் சுமந்து கொண்டிருக்கிறோம் என்பதனை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் மறந்துவிடுதல் ஆகாது. ஆனால் மக்கள் விடுதலைக்காக செயற்படு கின்றோம் என செற்பட்ட இயக்கங்களில் செயலாற்றிய இன்றும் செயலாற்றும் பலர் தம்மை மக்களிலும் பார்க்க மேம்பட்டவர்களாக எண்ணும் போக்கிலே செயற்படுவதைக் காண்கிறோம். குறிப்பாக மக்களின் விடுதலையையே தம் தலையாய குறிக்கோள் என்பதை மகத்துவத்தை மறந்து 'மக்களின் எசமானர்கள் நாமே" என்ற விதமாகச் சிலர் செயற்படுவதை கண்டு, விடுதலையின் மீது உண்மையான ஆர்வமும் அக்கறையும் கொண்ட எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. யார் புரட்சிவாதி? ஒரு சாதாரண நபர் எந்த ஒரு நோக்கத்திற்காகவும் தம்மை விடுதலை இயக்கமொன்றுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்த பின்னர் தனது சொந்த நோக்கங்கள் சுய இச்சைகள் என்பவற்றை மறந்து இயக்கத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் என்பவற்றுடன் பூரணமாகத் தம்மை இணைத்துக் கொள்ளுதல் வேண்டும். புரட்சிகர இயக்கத்தின் கட்டுபாடுகளை தன் உணர்வு பூர்வமாக ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்தல் வேண்டும். நிர்பந்தம் காரணமாவோ அல்லது வெளியிலிருந்து கிடைக்கும் தூண்டுதல் காரணமாகவோ வேண்டா வெறுப்புடன் செயல்படும் நபர்கள் இயக்கத்திற்கு எப்போதும் சுமையாக இருப்பர். எனவே தான் தன்னல மறுப்பு, நேர்மையான அர்பணிப்பு, தளராத மனவுறுதி, திடமான கொள்கைப் பிடிப்பு என்பவற்றைத் தனது குணாம்சங்களாகக் கொண்டு துணிவும், தன்னம்பிக்கையும் மிக்கவனாகத் திகழ்பவனே ஒரு சரியான புரட்சிவாதியாக மாறுதல் முடியும். இதில்லாமல் பொறுமை, தன்னிச்சையான செயற்பாடுகள், கீழ்ப்படியாமை என்பன போன்ற குணாம்சங் களைக் கொண்டு வெறும் ஆயுதப் பிரியர்களாகவும், ஆயுத முனையில் மக்களை அச்சுறுத்தும் மனப்பாங்கு கொண்ட வர்களாகவும் சிலர் செயற்படுவது வேதனைக்கு உரியது. மேலும், மக்களுக்கு மேலானவர்களாகத் தம்மை எண்ணி, மக்களின் எசமானர்கள் போல் நடக்கும் இத்தகையோரது செயற்பாடுகளே அராஜகத்தின் ஆரம்பம் எனலாம். இயக்க வேலைகளில் பொறுப்புணர்வு அற்று இருத்தல், இயக்கத்தின் பொருட்கள், ஆவணங்களைப் பராமரித்தலில் கவனக் குறைவாக நடந்து கொள்ளுதல், விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றாது இருத்தல், இயக்க நலன்களை விட சொந்த நலன்களுக்கு முன்னுரிமை அளித்தல் என்பன போன்ற செயற்பாடுகளே இயக்கத் தோழர்கள் மத்தியில் மனவெறுப்பையும், நம்பிக்கையீனத்தையும் வளர்க்கும் அம்சங்களாகும். இத்தகைய போக்குகளையும் சிந்தனை களையும் உதறித்தள்ளி, விமோசன பாதையில் சரியான திசைவழியில் முன்னேறிச் செல்லுவதே நல்ல புரட்சிவாதி களாக நம்மை மலரவைக்கும். இனி இவை ஒவ்வொன்றை யும் எடுத்துத் தனித்தனியாக இவற்றினால் ஏற்பட்டுவிடக் கூடிய பாதிப்புக்களை விளக்குவது அவசியப்படாது. தோழர் என்பவர்... தோழர் என்ற சொல் வெறுமனே நட்பைக் குறிக்கும் ஒரு சொல் அல்ல. நண்பர், சிநேகிதர், அயலவர், உறவினர் எனப்பல உறவின் முறைச் சொற்கள் எமது மொழியில் பயன்பாட்டில் உள்ள பொழுதிலும் ஒரு இலட்சியத்திற்காய் எம்மை அர்ப்ப ணித்துக் கொண்ட எம்மவரிடையே தோழர் என்னும் சொற்பதமே விரும்பி உபயோகிக்கப்படுகின்றது ஏனெனில், தோழமை என்பதனை அதன் உண்மையான அர்த்தத்தில் உணர்வு பூர்வமாய் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். 'தோழன் என்பவன் தோள் தருவான்" என்றும், 'உயிர்காப்பான் தோழன்' என்றும் நமது பழமொழிகளில் தோழன் என்பது சிறப்பிக்கபடுவது யாவரும் அறிந்ததே. உண்மையாகவே விசேட ஆபத்தான சந்தர்ப்பங்களிலும் கூட சக தோழனின் துயரத்தில் பங்கேற்கும் அதாவது தோள் கொடுக்கும் மனப்பக்குவமும் தோழனைக் காப்பாற்றத் துடிக்கும் திடம்கொண்ட நெஞ்சமும் உறுதியும் கொண்டவர்களே 'தோழர்கள்" என்ற சொல்லுக்கு இலக்கணமாவர். இதில்லாமல் வெறுமனே சகஜமாகப் பழகுவதாலோ, அல்லது இறந்த பின்னர் கண்ணீர் அஞ்சலி வெளியிட்டு, சுவர் நிறைய எழுதுவதாலோ தோழமை மலர்ந்து விடாது. அப்படிச் செய்வது தோழமையும் ஆகிவிடாது. இன்னும் சிலர் தோழமை என்பதனைத் தவறான அர்த்தத்தில் புரிந்து கொண்டோ என்னவோ தோழர்கள் விடுகின்ற தவறுகளை மூடி மறைக்க முற்படுபவோராக உள்ளனர். ஏனைய தோழர்கள் மத்தியில் தவறுகள் சுட்டிக் காட்டப்படுதலை ஒரு காட்டிக் கொடுப்பு போலக் கருதுகின்றனர். இது ஒரு தவறான மனோபாவம் ஆகும். ஒரு முறை சந்தர்ப்பத்தில் விடும் தவறு திருத்தப் படவில்லை என்பதே மீண்டும் மீண்டும் அதே தவறுகளை இழைக்கச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திவிடும். எனவே தான் பொறுப்பான ஒவ்வொரு நடவடிக்கையிலும் வேலைகளைப் பகிர்ந்து கொள்பவனும், அவ்வேலைகளில் உண்மையான ஈடுபாட்டுடன் செயற்படுபவனுமே தோழன் என்னும் சொல்லுக்கு தகுதியானவனாகிறான். மேலும் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் ஆண் - பெண் பேதமின்றித் தோழர்கள் நெருங்கிப் பழகவேண்டிய சந்தர்ப்பங்கள் பல ஏற்படலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் பெண்களை பணி செய்து கிடப்பவர்களாக, போக பொருளாக கருதாது, குறிப்பாகப் பெண் தோழர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களா யும், அச்சமின்றி இயல்பாகப் பழகத் தூண்டுவோராகவும் ஆண் தோழர்கள் இருத்தல் அவசியம். இதை விடுத்து 'சோசலிசம்" என்று கூறிக்கொண்டு தவறாக நடப்பதோ அல்லது பெண்மையை அவமதிக்கும் நோக்குடன் செயலாற்றுவதோ, ஆணாதிக்க குணாம்சத்தின் வெளிப்பாடுகள் ஆகும். மிகுந்த எச்சரிக்கையுடன் இவ்விடயத்தில் நாம் விளங்கவில்லை என்றால் பலவிதமான தவறுகளுக்கும் வித்திட்டவர்களாகி விடுவோம். அதாவது சுருக்கமாகச் சொல்வதானால் இயக்கத் தோழர்களிடையே தோழமை என்கிற உணர்வு பூர்வமான உறவைத் தவிர வேறெந்த பிற்போக்கு உறவு அம்சங்கள் மேலோங்குவதனை அனுமதிப்பது என்பது இயக்க நலன்களுக்குப் புறம்பானதாகிவிடும். உணர்வு பூர்வமாக கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு செயற் படும் புரட்சிகர இயக்கத்தில் உட்பிரச்சினைகள் அதாவது தோழர்களிடையிலான முரண்பாடுகள் மோதல்களாக வெடிக்கும் சாத்தியம் இருக்க முடியாது. அதில்லாமல் வெறும் மிரட்டல்களினாலும், உத்தரவுகளாலும் ஒரு ஒழுங்க மைப்பான புரட்சிகர அணியை நிறுவிப்பாதுகாப்பது என்பது பலத்த சிரமாமானது. ஆகவே மீண்டும் கூறுவதானால் புரட்சிகர இயக்கமொன்றின் ஒவ்வொரு தோழனது பாத்திரமும் வரலாற்றில் மிக முக்கியமானது, அந்த முக்கியமான பாத்திரத்தை ஆற்றக்கூடியவர்களாக அதற்கான பரிபக்வகும் உடையவர்களாக ஒவ்வொருவரும் விளங்க வேண்டும். அப்படிப்பட்ட தோழர்களின் ஒன்று பட்டு செயற்பட்டினால் தான் ஈழத்தின் விடுதலை சாத்தியப்படும் - சமதர்ம சமூக அமைப்பு என்பது நிதர்சனம் ஆகும்.
சனிக்கிழமை, 19 January 2019 00:00

சம்பளம் எனப்படுவது எதை?

Written by
பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள த்தை நிர்ணயம் செய்யும் கூட்டு ஓப்பந்த படக்காட்சிகள் மீண்டும் ஓடிக் கொண்டிருக் கின்றது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை, சோகமும் சிரிப்புமாய் நடந்து கடைசியில் கேலிக்கூத்தாக முடியும் இந்த படப்பிடிப்புக் காட்சியில், தொழிற்சங்கங்களும், கட்சிகளும் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருக்கி ன்றார்கள். இந்த கூட்டு ஒப்பந்த படப்பிடிப்பை அலசுவதும் விமர்சிப்பதும் இப் பந்தியின் நோக்கமல்ல. இவர்களை அம்பலப்படுத் துவதற்கு முன்னதாக, தொழிலாளர்களின் சம்பளம், வாழ்க்கை நிலை என்பவற்றின் விஞ்ஞான அடிப்படைகளை விளங்கி கொள்வது அவசியமாகும். சம்பளம் நிர்ணயிக்கபடுவதன், தொழில் நிலைமைகளின் அடிப்படைகளை, தொழி லாளர்கள் புரிந்துக் கொள்ளும் பட்சத்தில் மாத்திரமே தம் விமோசனத்தை வென்றெ டுக்கும் சரியான திசையில் முன்னெடுப் புக்களில் ஈடுப்பட முடியும். இந்த விடயத்தை முடிந்த வரையில் எளிமை யானதாகவும் , அரசியல் பொருளாதார பாடத் தின் அரிச்சுவடி தெரியாதவர்கள் கூட விளங் கும் வகையில் எளிமையாக அலசுவோமாக. சம்பளம் என்றால் என்ன? நம் தொழிலாளர்களிடம் உங்கள் ~சம்பளம் எவ்வளவு எனக் கேட்டால்? | கொழுந்து பறிக்கும் தொழிலாளி நாளொன்றுக்கு 800 ரூபாய் என்பார். புடவை கடையில் வேலை செய்பவர் நாளொன்றுக்கு 600ரூபா என்பார். துப்பரவு வேலை செய்பவர் 500 ரூபாய் கிடைக்கிறது என்பார். இப்படியாக அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ப , ஒவ்வொரு பதிலை சொல்வார்கள். அதாவது குறித்த அளவான வேலையை செய்வதற்காக இத்தொகையை பெறுவதாக சொல்வார்கள். உதாரணமாக 15 கிலோ தேயிலைக் கொழுந்தை பறிப்பதற் காகவும், 10 மணித்தியாலம் புடவை கடையில் வேலை செய்வதற்காகவும், ஒரு நாளில் அரை ஏக்கர் காணியை துப்பரவு செய்வ தற்காகவும், தத்தமது முதலாளிகளிடமிருந்து இந்த தொகையை பெறுவதாக சொல்வார்கள். இங்கே பதில்கள் பலவிதமாக இருந்தாலும், ஒரு விடயத்தை எல்லோரும் ஒத்துக் கொள் வார்கள். அதாவது குறிப்பிட்ட உழைப்பு நேரத் துக்காக, அல்லது உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் பண்டத்துக்காக, முதலாளி கொடுக்கும் தொகையே சம்பளமாகும். எனவே முதலாளி பணம் கொடுத்து தொழி லாளர்களின் உழைப்பை வாங்குவது போலும், தொழிலாளர்கள் பணத்துக்காக தமது உழை ப்பை விற்பதாகவும் தெரிகிறது. ஆனால். இது வெளித்தோற்றமே அன்றி உண்மையல்ல. நிஜத்தில் தொழிலாளர்கள் பணத்துக்காக தமது உழைப்புச் சக்தியை முதலாளியிடம் விற்கின்றனர். (உழைப்புச் சக்தி எனப்படுவது, மனிதனின் உழைக்கும் திறமை ஆகும். இது. மனிதனின் உடல் சக்தி யினதும் மற்றும் மனம் அல்லது ஆன்;மீகத் திறனினதும் ஒட்டுமொத்தமாகும். மனிதன் தனது உழைப்புச் சக்தியை, உற்பத்தி எனும் நிகழ்வில் பயன்படுத்துகிறான்.) ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் எனும் கால அளவுக்கு, முதலாளி இந்த உழைப்பு சக்தியை விலைக்கு வாங்குகிறார். இவ்வாறு விலைக்கு வாங்கிய பின், தொழிலாளர்களை குறித்த நேரத்திற்கு வேலை செய்யவைப்பதின் மூலம், அதை பயன்படுத்திக் கொள்கிறார். தொழிலாளர்களுடைய உழைப்பு சக்தியை முதலாளி, எவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிறாரோ, அதே தொகை பணத்திற்கு வேறு பொருட்களின் குறிப்பிட்ட ஒர் அளவை வாங்கலாம். உதாரணமாக, முதலாளி ஒருவர் தேயிலை கொழுந்து பறிப்பதற்காக. தொழிலாளி ஒருவரின் உழைப்பு சக்தியை எட்டு மணித்தி யாலங்களுக்கு, 800 ரூபா கொடுத்து வாங்கு கிறார் என்போம். அதே 800 ருபாய் பணத்திற்கு எட்டு கிலோ அரிசி வாங்க முடியும் அல்லது எட்டு இறாத்தல் பாண் வாங்க முடியும். இங்கு குறிப்பிட்ட அளவு அரிசி அல்லது பாண் வாங்குவதற்காக கொடுக்கப்படும் பணம் அப் பொருட்களின் விலை ஆகும். அதே போல் எட்டு மணி நேர உபயோகத்திற் காக, உழைப்பு சக்தியை வாங்க கொடுக்கப் பட்ட தொகையானது, எட்டு மணி நேர உழைப் புக்குரிய விலையாகும். ஆகவே, இங்கு உழைப்புச் சக்தியும், அரிசி, பாண் போன்று ஒரு பரிவர்த்தனை பண்டமாகி றது. உழைப்புச்சக்தி கடிகாரத்தை கொண் டும். அரிசியும், பாணும் தராசைக் கொண்டும் அளக்கப்படுகின்றது. தொழிலாளர்கள் தம்மிடமுள்ள பண்டமாகிய உழைப்பு சக்தியை முதலாளியிடமுள்ள பண்டமாகிய பணத்துக்காகப் பரிவர்த்தனை செய்துக் கொள்கிறார்கள். இந்த பரிவர்த்தனை குறிப்பிட்ட ஒரு வடிவத்தில் நடந்தேறுகிறது. இவ்வளவு நேரம் உழைப்ப சக்தியை உபயோகித்துக் கொள்வதற்காக இவ்வளவு பணம். எட்டு மணி நேர கொழுந்து பறிப்புக்காக 800 ரூபாய் கொடுக்கப்படுகிறது. இங்கு 800 ரூபாய் என்பது, அத்தொகைக்கு வாங்க கூடிய எல்லா பண்டங்களையும் குறிக்கும். ஆகவே, உண்மையில் தொழிலாளி தமது பண்டமாகிய உழைப்புச் சக்தியை எல்லா வகையான பிற பண்டங்களுக்காகவும் பரிவர் த்தனை செய்துக் கொள்கிறார். அதாவது முத லாளி கொடுக்கும் 800ரூபாய் மூலம் குறிப் பிட்ட அளவான அரிசி, பருப்பு, சவர்க்காரம் போன்ற பண்டங்களை வாங்கி கொள்ள முடியம். பணம் பரிமாற்று ஊடகமாக இருக்கிறது. இந்த பணம் இலங்கையில் ரூபாய் என்றும், அமெரிக்காவில் டொலர் என்றும், இங்கிலாந் தில் பவுன் என்றும் பெயரிடப்பட்டிருக்கின்றது. பணம் பரிமாற்று ஊடகமாக புழக்கத்திற்கு வரும் முன் பண்டங்களுடன் பண்டங்களே பரிமாற்றப்படும் பண்டமாற்று முறைநிலவியது. எனவே இங்கு 800 ரூபா எனப்படுவது பிற பண்டங்களுக்காக உழைப்புச்சக்தி பரிவர்த் தனை செய்துக்கொள்ளப்படும் விகிதத்தை குறிக்கிறது. அதாவது தொழிலாளியின் உழை ப்புச் சக்தியின் பரிவர்த்தனை மதிப்பைக் குறிக்கிறது. ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பை பணமாக கணித்து கூறுவோமாயின், அதுவே அப்பண்டத்தின் விலை எனப்படும். ஆகவே. சம்பளம் அல்லது கூலி எனப்படுவது உழைப்புச்சக்தியி;ன் விலையை குறிக்கும் ஒரு தனிப்பெயர் மாத்திரமே. இது உழைப்பின் விலை ஆகும். உழைப்புச்சக்தி எனும் இப் பண்டம் மனித தசையிலும் இரத்தத்திலும் மாத்திரமே குடிக்கொண்டிருக்கும் விசேடமா னதாகும். இவ் விசேட வகை பண்டத்தின் விலையே கூலி அல்லது சம்பளம் ஆகும். தேயிலை தொழிற்சாலை ஒன்றில் வேலைச் செய்யும் தொழிலாளி ஒருவரை எடுத்துக் கொள்வோம். இவர் நாளொன்றில் முதலாளி யின் இயந்திரங்கள் மூலம் 15 கிலோ தேயிலையை உற்பத்தி செய்கின்றார் எனக் கொள்வோம். (பெருந்தோட்டத் துறையில் முதலாளிகள், - தனிநபர் அல்லது சிறு குழு - ஆன கம்பனி உரிமையாளர்களே) முதலாளி இந்த தேயிலையின் உரிமையா ளராகி 2000 ரூபாய்களுக்கு விற்பதாய் கொள்வோம். இங்கு தொழிலாளிக்கு கிடை க்கும் 800 ரூபாய் சம்பளம், அவருடைய உழைப்பின் உற்பத்தி பொருளின் ஒரு பங்கையா குறிக்கிறது. எந்த வகையிலும் இல்லை. உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை விற்பனை செய்யப்படுவதற்கு முன்பே, ஏன் அது உற்பத்தி செய்யப்படுவதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. இவ்வாறே, பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2 வருடங்களுக்கு பெறவேண்டிய சம்பளம் ஓப்பந்தம் மூலம் தீர்மானிக்கப்படுகின்றது. ஆகவே, முதலாளி தேயிலையை விற்பதால் கிடைக்கபோகும் பணத்திலிருந்து சம்பளம் தரவில்லை. ஏற்கனவே தம் கையிருப்பில் உள்ள பணத்தைக் கொண்டே சம்பளம் கொடுக்கிறார். முதலாளியால் தேயிலைத்தூளை விற்பனை செய்ய முடியாமலும் போகலாம். அல்லது விற்பனையின் மூலம் தொழிலாளிக்கு கொடுத்த சம்பளத் தொகையை கூட பெற முடியாமல் போகலாம். அல்லது மிகச்சாத்தி யமானதான, அதிக இலாபத்துடன் விற்பனை யும் செய்யலாம். இவற்றுக்கும் தொழிலாளி க்கும் சம்பந்தமே இல்லை. முதலாளி தம்மிடமுள்ள செல்வத்தின், அதாவது தமது மூலதனத்தின் ஒரு பகுதியை கொண்டு தொழிலாளியின் உழைப்புச் சக்தியைக் வாங்குகிறார். இயந்திரங்களையும், மூலப்பொருட்களை தரும் நிலத்தையும் எப்படி அவர் தம்மிடமுள்ள செல்வத்தின் பிறிதொரு பகுதியைக் கொண்டு வாங்கினாரோ, அதே போல் தான் தொழிலாளியின் உழைப்புச் சக்தியையும் வாங்;குகிறார். இவ்வாறு யாவற்றையும் வாங்கிய பின், தமக்குச் சொந்தமான உழைப்புக் கருவிக ளையும்;, மூலப்பொருட்களையும் கொண்;டு உற்பத்தியில் ஈடுப்படுகின்றார். இங்கே உழைப்புக் கருவிகளுடன் நம் தொழிலாளியும் ஒரு உழைப்புக் கருவியாய் உள்ளடங்கி விடுகின்றார். எப்படி தேயிலை இலையை அரைக்கும் இயந்திரமும், இலையை உலர்த்தும் இயந்திரமும் உற்பத்தி செய்யப்படும் தேயிலைiயிலோ, தேயிலைக்கு கிடைக்கும் விலையிலோ பங்கு ஏதும் கிடைப்பதில்லையோ, அதே போல் தொழிலாளி க்கும் பங்கு ஏதும் கிடைப்பதில்லை. ஆகவே, சம்பளமானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் தொழிலாளிக்குரிய பங்கு அல்ல. முதலாளி தன்னிடமிருக்கும் பணத்தில், உற்பத்தி திறனுள்ள உழைப்புச் சக்தியை வாங்குவதற்காக கொடுக்கும் தொகையே சம்பளமாகும். உழைப்புச்சக்தியானது என்பது இவ்விதம் அதன் உடைமை யாளராகிய தொழிலாளியால், மூலதனத்துக்கு விற்பனை செய்யப்படும் பண்டமாகி விடுகிறது. ஏன் அவர் இதை விற்பனை செய்கிறார்?. உயிர் வாழ்வதற்காக! உயிர் வாழ்வத ற்கு தேவையான சாதனங்களை பெறுவதற்காக. ஆனால், உழைப்பு சக்தியின் பிரயோகம், அதாவது உழைப்பு, தொழிலாளியின் உயிர்ச் செயற்படாகும், அவருடைய வாழ்வின் புலப்பாடாகும். வாழ்க்கைக்கு தேவையான சாதனங்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவர் இந்த உயிர்ச் செயற்பாட்டை வேறொருவருக்கு விற்கிறார். அவரின் உயிர்த் தொழிற்பாடு அவருக்குத் உயிர் வாழ்வதற்கு வகை செய்யும் ஒரு சாதனமாகிறது. உயிர் வாழும் பொருட்டு வேலை செய்கிறார். உழைப்பை அவர் தம் வாழ்வின் ஒரு பகுதியாக கூட கருத முடிவதில்லை, வாழ்வின் தியாகமாகவே கருத வேண்டியுள்ளது. தொடர்ந்;து உழைப்பு என்பது வேறொருவருக்கு மாற்றிக் கொடுத்து விட்ட பரிவர்த்தனை பண்டமாகும். எனவே அவரின் உயிர்த்தொழிற்பாடான உழைப்பின் விளைவான உற்பத்தி பொருள் அவரின் நோக்கமாக இல்லை. அவரின் நோக்கம் சம்பளம் மாத்திரமே. அநேகமாக பகல் பொழுது முழுவதும் உழைப்பில் ஈடுப்படுவதை அவரின் வாழ்வின் புலப்பாடாக கருதுகிறாரா? இல்லை!!! மாறாக இந்தப் பகல் பொழுது உழைப்பின் பின்னர் தான் அவரின் வாழ்வு ஆரம்பமாகிறது. இந்த வாழ்வு சாப்பாட்டு மேசையில். தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக, மதுபான சாலையில், படுக்கையறையில் ஆரம்பமாகிறது. அதற்கு முந்திய உழைப்பானது, வேலைகளின் வடிவில் அவருக்கு அர்த்தமற்றவை. அவரின் சாப்பாட்டு மேசையில். தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பாக, மதுபான சாலையில், படுக்கையறையில் ஆரம்பமாகும் வாழ்வுக்கு அழைத்து செல்லும் சம்பளத்தை தருவது என்ற வகையில் மாத்திரமே அர்த்தமுடையதாகின்றது. எப்படியெனில், ஒரு பட்டுப் புழுவானது, தொடர்ந்து பட்டுப்புழுவாக வாழ்வதற்காக தொடர்ந்து நூற்றுக் கொண்டிருக்குமாயின். அது முழு கூலித் தொழிலாளி ஆகிவிடும். ஆனால், உழைப்புச்சக்தி எப்போதும் இப்படி பரிவர்த்தனை பண்டமாக இருந்ததில்லை. மனித வரலாற்றில் அது முழுமையாக மனிதனின் உயிர்ச் செயற்பாடாகவும், மனிதனுக்கு முழு அர்த்தப்பாடுடையதாகவும் இருந்தது. இந்த வரலாற்றை தொடர்ந்து வரும் இதழ்களில் பார்க்கலாம். எனவே நாம் இங்கு எடுத்துக் காட்டியவாறு சம்பளம் என்பது உழைப்புச் சக்தியின் விலை ஆகும். இந்த விலையை நிர்ணயம் செய்ய தொழிலாளிகள் - முதலாளிகள் செய்துக் கொள்ளும் ஒப்பந்தமே கூட்டு ஒப்பந்தம் ஆகும். முதலாளியானவர் தனது மூலதனத்தின் ஒரு பகுதியைக் கொண்டு உழைப்புச் சக்தியை வாங்காமல் எந்த பொருளையும் உற்பத்தி செய்து விட முடியாது. இவ் அத்தியாவசியமே, தொழிலாளர்களுக்கு பேரம் பேசும் சக்தியை தருகிறது. வாழ்வாதரத்திற்காக, உழைப்புச் சக்தியை விற்பதை தவிர வேறு வழியில்லாத தொழிலா ளர்கள் , ஒருசங்கமாக இணைவது மூலம் தம் சக்தியை ஒன்று திரட்டி முதலாளிகளுடன் பேரம் பேசலில் ஈடுப்பட்டு வாழ்க்கை நடத்த தேவையான பணத்தை, தம் உழைப்புச் சக்திக்கான விலையாக பெற வேண்டும். இதற்கும் தேயிலை வியாபாரத்தின் இலாப நட்டத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. முதலாளி இணங்காத பட்சத்தில், அவர் தேயிலையை தயாரிக்க அத்தியாவசியமான உழைப்புச் சக்தியை குறைந்த விலைக்கு தரமறுக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதே தொழிலாளர்களுக்கு இருக்கும் ஒரே வழி. எனவே, தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக ஒன்றிணைந்து தம் பலத்தை திடபடுத்த வர்க்க அணியை கட்டியெழுப்ப வேண்டும். ஏனெனில் சரியான வர்க்க கண்ணோட்டதுடன் கட்யெழுப்பப்பட்ட வர்க்க அணியின் மூலம் வழிநடத்தப் படும் தொழிலாளர் அமைப்பினாலேயே தொழிலாளர்களின் உண்மையான கோரிக்கையை முன்வைத்து இலட்சியத்தை வகுத்து போராட முடியும். 
Template Settings

Color

For each color, the params below will give default values
Tomato Green Blue Cyan Pink Purple

Body

Background Color
Text Color

Footer

Select menu
Google Font
Body Font-size
Body Font-family
Direction